முன்னொரு
காலத்தில்
ஒரு வலிமையான அரசர் ஒரு நாட்டினை
ஆட்சி செய்துகொண்டருந்தார்.
அவருக்கு
குழந்தைகள் எதுவும்
இல்லை
,
அவரது
வயதுமுதிர்வு
காரணமாக,
எதிர்காலத்தில்
தன்னுடைய நாட்டில் தனக்கு
பிறகு அரசாளுவதற்கான
வாரிசு யாரும்
இல்லையே என
மிக
அதிக
கவலையடைந்தார்.
எனவே,
அவர்
தனது நாட்டின்
ஆட்சிபொறுப்பை
ஒரு தகுதிவாய்ந்த இளைஞரிடம்
ஒப்படைக்க முடிவு செய்தார்.
அதற்காக தன்னுடைய நாட்டை ஆட்சி செய்வதற்கான வருங்கால வாரிசைத் தேர்ந்தெடுப்பதற்கான தகுதித் தேர்வை அவர் நடத்தினார். அந்த தேர்விற்காக, அருமையான அரண்மனை ஒன்று கட்டப்பட்டது . அந்த அரண்மனையின் கதவில் ஒரு புதிர் எழுதப்பட்டது. தன்னுடைய நாட்டில் வாழும் இளைஞர்களுள் யாராவது ஒருவர் அந்த புதிரை தீர்வு செய்து அரண்மனையின் கதவைத் திறந்திடுமாறு அறிவிப்பு ஒன்று அந்த நாடுமுழு வதும் அறிவிக்கப்பட்டது.
அதாவது அரசன் உருவாக்கிய அந்த அரண்மனையின் கதவைத் திறப்பதில் வெற்றி பெறுபவருக்கு அந்த அரண்மனை பரிசாக வழங்கப்படும், மேலும் அவ்வாறு வெற்றி பெறுபவர் தனக்கு பின்னர் அந்த நாட்டை ஆட்சி செய்வதற்கான வாரிசாகவும் அறிவிக்கப்படுவார். என அந்தஅறிவிப்பு இருந்தது
அவ்வாறு அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து,நாடுமுழுவதிலுமிருந்து ஏராளமான இளைஞர்கள் புதிதாகக் கட்டப்பட்ட அந்த அரண்மனைக்கு முன்புறம் வந்து குழுமினர்.
அவ்வாறு அங்கு வந்திருந்த இளைஞர்கள் அனைவரும் காலை முதல் மாலை வரை, அந்த அரண்மனையின் கதவில் எழுதப்பட்ட புதிரை தீர்க்க முயன்றனர் ஆனால் அந்த பதிரை யாராலும் தீர்க்க முடியவில்லை. நாட்கள் பல கழிந்தன. பெரும்பாலான புத்திசாலிஇளைஞர்களால் கூட அந்த புதிருக்கு ஒரு தீர்வைக் கண்டுபிடிக்க முடியவில்லை அதனால் அந்த பணியை கைவிட்டு தங்களுடைய வழக்கமான பணியை செய்திட சென்றுவிட்டனர்.
அதனால் மற்ற நாட்டிலிருந்தும் இளைஞர்கள் அழைக்கப்பட்டனர். பல்வேறு நாடுகளிலிருந்தும் புகழ்பெற்ற , புத்திசாலித்தனமான இளைஞர்கள் பலர் அந்த அரண்மனைக்கு வந்துகொண்டேயிருந்தனர் நாட்கள் செல்லச் செல்ல, அவர்களாலும் அந்த புதிரை தீர்வு செய்யமுடியாமல் ஒவ்வொருவராக வெளியேறினர்.
இறுதியில் மூன்று பேர் மட்டுமே எஞ்சியிருந்தனர். இருவர் மற்ற நாட்டினைச் சேர்ந்தவர்கள் மூன்றாவது நபர் அவ்வரசனுடைய நாட்டிலுள்ள கிராமத்தைச் சேர்ந்த ஒரு எளிய இளைஞன் ஆவார்.
மற்ற நாட்டினைச் சேர்ந்த இளைஞர்கள் இருவரும் அந்த அரண்மனையின் புதிரை தீர்வுசெய்திடும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, அரசனுடைய சொந்த நாட்டின் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் மூலையில் ஓரமாக நின்று அவர்களின் செயலை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார். தன்னுடைய நாட்டு இளைஞன் அவ்வாறு மூலையில் நிற்பதைப் பார்த்த அரசன் அந்த இளைஞனை அழைத்து, "நீ ஏன் அரண்மனையின் புதிரை தீர்க்க முயற்சிக்கவில்லை?" என வினவினார்
அதற்கு அந்த இளைஞர் , "அரசே, நான் இங்கு வருகைபுரியும் பல்வேறு இளைஞர்களும் இந்த புதிய அரண்மனையின் புதிரைஎவ்வாறு தீர்வு செய்கின்றார் கள் என வேடிக்கைப் பார்க்க இங்கு வந்திருக்கிறேன். அவர்கள் ஒரு தீர்வைக் கண்டால் அவர்களில் ஒருவர் இந்த நாட்டினை அரசாளுவதற்கான வாரிசு ஆகிவிடுவார் அல்லவா. அதை விட மகிழ்ச்சிவேறு என்ன இருக்க முடியும்? இருந்த போதிலும் அவர்களால் தீர்வு காண முடியாவிட்டால் நான் முயற்சி செய்து தீர்வுகாண்பேன்." என பதிலளித்த பின்னர் அவ்விளைஞன் திரும்பி சென்று வழக்கமாக மூலையில் ஓரமாக சென்று அமர்ந்தார். வேற்று நாட்டு இளைஞர்கள் இருவரும் . நாள் முழுவதும் புதிரைத் தீர்ப்பதற்கான வழியைக் கண்டுபிடித்து கதவைத் திறக்க முயன்றனர். ஆனால் அவர்களில் யாராலும் அந்தபுதிரை தீர்க்க முடியவில்லை அதனால் கடைசியில் அவர்கள் அந்த பணியை கைவிட்டு திரும்பி செல்ல ஆரம்பித்தனர்.
பிறகு இதைப் பார்த்த கொண்டு , மூலையில் ஓரமாக அமர்ந்திருந்த இளைஞர் மட்டும் அமைதியாக எழுந்து கதவுக்கு அருகில் சென்று அதைத் திறந்தார். என்ன ஆச்சரியம் அரண்மனையின் கதவு எளிதாக திறந்து கொண்டது
அவ்வாறு அந்த இளைஞன் அரண்மனையின் கதவினை திறந்தவுடன். அந்த இளைஞர் மட்டும் எப்படி புதிருக்கு தீர்வு கண்டுபிடித்து அந்த அரண்மனையின் கதவினை திறந்தார் என மிக ஆச்சரியத்துடன் அந்த நாட்டு மக்கள் அனைவரும் அந்த இளைஞரிடம் . அவரால் மட்டும் எவ்வாறு புதிரை தீர்த்து அந்த கதவை திறக்க முடிந்தது என கேட்க ஆரம்பித்தனர்.
அந்த இளைஞன் , "இளைஞர்கள் அனைவரும் அந்த புதிரை தீர்க்க முயற்சித்தபோது, கதவை திறப்பதற்காக எந்த புதிரும் இருக்காது என்ற எண்ணம் என் மனதில் தோன்றியது. அதனால் நான் முதலில் சென்று கதவை மட்டும் கையால் தள்ளினேன். கதவு திறந்தது. அவ்வாறு அரண்மனையின் கதவைத் திறப்பதற்காக புதிர் எதையும் தீர்வுசெய்ய தேவையில்லை என்பதே உண்மை நிலவரமாக. " என மிகஅமைதியாக பதிலளித்தார்
அரசன் அவ்வாறான இளைஞனின் பதிலைக் கேட்டு மிகவும் மகிழ்ச்சியடைந்தார். வாக்குறுதியளித்தபடி அந்த இளைஞனுக்கு அந்த அரண்மனை பரிசாக வழங்கப்பட்டது மேலும் அந்த இளைஞர் அந்த நாட்டினை ஆட்சிசெய்வதற்கான வாரிசாகவும் அறிவிக்கப்பட்டது.
கற்றல்:
வாழ்க்கையில் பல நேரங்களில், நமக்கு முன்னால் ஒரு மலை போன்ற பிரச்சனை இருப்பதை உணரும் நாம் அந்த பிரச்சினைக்கான தீர்வு சிக்கலானதாகவும் கடினமானதாகவும் இருக்கும் என்று தவறாக நினைக்கும் சூழ்நிலையில் நாம் சிக்கிக் கொள்கிறோம். எனவே, அந்த பிரச்சினையை பெரிதாக்குவதன் மூலம் நாம் மேலும் அந்த சிக்கலில் இருந்து வெளியேறுவதற்கான வழியை காண்டுபிடித்திடாமல் சிக்கிக்கொண்டு தவித்து கொண்டு இருக்கிறோம்.
பின்னர் அந்த பிரச்சனை தீர்க்கப்படும்போது தான், அடடா மிகவும் எளிமையானதாக இருக்கின்றதே அதைத் தீர்க்க மிகக் குறைந்த முயற்சி மட்டுமே போதுமானதாக இருக்கின்றதே என்பதை நாம் உணர்கிறோம். எனவே, எந்தவொரு பிரச்சினையையும் தீர்வுசெய்வதற்கு முன் அதனை பற்றி ஒருவர் நிதானமாகச் சிந்தித்துப் பின்னர் பிரச்சினையைத் தீர்வுசெய்திட முயற்சிக்க வேண்டும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக