சனி, 13 நவம்பர், 2021

கழுத்தை நெரிக்கின்ற அளவிலான போட்டியுடைய தற்போதையசூழலில் நம்முடையமனநலனை பராமரித்தல்

தற்போது நாம் அனைவரும் கழுத்தை நெருக்கி ஒடுக்குகின்ற அளவிற்கான போட்டியுடைய சகாப்தத்தில் வாழ்ந்துவருகின்றோம். ஒரு மாணவராக இருந்தால், தேர்வில் கலந்து கொள்வதற்கான போட்டிக்காக தயார் செய்வதில் எப்போதும் பரபரப்பாக இருக்கநேரிடும், ஒரு தொழில்முறை நிபுணராக இருந்தால், தன்னுடைய தொழிலை அல்லது நிறுவனத்தை மேலும் வளர்த்து அதிக வருமானம் சம்பாதிப்பதில் எப்போதும் பரபரப்பாக இருக்கநேரிடும். பணியாளராக இருந்தால் தற்போதைய நவீண வாழ்க்கை வசதிகேளுக்கு ஏற்ற வருமானம் ஈட்டுவதற்காக எப்போதும் பரபரப்பாக இருக்கநேரிடும். என்றவாறான தற்போதைய சூழலில் வாழும் நாமெல்லோரும் மிகவும் பரபரப்பாக மேலும் பொருளீட்டுவதிலேயே நம்முடைய கவணம் முழுவதையும் செலுத்தி இயந்திரம் போன்று இயங்கி கொண்டிருக்கின்றோம்

சக நண்பர்களையும் தோழர்களையும் விட கிடைக்கின்ற அனைத்து வாய்ப்புகளையும் வசதிகளையும் நாமே அடைய விரும்புகிறோம். நம்மில் ஒருவருக்கொருவர் அவைகளை பற்றிய விவரங்களை கூறுவதை கேட்பதற்குகூட யாருக்கும் நேரமில்லாமல் நாம் ஓடிக்கொண்டே இருக்கின்றோம், அதனால் நம் உணர்ச்சிகள் அனைத்தையும் மெதுவாக பின்புறத்திற்கு தள்ளி நாமெல்லோரும் உணர்வற்ற புதியொதரு இயந்திரங்களாக மாறி இயங்கிவருகிறோம்.

இவ்வாறான தற்போதைய சூழலில்மாணவர்கள் ஏதேனும் ஒரு தேர்வில் தோல்வியடையும் போது, அல்லது தொழில்முனைவோர்கள் தங்களுடைய வாடிக்கையாளர்கள் தங்களை விட்டு விலகும்போது, அல்லது நம் அன்புக்குரியவர்களை இழக்கநேரிடும் போது அல்லது உறவில் முறிவு ஏற்படும்போதும் இந்த பரபரப்பான நம்முடைய வாழ்க்கைமுறை என்ன ஆகின்றது?

அவ்வாறான சூழ்நிலையில் நம்முடைய வாழ்க்கையே அதோடு முடிந்து போனதாக முடிவு செய்து கொள்கிறோம். நம்முடைய மனவருத்தத்தை கூறி சாய்ந்து அழுவதற்கு நம்மைச் சுற்றிலும் ஏதேனும் தோள்கள் கிடைக்காத என நாம் தேடுகிறோம், ஆனால் இந்த கண்மூடித்தனமான போட்டியில் நாம் சாய்ந்து அழ வேண்டிய தோள்களை கூட தட்டிவிட்டிட்டு வெகுதூரத்திற்கு நாம் சென்று விட்டதை அதன்பிறகு தான் கண்டு நாம் திகைத்து நின்று விடுகிறோம் என்பதே உண்மை நிலவரமாகும், அதனால் நம்முடைய தனிமையானது நம் மனதை ஆழ்ந்த மனவருத்தத்திற்குள் மூழ்கடித்து கடுமையான மன அழுத்தத்திற்கு நம்மை தள்ளிவிடுகின்றது.

உண்மையில் நாம் நமக்கு அத்தியாவசியமாக தேவையானவற்றை மிகச்சாதாரணமாக எடுத்துக்கொள்கிறோம், ஆனால் எப்போதும் தற்காலிகமான மகிழ்ச்சியை தருகின்ற செயல்களைதேடி ஓடிக்கொண்டே யிருக்கிறோம். இதன்வாயிலாக நாமே நம்முடைய வாழ்க்கையை சிக்கலாக்குகிறோம், பின்னர் நாம் அவ்வாறான சூழ்நிலைகளை சபிக்கிறோம்

இவ்வாறான பிரச்சனை நம் சிந்தனையில்தான் இருக்கிறது, நம் சூழ்நிலைகளில் அன்று என்பதை காணமறுக்கின்றோம்.

தினமும் தற்கொலை , மாரடைப்பு போன்ற பலசெய்திகள் வந்து கொண்டேஉள்ளன. ஏனெனில் நாம் நமது மன நலனில் கவனம் செலுத்து வதில்லை அல்லது அவசியமில்லாத வைகளில் மட்டும் அதிக ஈடுபாடு காண்பிக்கின்றோம்.

நாம் தினமும் காலையில் 30 நிமிடங்கள் மனநலனிற்காக மனதினை ஒருமுகபடுத்தி அமைதியாக யோகா செய்திடவேண்டும் என முடிவுசெய்து செயற்படுத்திட துவங்கிடும்போது. திடீரென்று அன்று நாம் முடிக்க வேண்டிய சில பணிகள் இருப்பதால். அமைதியாக யோகாசெய்வது அவ்வளவு முக்கிய மன்று, முடிக்கவேண்டிய பணிதான் முக்கியம் என நாம் நினைப்பதால், அவ்வாறான அருமையான நேரத்தினை அன்றைய முடிக்க வேண்டிய பணிக்கு திருப்பிடு கின்றோம் இது நம்முடைய மனநலனை பாதிப்பதில் முதல் காரணியாக திகழ்கின்றது.

அடுத்து , நம்முடைய அன்புக்குரியவர்களுடன் கலந்துரையாடுவதற்காக நம்முடைய நேரத்தை செலவழிக்க விரும்புகின்ற சூழ்நிலையில், திடீரென்று ஒரு வாடிக்கையாளர் நம்மை அழைத்து அவருடைய கோரிக்கையை உடன் முடிக்குமாறு நம்மிடம் கோருகிறார்.அதனை தொடர்ந்து நம்முடைய அன்புக்குரியவர் களுடன் நேரத்தை செலவிடுவதை விட நமக்கு பணம்தான் முக்கியம் என்பதால் நாம் அந்த நேரத்தினை வாடிக்கையாளரின் கோரிக்கையை நிறைவேற்று வதற்கு திருப்பிவிடுகின்றோம்.ஆயினும் வெகுவிரைவில் நம்மிடம் பணம் வந்து சேர்ந்துவிடும் ஆனால் அவ்வாறு ஏராளமாக நம்மிடம் பணம் இருக்கும் போது நம்முடைய அன்புக்குரிய வர்கள் யாரும் இருக்க மாட்டார்கள் . இந்நிலையில் நாம் அந்த சூழ் நிலையை சபிப்போம் ஆனால் நாம் தான் பணத்தை விரும்பி நம்முடைய அன்புக்குரியவர்களுடன் நேரத்தினை செலவிடாது விட்டுவிட்டோம் என்பதை உணர மறுக்கின்றோம்.

போட்டியுடைய இவ்வுலகில் நமக்கு வெற்றி அல்லது பணம் எவ்வளவு முக்கியமோ அதே போன்று நமது மன நலனும் உறவுகளுடனான கலந்துரையாடுவதற்காக நம்முடைய நேரத்தை செலவிடுவதும் நமக்கு முக்கியமாகும். ஒரு மனிதன் ஒரு உணர்ச்சியற்ற இயந்திரமன்று. நம் அன்புக்குரியவர்களுடன் சரியாக நேரத்தை செலவிடுவது நம்முடைய வாழ்க்கையை மேம்படுத்துவதற்கான அடிப்படையாகும்

நாமும் மனஅமைதியுடன் இல்லாமல்.எப்போதும் நம்முடைய உணர்ச்சிகளுடன் தொடர்ந்து எதிர்த்து சண்டையிட்டுகொண்டே இருக்கின்றோம்.தற்போதைய நமது சமூகமும் நமது மன ஆரோக்கியத் திற்கு முன்னுரிமை கொடுப்பதில்லை. இந்நிலையில் நம்முடைய மனநலனைப் பற்றி மற்றவர்களுக்குத் தெரிவிப்பது நல்லது அதைவிட உளவியலாளரின் உதவியைப் பெறுவது பரவாயில்லை. நம் மனம் நம் உடலின் ஒரு பகுதியாகும், அதுஎப்போதுவேண்டுமானாலும்சரியில்லாமல் போகலாம்.அதனால் நம்முடைய கனவுகளுக்கும் விருப்பங்களுக்கும் கவனம் செலுத்துவது போன்றே, நம்முடைய மனநலன் மீதும் கவனம் செலுத்திடுக.




கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...