முன்னொரு காலத்தில் ஒருநகரத்தில் சில வணிகர்கள் வசித்து வந்தனர். அவர்கள் வியாபாரத்திற்கு எங்கு சென்றாலும், ஒன்றாகச் செல்வது வழக்கம். ஒருமுறை அவர்கள் வெகுதூரம் பயணித்து, எடுத்துச் சென்ற பொருட்கள் அனைத்தையும் விற்று ஏராளமான அளவில் பணத்தினை சம்பாதித்தனர் அதன் பின்னர் அவ்வியாபாரத்தில் கிடைத்த பணத்துடன் வீடு திரும்பினர். திரும்பும் வழியில் ஒரு அடர்ந்த காடு இருந்தது, அதிகாலைநேரத்தில் அந்த காட்டினை கடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது நடுகாட்டில் இரண்டு கொள்ளையர்கள் புதரில் மறைந்திருந்தனர். வணிகர்கள் அந்ததிருடர்கள் மறைந்திருப்பதை கவணிக்காமல் பயனம் செய்து கொண்டிருந்தனர். அந்த கொள்ளையர்கள் இருவரும் திடீரென புதரிலிருந்துவெளிவந்து அவர்களுக்கு முன் மேலும் பயனம்செய்யஅனுமதிக்காமல் வழிமறித்து நின்று கொண்டு. தங்களுடைய கையிலுள்ள பயங்கர ஆயுதங்களை காட்டி மிரட்டி உயிர் பிழைக்கவேண்டுமானால், அவ்வணிகர்களிடம் இருந்த பணம் விலையுயர்ந்து பொருட்கள் ஆகியஅனைத்தையும் கீழே போடுமாறு கட்டளையிட்டனர்.
வணிகர்களின் கைகளில் தற்காப்பிற்கான ஆயுதம் ஏதும் இல்லை
எனவே வணிகர்கள் எண்ணிக்கையில் அதிகமாக இருந்தபோதிலும், கொள்ளையர்களுக்கு அடிபணிய வேண்டிய கட்டாயத்தில் இருந்தனர். ஆதலால் வணிகர்கள் தாம் அணிந்திருந்த கைக்கடிகாரம் உட்பட அனைத்து பொருட்களையும் கொள்ளையர்களிடம் இழந்தனர். எண்ணிக்கையில் குறைவாக இருந்தாலும் வணிகர்கள் அனைவரின் உடைமைகள் முழுவதையும் கொள்ளையடித்ததால் மிகவும் அதிககர்வத்துடன் அவ்வாறு கொள்ளையடித்த வணிகர்களுக்கு முன்பாக திருடர்கள் ராஜாக்களைப் போல அமர்ந்துகொண்டு வணிகர்கள்.தங்களுடைய வீடுகளுக்கு திரும்புவதற்கு முன்பு தங்கள் முன்னிலையில் வணிகர்கள் அனைவரும் நடனமாடுமாறு கட்டளையிட்டனர். அவ்வணிகர்கள் அனைவரும் தங்களுடைய அனைத்து பொருளையும் இழந்து மட்டுமல்லாமல் அந்த கொள்ளையர்கள் திருப்தி அடைவதற்காக நடனமும் ஆடவேண்டுமா என தங்களுடைய இக்கட்டான நிலையை வெளியில் வாய்விட்டு பேசமுடியாமல் நொந்துகொண்டு நடனமாடினார்கள்
அவ்வணிகர்களில் ஒருவர். மட்டும் தனக்கும் தனது நண்பர்களுக்கும் ஏற்பட்ட இந்த நெருக்கடியிலிருந்து எவ்வாறு தப்பிசெல்வது என சிந்திக்க ஆரம்பித்தார். மேலும் வணிகர்கள் ஆடவேண்டிய நடனம் குறித்தும், கொள்ளையர்கள் தரையில் அமர்ந்திருக்கும் விதம் குறித்தும் அவர் யோசித்துக் கொண்டிருந்தார். அவ்வாறு பல்வேறு வகையில் சிந்தித்துக்கொண்டிருந்தபோது, கொள்ளையர்கள் இருவரும் தங்களுடைய ஆயுதங்களை கைகளில் வைத்திருக்காமல் தரையில் வைத்துவிட்டதை அவர் கவனித்தார். , அக்கொள்ளையர்களை முழுமையாக முட்டாளாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் மற்ற வணிகர்களுடன் சேர்ந்துஇவரும் அந்த கொள்ளையர்கள் தன்மீது சந்தேகிக்க கூடாது என ஒப்புக்காக பெயரளவில் நடனமாடத் தொடங்கினர். இந்நிலையில் மிகவும் புத்திசாலிதனமாக அந்த கொள்ளையர்களை விரட்ட வேண்டும் என இறுதியாக முடிவுசெய்தார் ஏற்கனவே கொள்ளையர்கள் தங்களுடைய ஆயுதங்களை தரையில் வைத்துவிட்டதை கவனித்திருந்ததால், அவர் அதைப் பற்றி தனது நண்பர்களுக்கு சமிக்ஞை செய்தார், அதனை கவணித்தவணிகர்கள் அனைவரும் திடீரென்று திருடர்கள் தரையில் வைத்துவிட்ட அந்த ஆயுதங்களை தங்களுடைய கைகளில் எடுத்துக்கொண்டு கொள்ளையர்கள் மீதுபாய்ந்து தாக்கதொடங்கினர். இவ்வாறு தங்களுடைய ஆயுதத்தையே வணிகர்கள் தங்களுக்கு எதிராக திரும்ப தாக்குவதற்கு பயன்படுத்துவார்கள் என அவ்விரு கொள்ளையர்களும் எதிர்பார்க்கவில்லை, அதனால் அவ்விருவரும் எப்படியாவது . தங்களுடைய உயிர்பிழைத்தால் போதுமென வணிகர்களின் பிடியிலிருந்து தங்களை விடுவித்துக் கொண்டு தாங்கள் கொள்ளையடித்த பொருட்களையும் அப்படியே போட்டுவிட்டு ஓடத் தொடங்கினர். அதனை தொடர்ந்து அவ்வணிகர்கள் அனைவரும் தங்களுடைய, மதிப்புமிக்க பொருட்களையும் பணத்தையும் தரையிலிருந்து பொறுக்கி சேகரித்து எடுத்துகொண்டு பத்திரமாக வீடுவந்து சேர்ந்தனர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக