திங்கள், 6 செப்டம்பர், 2021

யார் புத்திசாலி

 


முன்னொரு காலத்தில் ஒரு அரசன் இருந்தான் அந்த அரசனுக்கு ஆலோசனை கூறுவதற்காக சிறந்த அறிஞர் ஒருவர் இருந்தார் தன்னுடைய நாட்டில் எந்தவொரு பிரச்சினை எப்போது எழுந்தாலும் அதுகுறித்து அவ்வரசன் அந்த அறிஞரை சந்தித்து மிக நீண்ட நெடிய ஆலோசனைகள் செய்தபின்பே எந்தவொரு முடிவையும் எடுத்து செயல்படுத்துவது வழக்கமாகும் . ஒருநாள் அவ்வாறான ஆலோசனை முடித்தபின்னர் அவ்வரசன் அறிஞரிடம், "ஐயா! ஒரு சந்தேகம் உங்களிடம் கேட்கலாமா?” என தயக்கத்துடன் ஏதாவொரு தகவல் வேண்டுமாறு கோரினார். உடன் அவ்வறிஞர் "அரசே உங்களுடை சந்தேகத்தை தாராளமாக கேளுங்கள் அதை தீர்வுசெய்வதற்காக நான் எப்போதும் தயாராக இருக்கின்றேன்,” என பதிலளித்த பின்னர் "ஐயா! நீங்கள் மிகவும் புத்திசாலியாக இருந்து எனக்கு இந்த நாட்டை நன்றாக ஆள்வதற்கான தகுந்த ஆலோசனை கூறி வழிநடத்தி செல்கின்றீர்கள். ஆனால், உங்களுடைய மகன் மிகவும் முட்டாளாக இருக்கின்றானே!” என சந்தேகம் எழுப்பியவுடன் அந்த அறிஞரின் முகம் மிகவும்வாடிவிட்டது இருந்தபோதிலும் "அரசே! ஏன் அவ்வாறு கூறுகின்றீர்கள்?” என அவ்வறிஞர் வினவியபோது, அரசன் "உங்களுடைய மகனுக்கு மதிப்பு மிக்கது வெள்ளியா தங்கமா என்பது கூட தெரியாமல் வெள்ளிதான் மதிப்புமிக்கது என கூறுகின்றான்", என அறிஞரின் மகனைபற்றிய தகவலை கூறியவுடன் அவ்வறிஞர் அரசனிடம் ஒன்றும் கூறாமல் மிக மனவருத்தத்துடன் தன்னுடைய வீட்டிற்கு சென்று சேர்ந்தார்.

பொதுவாக நம்முடைய வீட்டிற்குள் யார் நுழைந்தாலும் முதலில் தண்ணீர் கொடுத்து உபசரிப்பது நம்முடைய வழக்கமாகும் அதன்படி அவருடைய மகன் அவ்வறிஞரிடம் தண்ணீர் கொண்டுவந்து கொடுத்து தாகம் தணித்து கொள்ளுமாறு வேண்டினான் அதனை தொடர்ந்து அந்த அறிஞர் மிகவும் கோபமாக,” நான் கேட்கும் கேள்விக்கு நீ சரியாக பதில் கூறும் வரை உன்னுடைய கையால் கொடுக்கும் தண்ணீரை நான் என்னுடைய தாகத்தை தணிப்பதற்காக பயன்படுத்தமாட்டேன்,” என கூறினார் .அவ்வறிஞனின் மகன் உடன் "சரி!அப்பா! எந்த கேள்வி வேண்டுமானாலும் என்னிடம் கேளுங்கள் நான் சரியாக பதில் கூறுகின்றேன்,” என கூறினான் . அதனை தொடர்ந்து அவ்வறிஞர் "மதிப்பு மி்க்கது தங்கமா வெள்ளியா?” என வினவினார் உடன் "தங்கம் தான் மதிப்புமிக்கது அப்பா! என பதில் கூறியதும், "பின்ஏன் அரசன் மதிப்பு மி்க்கது தங்கமா வெள்ளியா? என வினவுகின்றபோது மட்டும் நீ தினமும் வெள்ளியென பதில் கூறுகின்றாய்,” என சந்தேகம் கோரியபோது "அப்பா! முதலில் தாகத்திற்கு தண்ணீர் குடித்து அமைதியாகுங்கள்,” என அவ்வறிஞரின் கோபத்தை அமைதிபடுத்தியபின்னர் "இப்போது என்னுடன் அந்த அறைக்குள் வாருங்கள் உங்களுக்கு அதற்கான பதில் காண்பிக்கின்றேன்,” என அவ்வறிஞரை அடுத்து பூட்டியிருந்த அறை திறந்து காண்பித்தான் அவ்வறிஞனின் மகன். அந்த அறை முழுவதும் ஏராளமாக வெள்ளிகாசுகளால் நிரம்பி இருந்தது "அப்பா! நான் மதிப்பு மிக்கது தங்கம் என கூறியிருந்தால் ஒரேயொரு தங்க காசு மட்டுமே எனக்கு அரசனிடமிருந்து கிடைத்திருக்கும் நான் மதிப்பு மிக்கது வெள்ளியென்பதால் தினமும் ஒரு வெள்ளி காசு வீதம் இந்த அறைமுழுவதும் நிரம்பிவழியுமாறு வெள்ளிகாசுகள் அரசனிடமிருந்து எனக்கு கிடைக்கப்பெற்றது இப்போது சொல்லுங்கள் நான் முட்டாளா புத்திசாலியா !" என வினவினான் அதனை தொடர்ந்து "என்னைவிட நீதான் மிகவும் புத்திசாலி மகனே!” என தன்னுடைய மகனை மிகமகிழ்ச்சியுடன் அரவனைத்தார்


கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...