ஞாயிறு, 29 ஆகஸ்ட், 2021

அரசனும் சந்தன மரவியாபாரியும்

 


நம் மனதில் எந்த உணர்வு தோன்றுகின்றதோ, அதே உணர்வு எதிரில் உள்ள மற்றவரின் மனதிலும் தோன்றக்கூடும் என்பது ஒரு உளவியல் உண்மை. இது தொடர்பான ஒரு கதை

முன்னொரு காலத்தில் வியாபாரி ஒருவர் ஒருஅரசனின் அரசவைக்குள் நுழைந்தார். அரசன் அந்த வியாபாரியைப் பார்த்ததும், "இந்த வியாபாரியிடம் இருந்து எல்லாவற்றையும் பறித்துகொண்டு அவரை அரசவைக்கு வெளியில் அவரை விரட்டிடுடுக " என உத்திரவிட்டார். அதனால் உடன் அந்த வியாபாரி வெளியே அனுப்ப பட்டார்.அதனைதொடர்ந்து அந்த அரசன், "நான் எப்போதும் அனைத்து மக்களையும்  சமமாக நடத்தி அரசாட்சி செய்து வருகின்றேன் ஆனால் அந்த வியாபாரியை  பார்த்தவுடன் ஏன் அவ்வாறு வித்தியாசமான உணர்வு  என் மனதில் தோன்றியது? " என தனக்குள் எண்ணினார்   தனது அமைச்சரிடமும் அதையே வினவினார். அமைச்சர் மிகவும் புத்திசாலியாக இருந்தாலும் அவரால் இதற்கான பதிலை உடன் அரசனிடம் கூற முடியவில்லை  அதனால் அமைச்சர், "அரசே சில நாட்களுக்குப் பிறகு தங்களுடைய இந்த கேள்விக்கு மிகச்சரியான  சரியான பதிலை என்னால் அளிக்க முடியும்." என பதிலளித்தார்  அரசனும் அதனை ஏற்றுக் கொண்டார். அன்றைய அரசவை முடிந்ததும் நேரத்தை வீணாக்காமல் அன்றே அந்த வியாபாரியை நேரில்  சந்திக்க வேண்டும் என அமைச்சர் அந்த வியாபாரி தங்கியிருந்த இடத்திற்கு சென்றார்.அவ்வாறு   அமைச்சர் அந்த வியாபாரியை நேரில் சந்தித்தபோது ,  வியாபாரியிடம், "நீங்கள் சந்தன மரவியாபாரம் செய்து பெரிய இலாபம் ஈட்டுகின்றீர்கள். ஆனாலும்  நீங்கள் ஏன் மிகவும் கவலையுடனும் வருத்துடனும் இருக்கின்றீர்கள்" என வினவினார் உடன் அந்த வியாபாரி , "நான் ஏராளமான சந்தன மரங்களை பல்வேறு நகரங்களுக்கு கொண்டு சென்று விற்றுவருகின்றேன். அதைபோன்று நான் இந்த நகரத்திற்கும் சந்தன மரங்களை விற்க வந்தேன் ஆனால் இப்போது   இந்த நகரத்தில் மட்டும் சந்தன மரம் எதையும் என்னால் விற்கமுடியவில்லை  சந்தனமரங்கள் வாங்குவதற்காக கையிலிருந்த பணம் முழுவதும் செலவாகி முடங்கிவிட்டது சந்தனமரங்களை விற்றால் மட்டுமே அன்றாட செலவிற்கு போதுமான வருமானம் எனக்கு கிடைக்கும் இல்லையென்றால் ஒன்றுமேயில்லாத ஓட்டாண்டி ஆகும் நிலையில் நான் தத்தளித்து கொண்டு இருக்கின்றேன் அதனால் தற்போதைய ​​இக்கட்டில் இருந்து தப்பிக்க வேறுவழி எதுவும் இல்லை " என தன்னுடைய தற்போதைய நிலையைக்கூறினார். அதனை தொடர்ந்து  அமைச்சர் 'உண்மையில் இப்போது இந்த இக்கட்டில்இருந்து வெளியேறுவதற்கு வேறு எந்த வழியுமே இல்லையா? " என வினவினார் அதற்கு வணிகர் சிரித்துக்கொண்டே "தற்போது இந்த நாட்டின் மன்னர் இறந்தால், அனைத்து சந்தனமரங்களையும் அவரது உடலை எரிப்பதற்காக விற்கலாம் " என்றார்.  ஆகா அரசனின் கேள்விக்கு இதுதான் சரியான பதில் என அமைச்சர் எண்ணினார். அடுத்த நாள் அமைச்சர் அந்த வியாபாரியிடம் “அரசன் உண்பதற்கான உணவை சமைப்பதற்கு தேவையான எரிபொருளாக தினமும் 50 கிலோ சந்தன மரக்கட்டையை வழங்கவேண்டும்  என்றும் தினசரி அவைகளை கொண்டுவந்து கொடுத்த உடன்அதற்கான  பணம் கொடுக்கப்படும்” என்றும் அவ்வியாபாரியிடம் கூறினார். அந்த வியாபாரியு அமைச்சரிடமிருந்து அவ்வாறான சந்தன கட்டைகளை அரசனுக்கு விற்பதற்கான உத்தரவைப் பெற்றதில் மிகவும் மகிழ்ச்சியடைந்தார், போதுமான வருமானம் கிடைத்ததால் அந்த வியாபாரி  அரசன் நீடூழி வாழ்க!” என வாழ்த்தினார். சில நாட்களுக்குப் பிறகு, அந்த வணிகர் மீண்டும் அரசனின் அவைக்கு வந்தார். என்ன ஆச்சரியம் இந்த முறை அரசர் "அவர் எவ்வளவு நல்ல மனிதர்,அவர் என்ன கோருகின்றாரோ அதை போதுமான அளவிற்கு அவருக்கு பரிசாக வழங்கிடுக " என உத்திரவிட்டார அமைச்சரும் போதுமான பரிசுபொருட்களை அந்த வியாபாரிக்கு வழங்கினார்  வியாபாரி அரசவையை விட்டு  வெளியேறியபோது  அரசர் அமைச்சரிடம்  "அமைச்சரே இந்த வியாபாரி கடந்தமுறை அரசவைக்குள் வந்தபோது இந்த வியாபாரியிடம் இருந்து எல்லாவற்றையும் பறித்து அரசவைக்கு வெளியில் அவரை விரட்டிடுடுக " எனஉத்திரவிட்டேன்  அப்போது எனக்கு  ஏன்அவ்வாறான எண்ணம் தோன்றியது என வினவியபோது சிறிது நாட்கள்  கழித்து பதில் கூறுவதாக கூறினீர்கள் இப்போது அதே வியாபாரி அரசவைக்குள் உள் நுழையும்போது அவருக்கு போதுமான பரிசுபொருட்களை வழங்கிடுமாறு உத்திரவிட்டேன் இப்போது மட்டும் ஏன் எனக்கு அவ்வாறு அவ்வாறு தோன்றுகின்றது "என வினவினார்   "அரசே ஏனெனில் அந்த வியாபாரி கடந்தமுறை அரசவைக்குள் உள்நுழையும்போது இந்த அரசன் இறந்தால் என்னுடைய சந்தனமரம் முழுவதும் விற்பணையாகிவிடும் எனக்கும் போதுமான வருமானம் கிட்டும் என்று மனதிற்குள் எண்ணமிட்டவாறு உள்நுழைந்தார ஆனால்  தற்போது அதே வியாபாரி உள்நுழையும்போது நம்முடைய சந்தனமரகட்டைகள் முழுவதும் அரசன் தன்னுடைய சமையலுக்கு தினமும்  வாங்கி கொள்வதால் போதுமான வருமானம் கிடைக்கின்றது அதனால் மிகவும் மகிழ்ச்சியாக த வியாபாரி  அரசன் நீடுழி வாழவேண்டும் அதனால் தன்னுடைய சந்தன மரவியாபாரமும் தொடர்ந்து நன்றாக நடக்கும் என மனமாற வாழ்த்தி கொண்டு உள்நுழைவு செய்தார் எனவே உங்கள் மனதிலும் அவருக்கு போதுமானபரிசு பொருட்களை வழங்கிடுமாறு உத்திரவிட்டீர்கள் " என பதிலளித்தார்

நம்முடைய மனதில் மற்றவர்களை பற்றி என்ன நினைக்கின்றோமோ அதே எண்ணம் எதிரிலுள்ள மற்றவர்களின் மனதிலும் உருவாகும் என்பது திண்ணம்  அதனால் நாம் எப்போதும் அனைவரும் நன்றாக மகிழ்ச்சியாக வாழுமாறு நேர்மறையாக எண்ணிடுக

கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...