சனி, 7 ஆகஸ்ட், 2021

மரத்தின் கிளை ஒன்றில் தொடர்ந்து உட்கார்ந்திடும் ஒரு கழுகு

 

முன்னொரு காலத்தில் , ஒருவழிபோக்கன் இரண்டு கழுகு குஞ்சுகளை ஒரு அரசனுக்கு பரிசாக வழங்கினர். அவை மிகவும் நல்ல இனத்தைச் சேர்ந்தகழுகு குஞ்சுகளாகும், அரசன் இதற்கு முன்பு இதுபோன்ற அற்புதமான கழுகுகளைப் பார்த்ததில்லை. அதனால் அவைகளை நன்கு கவனித்து வளர்ப்பதற்காக  அவ்வரசன் ஒரு அனுபவமிக்க மனிதரை நியமித்தார். சில மாதங்கள் கடந்துவிட்ட பிறகு, அரசன் அந்த கழுகு குஞ்சுகள் எவ்வாறு வளர்ந்துள்ளன எனப் பார்க்க விரும்பி, அவைகளை வளர்த்துவந்த இடத்திற்கு சென்று அடைந்தார். அங்கு இரண்டு கழுகு குஞ்சுகளும் மிகப் பெரிய கழுகாக வளர்ந்திருப்பதை  கண்டு மிகமகிழ்ச்சி யுற்றார், அவை இப்போது முன்பை விட அழகாகத் தோன்றின. அவைகளை கவனித்துக் கொண்டிருந்த மனிதனிடம், “நான் அவைகளை வானத்தில் பறப்பதை காண விரும்புகிறேன்” என்றார் அரசன். அதனை தொடர்ந்து அந்த கழுகுகளை பராமரித்து வளர்த்திடும்  நபர்அதனுடைய கூண்டினை திறந்து விட்டார். உடன் அவ்விரண்டு கழுகுகளும் உயரே வானத்தில் பறக்க ஆரம்பித்தன. ஒரு கழுகு வானத்தின் மிக உயரத்தைத் தொட்டபோது, மற்றொன்று  கொஞ்சம் கொஞ்சமாக மீண்டும் திரும்பி கீழே வந்து, அங்கிருந்த ஒருமரத்தின் கிளையில் அமர்ந்தது. இதைப் பார்த்த அரசன் ஏதோ விசித்திரமாக இருப்பதை உணர்ந்தார். அதனால், “ஏன்? அவற்றுள் ஒன்று மட்டும் நன்றாக வானத்தில் உயரே பறக்கிறது, மற்றொன்று வானத்தில் உயரே பறக்கவில்லை. " என அரசன் கேட்டபோது அவைகளை பராமரிக்கும் மனிதன் , "ஐயா, நான் எல்லா வகைகளிலும் முயற்சி செய்து பார்த்துவிட்டேன், ஆனால் அந்த ஒரு கழுகு மட்டும் வானத்தின் உயரத்தில் பறக்க விரும்புவதாகத் தெரியவில்லை." என பதில் கூறினார்  ஆயினும் அரசன் அவ்விரு கழுகுகளையும் சமமாக நேசித்தார், அதனால் அவ்விரண்டு கழுகுகளும் வானத்தின் உயரத்தில் பறப்பதைக் காண விரும்பினார். எனவே, அடுத்த நாள் அந்த கழுகை வானத்தின் உயரத்தில் பறக்க செய்யக்கூடிய நபருக்கு ஏராளமாக  பரிசுகள் வழங்கப்படும் என நாடு முழுவதிலும் அறிவிக்கப் பட்டது , .அதனைதொடர்ந்து  பல அறிஞர்களும் அனுபவசாலிகளும் அங்கு வந்து உயரத்தில் பறந்து செல்லாத அந்த ஒரு கழுகினை  வானத்தின் உயரத்தில் பறக்க செய்வதற்கு பல்வேறு வழிகளிலும் கடுமையாக  முயன்று பார்த்தனர், ஆனால் பலநாட்கள் கடந்த பின்னரும் அந்த ஒரு கழுகு மட்டும்  வானத்தின் உயரத்தில் எழுந்து பறந்து செல்லாமல் இன்னும் அதே நிலையில் அதாவது வானத்தில் கொஞ்சம்தூரம் பறந்து மீண்டும்திரும்பி வந்து அந்த மரத்தின் கிளையிலேயே அமர்ந்து கொள்வது என்றவாறே இருந்தது, ஆனால் ஒரு நாள், அவ்விரண்டு கழுகுகளும் வானத்தின் உயரத்தில் மிக அழகாக பறப்பதை அரசன் கண்டு மிகவும் மகிழ்ச்சியுற்றார். அவ்வரசனுக்கு தன்னுடைய கண்களால் காண்பதை  நம்ப முடியவில்லை, உடனடியாக இந்த சாதனையைச் செய்த நபரைக் கண்டுபிடிக்கும்படி உத்திரவிட்டார், அடுத்த நாள், அந்த நபர் அரச சபைக்கு நேரில் வந்து சேர்ந்தார். அவருக்கு ஏராளமாக தங்க நாணயங்களை வெகுமதியாக வழங்கிய பின்னர், அரசன் அம்மனிதரிடம், "பெரிய அறிஞர்களாலும் அனுபவசாலிகளாலும் செய்ய முடியாததை நீங்கள் எப்படி செய்தீர்கள்?" என கேட்டபோது அம்மனிதன், “ஐயா | நான் ஒரு எளிய விவசாயி, எனக்கு அதிக கல்வி அறிவு  எதுவும் இல்லை.  ஆயினும் அனுபவ அறிவு சிறிதுமட்டும உண்டு அதனை கொண்டு நான் அந்த கழுகு உட்கார்ந்திருந்த கிளையை வெட்டிவிட்டேன். தான் வழக்கமாக உட்கார்ந்திருக்கின்ற இடமான கிளையை வெட்டிவிட்டதால் தான் உட்காருவதற்கு வேறுஇடம்இல்லாது போது அந்தகழுகானது உட்காருவதற்கு தனக்கு வேறுஎதுவும் இல்லையென அதன் கூட்டாளியுடன் வானத்தில் உயரே பறக்கத் தொடங்கியது. ”என்றார் 

 ஆம் நாம் அனைவரும் வாழ்க்கையில் மிக உயர்ந்த இடத்தை பிடிப்பதற்காக முயற்சி செய்கின்றோம், ஆனால் சில சமயங்களில் நாம் என்னவாக இருக்கிறோம்என தெரிந்து கொள்ளாமல் அல்லது அறிந்து கொள்ளாமல் தொடர்ந்து முயற்ச்சி செய்திடாமல்அவ்வாறான   திறனை மறந்து விடுகின்றோம்.அதனால் அதற்கான முயற்சி செய்வதை தக்கவைத்து கொள்ளாமல் நம்முடைய பாதுகாப்பான பழையநிலைக்கு மீண்டும் திரும்பசென்றுவிடுகின்றோம்  வேறு வழிஇல்லை என்ற இக்கட்டு வரும்போதுதான் நாம் நமக்கான வாழ்க் கை பாதையை கண்டுபிடித்து செயல்படுவதற்காக  வாழ்க்கையை துவங்குகின்றோம் என்பதே உண்மைநிலவரமாகும்.

கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...