ஞாயிறு, 22 ஆகஸ்ட், 2021

அரசனும் புத்திசாலியான கதை சொல்பவரும் ..!

 


முன்னொரு காலத்தில், கதைகள் கூறுவதை எப்போதும் கேட்டு கொண்டே இருக்க விரும்பும்  மன்னர் ஒருவர்இருந்தார்.  பல கதை சொல்லிகள் அவரது அரசசபைக்கு வந்து அவ்வரசனிடம் பல கதைகளை கூறிமுடித்தவுடன் அவர்களுக்கு போதுமான தங்க காசுகளையும் பரிசுகளை யும் அவ்வரசன் வழங்கி அனுப்பிவைத்திடுவார். ஒரு நாள், அவ்வரசன் தனது அமைச்சரிடம் அடுத்து  கதைசொல்ல வருபவர் தன்னிடம் முடிவே இல்லாத மிக நீண்ட கதையைச் சொல்ல வேண்டும் அவ்வாறான நபரைமட்டும் அரசசபைக்குள் அனுமதியுங்கள் என்று உத்திரவிட்டார் – அரசனுக்கு கூறுகின்ற கதையானது ஒருபோதும் முடிவடையாத கதையாக இருக்க வேண்டும், கதை முடிவடைந்து விட்டால், கதை சொல்பவருடைய வாழ்வும் அதோடு முடிவடைந்து விடும் அதாவது அந்த கதை சொல்லி தனது உயிரை விடநேரிடும்  என நாடுமுழுவதும் அறிவிப்பு செய்யப்பட்டது. அவ்வாறான அறிவிப்பு செய்ததால், ​​பல நாட்கள் கடந்தும் எந்த ஒரு கதை சொல்பவரும் தங்களுடைய உயிரை இழக்க விரும்பவில்லை அதனால் அரசனுக்கு கதைகளைச் சொல்ல அரசசபைக்கு  யாரும் வரவில்லை. மிக நீண்ட நாட்களாக புதிய கதைகள் எதையும் கேட்காததால் அவ்வரசன்  மிகுந்த மனவருத்தத்துடன் இருந்தார். எனவே அடுத்த கதை சொல்ல வருபவருக்கு மிகப்பெரிய பரிசுபொருட்கள் கிடைக்கும் என்று அவ்வரசன் புதிய அறிவிப்பை வெளியிடச்செய்தார் சில நாட்களுக்குப் பிறகு, வழிபோக்கன் ஒருவன் அரசசபைக்கு வந்து, தான் அரசனுக்கு கதைகூறி மகிழ்விப்பதற்கு விரும்புவதாகக் கூறினார்,. அமைச்சர் அவ்வழிபோக்கனிடம், “கதை முடிந்தால் உங்களுக்கு என்ன கதி கிடைக்கும் என்று உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்டார். அந்த வழிபோக்கனும தலையசைத்து, “மரியாதைக்குரிய அமைச்சர்.

அவர்களே ஆம்,எனக்கு நன்றாகத் தெரியும், அதை தெரிந்துகொண்டுதான் நான் இப்போது அவ்வாறானதொரு கதை சொல்ல தயாராக வந்து இருக்கிறேன்.   எனப்பதில் அளித்தார் எனவே, கதை அமர்வு துவங்கியது அவ்வழிபோக்கன் கதையைகூறத் தொடங்கினார், “முன்னொரு காலத்தில் பரந்த நாட்டினை ஒரு பெரிய அரசன் ஆண்டுவந்தார். அவர் தானியங்களை சேமிப்பதற்கான ஒரு பெரிய தானிய களஞ்சியத்தை கட்டினார் அவரது நாட்டில் வரியாக தானியங்களை வசூலித்து அவற்றை அதில் சேமித்து வைத்தார் அதிக தானியங்களால். அந்தகளஞ்சியம் விரைவாக நிரம்பிவழிந்தது அந்த களஞ்சியத்தை கட்டிய கொத்தனார், அந்த களஞ்சியத்திற்குள் காற்றும் சூரிய ஒளியும் வருவதற்காகஅங்காங்கு சிறிய திறப்புகளை வைத்திருந்தார் ஒரு நாள், ஒரு சிறிய குருவி அந்த களஞ்சியத்தின் சிறிய திறப்புகள் இருப்பதைக் கவனித்து, அந்த திறப்புகளின் வழியாக தானிய களஞ்சியத்திற்குள் பறந்து வந்து ஒரு சிறிய தானியத்தை எடுத்துகொண்டு வெளியே பறந்தது. அது அதனுடைய கூட்டில் அந்த தானியத்தை வைத்துவிட்டு திரும்பி வந்தது. பின்னர் அந்த திறப்பு வழியாக தானிய களஞ்சியத்திற்குள் மீண்டும் பறந்து வந்து மீண்டும் களஞ்சியத்தில், ஒரு சிறுதானியத்தை எடுத்து கொண்டு, வெளியே பறந்து து. அது அதனுடைய கூட்டில் அந்த தானியத்தை வைத்துவிட்டுமீண்டும் திரும்பிபறந்து வந்தது”. என்றவாறு மீண்டும் மீண்டும் அந்த பறவை தானியகளஞ்சியத்திற்குள் பறந்துவந்து சிறிய, தானியத்தை எடுத்து கொண்டு பறந்து சென்றது தன்னுடைய கூட்டில் வைத்துவிட்டு மீண்சும் திரும்பிவந்தது என க்கூறிக்கொண்டே யிருந்தார்  அரசன் மிகவும் பொறுமையிழந்து  , “அடுத்து என்ன நடந்தது?” என்று கேட்டார். வழிபோக்கன்  அரசே அடுத்து என்ன நடந்தது என்று நீங்கள் நம்ப மாட்டீர்கள். அந்தக் குருவி மீண்டும் அந்த தானியக்களஞ்சியத்திற்குள் பறந்து வந்தது.  ஒரு தானியத்தை மட்டும் எடுத்துக்கொண்டு மீண்டும் தன்னுடைய கூட்டிற்கு பறந்து சென்று அதை அங்கே வைத்துவிட்டது. ” எனக்கூறினார் “பின்னர்?”,எனக்கோபமாகஅரசன் கேட்டார். அவ்வழிபோக்கன் , "பின்னர், குருவி மீண்டும் அந்த தானியக் களஞ்சியத்திற்குள் பறந்து வந்தது சிறிய தானியம் ஒன்றை  எடுத்து கொண்டு." என்பதை அவர் கூறி தொடர்ந்து சொல்லிமுடிப்பதற்குள், அரசன் மிகவும்அதிக கோபத்துடன், “இல்லை” என்று கத்தினார். மேலும் “அடுத்து என்ன நடந்தது என்று நான் உங்களுக்குச் சொல்வேன். “,எனஅரசன்மிக்கடுமையாக கூறினார்., “அந்த அரசன் கொத்தானாருக்கு தானியங்களஞ்சியத்தில் உள்ள அவ்வாறான அனைத்து திறப்புகளையும் மூட உத்தரவிட்டார். உடன் அந்த தானியங்களஞ்சியத்தில்  இருந்த அனைத்து சிறியதிறப்புகளும் மூடப்பட்டுவிட்டன, ​​அந்த குருவி தான்வழக்கமாக தானியத்தினை எடுத்துச்செல்வதற்கான திறப்பினை தேடியது .. ”என அரசன்அந்த கதையை  இடையில் நிறுத்தம் செய்து,அந்த வழிபோக்கனிடம் கோபமாக, “இப்போது,ள் ​கதையைத் தொடருங்கள்” என்று கட்டளையிட்டார். உடன் அந்த வழிபோக்கன் மிப்பணிவாக , “அரசே, மன்னியுங்கள். நீங்கள் இப்போது கதை சொல்பவராக  மாறிவிட்டீர்கள். இப்போது கதை நான்கூறவில்லை நீங்கள்தான் கூறினீர்கள் இது நியாயமாகாது இந்த புதிய கதை புதியதாக சொல்பவரால்  தொடரப்பட வேண்டிய கதையாகும். என்னுடைய கதை முடியவில்லை| நீங்கள்தான்முடித்தீர்கள் அதனால் உங்கள் உத்திரவின்படி  உங்களுடைய உயிரைத்தான் எடுக்கவேண்டும். " எனக்கூறியதை தொடர்ந்து அந்த அரசனால் வேறுஎதுவம் அந்த வழிபோக்கனிடம் பேசமுடியால் ஏராளமாக பொன்னும் பொருளும் பரிசாக கொடுத்னுப்பினார்.

கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...