ஒரு மன்னனுக்கு பல யானைகளை கொண்ட யானைப்படை ஒன்று இருந்தது. அவைகளுள் ஒன்று மட்டும் மிகவும் சக்திவாய்ந்த்கவும் போர்களத்தில் திறமையாகவும் அரசனுக்கீழ்ப்படிந்து செயல்படுவதில் முதன்மையானதாகவும் இருந்தது. அது பல போர்களில் அரசனுக்காக மிகசிறப்பாக பணியாற்றியது, மேலும் அரசனுக்கு மிகவும் பிடித்தமான யானையாகஇருந்தது.அந்த, யானைக்கு வயதாகிவிட்டதால், அரசன் இனி அதனை போருக்கு அழைத்துச் செல்லவோண்டாம் என முடிவுசெய்தார் ஆயினும் அந்த யானையை மட்டும் தனியாக ஒரு உதவியாளரை கொண்டு நன்கு கவனித்து பராமரித்துக் கொண்டுவரப்பட்டது, . ஒரு நாள், அந்த யானை தண்ணீர் குடிக்க அருகிலிருந்த குளத்திற்கு சென்றது தண்ணீரை குடித்து திரும்பவெளியேற முயற்சி செய்தபோது அதனுடைய கால்கள் அந்த குளத்தின் சேற்றில் மாட்டிக்கொண்டது. எவ்வளவு தான் முயற்சித்தாலும் அந்தயானையால் குளத்திலிருந்து வெளியேற முடியவில்லை. உதவியாளர்கள் பலர் சென்று முயற்சிசெய்தும் அந்த குளத்தின் சேற்றிலிருந்து யானையை வெளியில் கொண்டுவர முடியவில்லை. யானை குளத்தின் சேற்றில் சிக்கிய செய்தி மன்னரை அடைந்தது. அந்த அரசனுடன் பலர் அங்கு வந்து முயன்று பார்த்தனர், தொடர்ந்து அந்த குளத்தின் சேற்றிலிருந்து யானையை வெளியேற்ற பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன, ஆனால் அனைத்து முயற்சிகளும் வீணாகின. அந்த நேரத்தில், கௌதம புத்தர் அந்த வழியாக வேறு எங்கோநடந்து சென்று கொண்டிருந்தார். அரசன் அவரிடம் சென்று தன்னுடைய யானையை குளத்தின் சேற்றிலிருந்து மீட்டு வெளியே கொண்டு வருவதற்கு தகுந்த ஆலோசனை கூறிடுமாறு கேட்டார். கௌதம புத்தரும் அந்த யானை யை பற்றிய அனைத்து விவரங்களை விசாரித்து அறிந்து கொண்டார பின்னர் அந்த இடத்தையும் ஆய்வு செய்தார். அதன் பின்னர் அவர் அரசனை நோக்கி, “போர்வீர்கள் அனைவரும் போர்க்களத்தினை நோக்கி புறப்படுவதற்கான மேளங்களையும் கருவிகளையும் இசைக்குமாறு எக்காளங்களை முழங்கிடுமாறு” கூறினார். அரசனும் தனது ஊழியர்களிடம் போர்க்களத்திற்கு புறப்படுவதற்கான மேளங்களையும் கருவிகளையும் கொண்டு வரும்படியும் செயல்படுத்திடுமாறு உத்திரவிட்டார், ,என்ன ஆச்சரியம் போர்க்களத்தினை நோக்கிபுறப்படுவதற்கான கருவிகள் எக்காளமுழக்கம் கேட்டவுடன் குளத்தின் சேற்றில் மாட்டிகொண்டிருந்த யானையானது வெகுஉற்சாகத்துடன் யாருடைய உதவியும் இல்லாமலேயே தானாக குளத்திலிருந்து வெளியேறிவந்து சேர்ந்தது அனைவரும் அதைக் கண்டு ஆச்சரியப்பட்டு புத்தரிடம், “இவ்வளவு நேரம் நாங்கள் மிகவும் எவ்வளவோ முயற்சித்தோம், ஆனால் அந்த யானையை மட்டும் சேற்றிலிருந்து வெளியே கொண்டு வரமுடியவில்லை, ஆனால் இப்போது யானை தானாக வெளியே வந்தது. இது எப்படி சாத்தியம்?" எனக்கோரியபோது புத்தர் , “நம் அனைவருக்கும் நல்ல உடல் திறன் மனத் திறன் ஆகிய எதற்கு ம் பஞ்சமில்லை, ஆனால் அதனை ஊக்குவிக்க ஏதேனும் ஒன்று தேவையாகும் அந்த ஊக்குவிப்புதான் யானைக்கு செய்யப்பட்டது. ஏனென்றால் யானை போர்களத்திற்கு சென்று பழகியதால் போர்களத்திற்குசெல்லாமல் தனது உற்சாகத்தினை இழந்துவிட்டது போர்களகளத்திற்கு புறப்படுவதற்கான ஓசையானது அதனுடைய பழையஉற்சாகத்தைத் திரும்பப் பெற உதவியது. " எனக்கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக