சனி, 5 ஜூன், 2021

எவ்வாறு சரியான நபரை தேர்ந்தெடுப்பது

 
முன்னொருகாலத்தில் ஒரு மன்னன் இருந்தார். அவருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். பல்வேறு சிறந்த அறிஞர்களை நியமித்து அவர்களுக்கு அனைத்து கலைகளையும் கற்பிக்கசெய் தார். ஒரு சில வருட கற்றலிற்குப் பிறகு, மன்னர் மோசமாக நோய்வாய்ப்பட்டார். எனவே, அவர் தனக்கு பிறகு தனது நாட்டை ஆள்வதற்காக அடுத்த அரசனை தேர்ந்தெடுக்க விரும்பினார். அதற்காக அவர் தனது மகன்களின் திறன்களை பரிசோதிக்க விரும்பினார். அவர் தன்னுடைய மகன்கள் இருவரையும் அழைத்து அவர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக காலியான அறை ஒன்றினை கொடுத்தார். , “நீங்கள் விரும்பும் எந்தவொரு பொருளையும் கொண்டு உங்களுக்கு ஒதுக்கப்பட்ட அறையை நிரப்பலாம் ஆனால் உங்கள் ஒவ்வொருவருக்கும் ஒதுக்கப்பட்ட அறையானது முழுமையாக நிரம்பியிருக்க வேண்டும். அவ்வாறு நிரப்பபடுகின்ற பொருளானது எதுவாகவும் இருக்கலாம்! ஆனால் காலியாக இருக்ககூடாது, மேலும் நீங்கள் யாரிடமிருந்தும் இதற்கான ஆலோசனையைப் பெறக்கூடாது! " என்ற நிபந்தனைகளுடன் தன்னுடைய மகன்களுக்கு உத்திரவிட்டார். அடுத்த நாள் மன்னர் பெரியவமகனுக்கு ஒதுக்கப்பட்ட அறைக்குச் சென்றார். அந்த அறை முழுவதுமாக வைக்கோல் நிரம்பியிருந்தது. மூத்த மகனின் முட்டாள்தனத்தைப் பற்றி மன்னர் பெருமூச்சு விட்டார். அவர் இளைய மகனின் அறைக்குச் சென்றார். ஆனால் அது மூடப்பட்டிருந்தது. மன்னர் அறையின் கதவைத் தட்டினார். இரண்டாவது மகன் அறையின் கதவை திறந்து தனது தந்தையை உள்ளே வருமாறு கோரினார்.பின்ன்ர் தன்னுடைய தந்தை அறைக்குள் வந்ததும் மீண்டும் கதவை மூடினார். அறைமுழுவதும் இருள் ஆக இருந்தது, அரசன் தனது இரண்டாவது மகனிடம் "இந்த இருளைத்தான் உனக்கு ஒதுக்கப்பட்ட அறைமுழுவதும் நிரப்பி உள்ளாயா ", என மிகவும் கோபமாக கத்தினார். ஆனால் இரண்டாவது மகன் "தந்தையே சிறிது பொறுத்துகொள்ளுங்கள் " எனக்கூறி தீக்குச்சியை பற்றவைத்து அதன்வாயிலாக ஒரு அகல்விளக்கினை எரியச்செய்தார் இப்போது அறை முழுவதும் அகல்விளக்கின் ஒளியால் நிரப்பப்பட்டுவிட்டது , அதனை தொடர்ந்து “அப்பா நீங்கள் கூறியவாறு நான் இந்த அறைமுழுவதும் அகல்விளக்கின்ஒளியால் நிரப்பிவிட்டேன்!” எனஇரண்டாவது மகன் கூறினார். இப்போது மன்னர் மிகவும் மகிழ்ச்சியாகிவிட்டார், தனது மகனை பெருமையுடன் கட்டிப்பிடித்தார். தனக்குப் பிறகு தன்னுடைய நாட்டை ஆளுவதற்கு இளைய மகன்தான் சரியான நபராக இருப்பார் என்பதை அவர் புரிந்துகொண்டார்.

கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...