சனி, 19 ஜூன், 2021

விவேகமான நீதி

 

முன்னொரு காலத்தில் ஒருஅரசனின் அரசவைக்கு இரண்டு பெண்கள் தங்களுக்கு நல்லதொரு தீர்ப்பினை வழங்கிடுமாறு தங்களுக்கிடையிலான ஒரு பிரச்சினையை கொண்டுவந்தனர். அதாவது அவ்விரு பெண்களும் ஒரே குழந்தையை தங்களுடைய குழந்தைதான் என உரிமை கொண்டாடினர் என்பதுதான் அந்த பிரச்சினையாகும் அந்த குழந்தையின் மீதான உரிமை தனக்குதான் என இருவரும் சண்டையிட்டுக் கொண்டனர். ஒவ்வொருவரும் தான்தான் அந்த குழந்தையின் தாய் என்று சொல்லிக்கொண்டு அந்த அரசனுடைய அவையிலும் சண்டையிட்டுக்கொண்டனர். ஒரு பெண், "அரசே! நான் தான் இந்த குழந்தையின் தாய்" என்றாள். மற்றொருவர் , "அரசே! அவளை நம்பாதீர்கள் அவள் இந்த குழந்தையின் தாய் இல்லை. நான்தான் இந்த குழந்தையின் தாய்" என்றாள். இவ்வாறான சூழலில் . இந்த பிரச்சினையைய எவ்வாறு தீர்வுசெய்வது என அவ்வரசன் மிக அதிக குழப்பமடைந்தார் இருந்த போதிலும் ஆழ்ந்த சிந்தனைக்குப் பிறகு, "அம்மையீர் நீங்கள் இருவரும் ஒரே குழந்தையை உங்களுடைய குழந்தை என ஒவ்வொருவரும் உரிமை கொண்டாடுவதால் இந்த பிரச்சினையை தீர்வு செய்வது என்பது மிகக்கடினமான செயலாகும் இருந்தாலும் வழக்கமான நீதி நடைமுறையின் படி என்னுடைய உதவியாளரை அழைத்து இந்த குழந்தையை சரிபாதியாக (இரண்டாக) வெட்டிடுமாறு உத்திரவிடுகின்றேன் நீங்கள் இருவரும் ஆளுக்கு ஒரு பாதிகுழந்தையை எடுத்து கொண்டு செல்லுங்கள்" என்றார். அந்த அரசினுடைய இவ்வாறான தீர்வினை கேட்டவுடன் அவ்விரண்டு பேர்களுள் ஒரு பெண்மட்டும் இந்த தீர்வினை மகிழ்ச்சியாக ஏற்று "அரசே அவ்வாறு செய்திடுங்கள் " என ஆமோதித்தித்தாள். மற்றொரு பெண்மட்டும் "அரசே! இந்த குழந்தை அவளுக்கு பிறந்ததாகவே இருக்கட்டும். இந்த குழந்தையை மட்டும் அவ்வாறு வெட்டி சமமான இரண்டு பாகமாக பிரிக்கவேண்டாம் எங்கிருந்தாலும் இந்த குழந்தை நன்றாக வாழ்ந்தால் போதும்" என்று அழுதாள். உடன் இவ்வாறு தன்னுடைய உரிமை போனாலும் பரவாயில்லை தன்னுடைய குழந்தை உயிருடனும் நலமுடனும் வாழ்ந்தாள் போதும் என்று அழுகின்றவள்தான்உண்மையான தாய்என அந்த மன்னன் அறிந்துகொண்டார் அதனை தொடர்ந்து அரசன் அந்த தாய்தான் உண்மையான தாயென்று தீர்ப்பளித்தார் மேலும் அந்த குழந்தையின் உண்மையான அந்த தாயிடம் அந்த குழந்தையை எடுத்துசெல்லுமாறு அனுமதித்து உத்திரவிட்டர்.
 நீதி: உண்மைதான் எப்போதும் வெற்றி பெறுகிறது.

கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...