ஞாயிறு, 5 ஜூன், 2022

நாம் எதிர்கொள்கின்ற ஒவ்வொரு செயலும் நிகழ்காலத்திலிருந்து வெளிப்படும்


ஒருமுறை அரசன் ஒருவருக்கு  தனது அமைச்சரின் அறிவாற்றலில் திருப்தியடைய வில்லை. எனவே, அவர் தான்கூறும் செய்தியை அமைச்சரின் வீட்டிற்குச் சென்றுஅவரிடம் கூறும்படி தனது தூதுவருக்கு உத்தரவிட்டார்.  அமைச்சரின் பிறந்தநாளின்போது தனது வீட்டிற்கு அரசனின் செய்தியுடன்தூதுவன் வந்தபோது அமைச்சர் மிகவும் மகிழ்ச்சியடைந்தர்.

அரசனின் தூதுவர், “இன்று மாலையில் அமைச்சர் தூக்கிலிடப்படுவார்” என்ற செய்தியை அமைச்சரிடம் கூறினார் இந்தசெய்தியைக் கேட்டதும் அமைச்சரின் வீட்டிலிருந்த அமைச்சரின் நண்பர்கள், உறவினர்கள் ஆகிய அனைவரும் ஆடாது அ்சையாது நின்றுவிட்டனர். அதனைதொடர்ந்து  அங்கு குழுமியிருந்த அமைச்சரின் நண்பர்களும், உறவினர்களும் மிகவருத்தமடைந்து கதறி அழுதனர்

ஆனால் அமைச்சர் மட்டும் இசையையும் நடனத்தையும் அனுபவித்து சிரித்துக்கொண்டு மகிழ்ச்சியாய் இருந்தார். அவ்வாறான அமைச்சரின் செயல் அரசனின் அந்த உத்திரவானது தனக்கானது இல்லை என்பது போல் இருந்தது

 இதை கண்ட அரசனன் தூதுவர் திகைப்புடன்  “இன்று மாலையில் அமைச்சர் தூக்கிலிடப்படுவார்” என்ற அரசனின் செய்தியை அமைச்சரிடம் மீண்டும்அறிவித்தார்

இரண்டாவதாக அரசனின் தூதுவர் கூறியதைக் கேட்ட அமைச்சர், தூதுவரிடம், “தூதுவரே அரசரக்கு என் சார்பாக நன்றியை கூறிடுக. நான் இறப்பதற்கு முன் மகிழ்ச்சியாக செலவிடுவதற்கு இன்னும் சில மணிநேரங்களே உள்ளன. நான் இறக்கவேண்டிய நேரத்தினை என்னிடம் முன்கூட்டியே கூறி பெரிய உதவியை எனக்கு அரசர் செய்திருக்கிறார்  இப்போது நான் இறப்பதற்கு முன் மகிழச்சியாக கொண்டாட முடியும். எனவே தூதுவரே அரசருக்கு என் சார்பாக நன்றியை கூறிவிடுக” எனக்கூறிய பின்னர் அமைச்சர் தொடர்ந்து மகிழச்சியுடன் இசைக்கேற்ப நடனம் ஆட ஆரம்பித்தார்.. இதை கண்ட அரசனின் தூதுவர் அமைச்சரின் நடவடிக்கை குறித்து ஒன்றும் புரியமால்  அரசனிடம் அமைச்சரின் செய்தியை கூறிவிடலாம் என திரும்பிசென்றார்.

தூதுவர் அவ்வரசனின் அவையை அடைந்ததும், , “ அமைச்சரிடம் அவருடைய தூக்குத் தண்டனையபற்றிக் கூறினீர்களா? என்னுடைய உத்தரவினை கேட்ட பிறகு அமைச்சரின் எதிர்வினை என்ன?” என்று  அரசன் தூதுவரிடம் வினவினார்

உடன் தூதுவர் , "அரசே உங்களுடைய உத்தரவினை கேட்டபிறகுதான் அமைச்சர் மகிழ்ச்சியுடன் மிகவும் துள்ளிக் குதித்து நடனமாடிக் கொண்டிருக்கின்றார், அவர் சார்பாக உங்களிடம் நன்றி சொல்லும்படியும் என்னிடம்கூறியனுப்பினார்." என பதிலளித்தார்

தனது சொந்த மரணச் செய்தியில் யாராவது மகிழ்ச்சியாக இருக்க முடியுமா என்று அரசனால் நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை, உண்மையைத் தெரிந்துகொள்ள அரசனே நேரடியாக மந்திரியின் வீட்டிற்குச் சென்றார். அமைச்சர் மகிழ்ச்சியுடன் நடனமாடுவதையும் பாடிக்கொண்டிருப்பதையும் அவ்வரசன் கண்டார்.

மன்னன் அமைச்சரிடம் , “இன்றிரவு உன் மரணம் உள்ளது , ஆயினும் நீ சிரித்துக் கொண்டும் மகிழ்ச்சியுடன் பாடிக்கொண்டும் நடனமாடிக்கொண்டுமிருக்கின்றாய்” என்று கேட்டார்.

அமைச்சர் முதலில்அரசன் தன்னுடைய வீட்டிற்கு வந்ததற்காக நன்றி தெரிவித்துவிட்டு, “இதற்கு முன்பு நான் இவ்வளவு மகிழ்ச்சியில் மூழ்கியதில்லை. ஏனெனில் என்னுடைய சரியான மரண நேரத்தைச் சொல்லி பெரிய உதவி செய்தீர்கள். என்னுடைய  மரணத்தைக் நான் கொண்டாடுவது எனக்கு இப்போது எளிதாகிவிட்டது”. எனக்கூறினார் 

இதைக் கேட்ட மன்னன் வாயடைத்துப் போய் நின்றுவிட்டான், தன் அமைச்சர் நடப்பு காலத்தில் வாழ்ந்து கொண்டிருப்பதையும், மரணத்திற்கு அஞ்சவில்லை என்பதையும் உணர்ந்தார். அரசன் அமைச்சரிடம், “உனக்கு மரணத்தால் வருத்தம் இல்லை என்றால் அது பயனற்றது அதனால் என்னுடைய உத்திரவு நீக்கம்செய்யப்படுகின்றது ." என க்கூறினார் 

கற்றல்: நாம் அனைவரும் அச்சம் நிறைந்த சூழலில் வாழ்கிறோம். ஆனால் நாம் எதிர்கொள்கின்ற ஒவ்வொரு செயலும் நிகழ்காலத்திலிருந்து வெளிப்படும் என்பதால் நாம் மகிழ்ச்சியுடன் வாழ்வது நல்லது

கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...