ஒருமுறை வங்கியின் கிளைஒன்றில் வாடிக்கையாளர் ஒருவர்தன்னுடைய கைச்செலவிற்கு பணம் எடுக்கச் சென்றார். அந்த வாடிக்கையாளர் பணம் எடுப்பதற்கு தேவையானவாறு படிவத்தை சரியாக பூர்த்தி செய்து காசாளரிடம் கொடுத்தார். காசாளர் வாடிக்கையாளர் பணம் எடுப்பதற்காக சமர்ப்பித்த படிவத்தை சரிபார்த்து வாடிக்கையாளர் கோரிய பணத்தைக் கொடுத்தார்.
வாடிக்கையாளர் பணத்தை வாங்கிய பின்னர் சரிபார்த்தபோது, அவர் படிவத்தில் நிரப்பிய ரூ.1,20,000 க்கு பதிலாக 1,40,000 ரூபாயை காசாளர் கொடுத்ததை உணர்ந்தார். காசாளர் தனது தவறைப் பற்றி அறியாததைக் கண்ட வாடிக்கையாளர், அமைதியாக தனது பையில் அந்த பணத்தை வைத்துக்கொண்டு வங்கியிலிருந்து வெளியேறினார்.
அது தன்னுடைய தவறோ இல்லையோ ஆனால் அந்த பணத்தை தன்னுடைய பையில் வைத்தவுடன், தனக்குகூடுதலாக கிடைத்த ரூ.20,000ரூபாய் பற்றி கவலைப்பட ஆரம்பித்தார்.
ஒரு கணம்அந்த வாடிக்கையாளர் அது நம்முடைய பணமன்று அதனால் கூடுதலாக பெற்ற அந்த பணத்தைத் திருப்பித் தர வேண்டும் என்று நினைத்தார், ஆனால் அடுத்த நொடியே தற்செயலாக ஒருவருக்கு அதிகப் பணம் கொடுத்தால் அந்தப் பணத்தைத் திருப்பித் தர யார் முன்வருவார்கள் அதனால்கூடுதலாக கிடைத்த அந்த பணத்தினை அப்படியே வைத்துகொள்வோம்? என மீண்டும் மாற்றியோசித்தார், அவர் கூடுதலாக கிடைத்த அந்த பணத்தை ஏன் திருப்பித் தர வேண்டும் என்று அவரது மனதில் தோன்றியது, ஆனால்கூடுதலாககிடைத்த பணத்தைத் திருப்பித் தராததற்கு அவரது மனம் மீண்டும் ஏதாவது சாக்குபோக்கு அல்லது காரணத்தைக் கூறி கொண்டிருந்தது.
ஆனால் அவரது மனசாட்சியின் குரல் உள்ளே இருந்து கொண்டு யாரோ செய்த தவறை நீ பயன்படுத்திக் கொள்ளக்கூடாது அதனால் கூடுதலாக கிடைத்த அந்த பணத்தினை திருப்பி கொடுத்துவிடு என உறுத்திகொண்டேயிருந்தது
அதனால் அந்த வாடிக்கையாளர்கூடுதலாக கிடைத்த அந்த பணத்தை வைத்துக் கொள்ளலாமா வேண்டாமா என்று முழு நேரமும் யோசித்துக் கொண்டேயிருந்ததால் அவருடைய மனத்தில் அமைதியின்மை அதிகரித்துகொண்டேயிருந்தது. அவர் நேரத்தைப் பார்த்தார், அது வங்கியை மூடும் நேரம். என்பதை காண்பித்தது
அதனால் அந்த வாடிக்கையாளர் உடன் கூடுதலாக அவருக்கு வழங்கப்பட்ட அந்த 20,000 ரூபாயை எடுத்துக்கொண்டு வங்கிக்குத் திரும்பினார். கூடுதலாக கிடைத்த பணத்தைத் திருப்பித் தர முடிவு செய்த உடனேயே, அந்த வாடிக்கையாளரிடைய அமைதியின்மையும் பதற்றமும் குறைய ஆரம்பித்தன
வங்கியின் பணிநேரம் முடிவடைவதற்குள் வாடிக்கையாளர் வங்கியை அடைந்து காசாளரிடம் பணத்தைத் திருப்பிக் கொடுத்தார்.
வாடிக்கையாளர் பணத்தை திருப்பி கொடுத்ததும், காசாளர் நிம்மதி பெருமூச்சு விட்டார். தொடர்ந்து காசாளர், “தம்பி, நீங்கள் எனக்கு ஒரு பெரிய உதவி செய்தீர்கள், ஏனென்றால் நீங்கள் இந்த பணத்தை திருப்பித் தரவில்லை என்றால், எனது சம்பளத்தில் இருந்து இந்த பணம் பிடித்தம் செய்யப்பட்டிருக்கும். மிக்க நன்றி, இந்த பணத்தை உங்கள் குழந்தைகளுக்கு இனிப்புகள் வாங்க பயன்படுத்திடுக" எனக்கூறி. தனது சட்டைப் பையில் இருந்து ஆயிரம் ரூபாயை எடுத்து வாடிக்கையாளரிடம் கொடுத்தார்,
வாடிக்கையாளர் சிரித்துக் கொண்டே, “சகோதரரே, நான்தான் உங்களுக்கு நன்றி யுள்ளவனாக இருந்து உபசரிப்பு செய்யவேண்டியுள்ளவானக இருக்கிறேன்." எனதக்கூறினார்.
காசாளர் ஆச்சரியப்பட்டு, "ஆனால் நீங்கள் ஏன் எனக்கு நன்றி தெரிவிக்கின்றீர்கள்? " எனக்கேட்டார
அதற்கு வாடிக்கையாளர், "நீங்கள் தவறுதலாக கொடுத்த 20,000 ரூபாய், ஆனதுநான் என்னை சுயமதிப்பீடு செய்ய எனக்கு ஒரு வாய்ப்பளித்தது. இந்த தவறை நீங்கள் செய்யாமல் இருந்திருந்தால், நான் என் பேராசையை வென்று அதிலிருந்து வெளியே வருவதன் மூலம் என்னால் வெல்ல முடிந்திருக்காது. . பல மணிநேர என்னுடைய மனப் போராட்டத்திற்குப் பிறகுதான் என்னால் வெற்றி பெற முடிந்தது. இந்த அரிய வாய்ப்புக்கு நன்றி” என்று கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக