சனி, 1 ஜூன், 2019

மரியாதை என்பது இருவழிப்பாதை போன்றது


நமது இந்திய நாட்டின் எல்லையோரத்தில் காவல்பணியாற்றிடும் தரைப்படையில் புதியதாக சேர்ந்த காவல்படை அலுவலர் ஒருவர் ஒருநாள் தன்னுடைய கட்டுப்-பாட்டில் உள்ள அனைத்து காவலர்களும் விழிப்புடன் பணிபுரிகின்றார்களா என சுற்றி பார்த்துகொண்டேவந்தார்.அப்போது ஒரு காவலர் மட்டும் இந்த இளம்-காவல்படை அலுவலர் வரும்போது மரியாதை நிமித்தமாக வணக்கம் செய்யாமல் வேடிக்கை பார்த்து கொண்டு நின்றுகொண்டிருந்தார் அதனை கண்ணுற்ற நமது இளம்காவல்படை அலுவலர் ' மரியாதை நிமித்தமான வணக்கம்கூடநமக்கு செய்யாமல் நின்றுகொண்டிருப்பதா' என கோபமுற்று "ஏன் எனக்கு வணக்கம் செலுத்தாமல் நின்று கொண்டுள்ளாய்!” என அந்த காவலரிடம் வினவினார். அதனை தொடர்ந்து "ஐயா! நீங்கள் வருவதை நான் பார்க்கவில்லை" எனஅந்த காவலர் பதில் கூறினார்.அதனால் மிகவும் கோபமுற்று "அப்படியா! என்னுடைய வருகை அவ்வளவு அலட்சியமாகி விட்டதா! இந்த செயலிற்கு தண்டனையாக நீ எனக்கு100 முறை வணக்கம் செலுத்த வேண்டும்" என அந்த இளம்காவல்படை அலுவலர் உத்திரவிட்டார். அப்போது அந்த வழியாக தரைப்படை தலைமை அலுவலர் ஃபீல்டு மார்ஷல் சாம் மானக்ஸா சென்று கொண்டிருந்தார் இந்த செயல்களை பார்த்து தன்னுடைய வாகணத்தை நிறுத்தம் செய்து "இங்கு என்ன பிரச்சினை?” என வினவினார் "அதுஒன்றும் இல்லை,ஐயா! நான் வழக்கம்போன்று அனைத்து காவலர்களும் விழிப்புடன் பணிபுரிகின்றார்களா என சுற்றி பார்த்து கொண்டு வந்தேன் இந்த காவலர் மட்டும் நான் வரும்போது எனக்கு வணக்கம் செலுத்தாமல் வேடிக்கைபார்த்து கொண்டிருந்தார் அதனால் இவருக்கு தண்டனையாக எனக்கு100 முறை வணக்கம் செலுத்தவேண்டும்" என க்கூறிக்கொண்டிருந்தேன். என்றார் இளம்காவல்படை அலுவலர். "அப்படியா சரிசரி அந்த காவலர் வணக்கம் செலுத்திடும்போது பதிலுக்கு நீங்களும் வணக்கம் செலுத்துங்கள்" என தரைப்படை தலைமை அலுவலர் இளம்காவல்படை அலுவலருக்கு ஆலோசனை கூறிச்-சென்றார். அதனை தொடர்ந்து அடுத்த இரண்டு மணிநேரமாக அந்த காவலர் 100முறைஅந்த இளம்காவல்படை அலுவலருக்கு வணக்கம் செய்தார் அதனை ஏற்று அந்த இளம்காவல்படை அலுவலரும் 100முறை பதில் வணக்கம் செய்தார் .மரியாதை என்பது இருவழிப்பாதை போன்றது எனஅந்த இளம்காவல்படை அலுவலர் இந்த செயலின் வாயிலாகதெரிந்து கொண்டார்

கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...