அது ஒரு மிகவும் வெம்மைமிகுந்த கோடைக்காலநாளாகும் காட்டில் வாழ்ந்து வந்த சிங்கம் ஒன்று மிகவும் பசியோடு உணவு எதுவும் கிடைக்காமல் உணவிற்காக அங்கிங்கும் அலைந்து திரிந்து கொண்டிருந்து ஆனாலும் ஒரு சிறிய முயலைகூட தன்னுடைய உணவிற்காகஅந்த சிங்கத்தால் கண்டுபிடிக்க முடியவில்லை அதற்குமேல் அந்த வெயிலில் இரைதேடமுடியாதுஎன சோர்வுற்று ஒருமரத்தின் நிழலில் இளைப்பாறி சிறிதுநேரம் ஓய்வெடுத்த-பின்னர் தன்னுடைய உணவிற்கானவேட்டையை தொடரலாம் என முடிவு-செய்து அந்த மரத்தின் கீழ் வந்தது அப்போது வெயிலிற்காக சிறிதுநேரம் ஓய்வெடுக்கலாம்என சிறியமுயல் ஒன்று அதே மரத்தில்ஓய்வெடுத்து கொண்டிருந்தது உடன் அந்த சிறியமுயலை சிங்கமானது தன்னுடைய வாயால் பற்றி உண்ணலாம் எனமுயலும் போது, மான் ஒன்று வெயிலிற்காக அதே மரத்தின் நிழலில் சிறிது ஓய்வெடுக்கலாம் என வந்து கொண்டி-ருந்ததை கண்டது அதனால் சிங்கமானத தன்னுடைய பிடியில் இருந்த முயல் மிகவும் சிறியது நம்முடைய பசிக்கு சோளப்பொறி போன்று பத்தாது அதனால் இந்த சிறியமுயலை வாயில் வைத் துகொண்டு பெரிய அந்தமானை பிடித்து உண்ண-முடியாது என தன்னுடைய வாயால் கவ்வியிருந்த சிறியமுயலை விட்டிட்டு மானை பிடிப்பதற்காக தாவியது மரத்தின் நிழலில் சிங்கம் இருந்ததை ஏற்கனவே பார்த்து விட்ட மானானது தற்போது உயிர்பிழைத்தால் போதும் நிழலில் ஒதுங்கி ஓய்வெடுப்பதை பின்னர் பார்த்து கொள்ளலாம் என சிட்டாக ஒடியது சிங்கமானது வெகுதொலைவு வரை அந்த மானை தூரத்தி சென்றாலும் சிங்கத்தால் அந்த மானை பிடிக்கமுடியவில்லை அதனால் அந்த சிங்கமானது மானையும் பிடிக்கமுடியாமல் கையிலிருந்த சிறியமுயலையும் விட்டுவிட்டோமே என சோர்வுற்ற அருகிலிருந்த மரத்தின் நிழலில் பசியால் அதற்குமேல் ஓடமுடியாமல் படுத்துவிட்டது
எதிரில் தெரியும் பலாப்பழத்தைவிட கையிலிருக்கும் சிறிய கலாப்பழமே சிறந்தது அதிக மதிப்புள்ளதுஎன அறிந்து கொள்க
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக