50 பேர் கொண்ட ஒரு கருத்தரங்கில் கூட்டத்தில் அந்த கூட்டத்தின் பேச்சாளர் திடீரென்று தன்னுடைய பேச்சினை நிறுத்தி ஒவ்வொருவரிடமும் பலூன் ஒன்றினை கொடுத்தார். தொடர்ந்து ஒவ்வொருவரும் மார்க்கர் பேனாவைப் பயன்படுத்தி அவரவர்களின் பெயரை அவரவர்களுக்கு வழங்கிய பலூன்களில் எழுதும்படி கோரினார். பின்னர் அனைத்து பலூன்களும் ஒன்றாக சேகரிக்கப்பட்டு அருகிலிருந்க மற்றொரு அறையில் வைக்கப்பட்டன.கூட்டத்தில் கலந்துகொண்ட அனைவரும் பலூன் வைக்கப்பட்ட அறைக்குள்சென்ற 5 நிமிடங்களுக்குள் அவரவர்களும் தத்தமது பெயர் எழுதப்பட்ட பலூனை கண்டுபிடித்து எடுத்துவருமாறு கோரப்பட்டனர் உடன் எல்லோரும் அந்த அறைக்குள் சென்று ஒருவருக்கொருவர்முட்டி மோதி தங்களுடைய பெயர் எழுதப்பட்ட பலூனை தேடிக்கொண்டேஇருந்தனர் அனுமதிக்கப்பட்ட5 நிமிடங்களின் இறுதியில் யாராலும் தம்முடைய பெயர் எழுதிய பலூனை கண்டுபிடிக்கவே முடியவில்லை. அதன்பின்னர் அப்பேச்சாளர் பார்வையாளரிடம் அதே அறைக்குள் சென்ற ஏதாவதுவொரு பலூனை எடுத்துவருமாறு கோரினார் இப்போது ஓரிரு நிமிடங்களில் அனைவரும் ஆளுக்கொரு பலூனை எடுத்து கொண்டுவந்தசேர்ந்தனர் இப்போது அவர்கள் அனைவரும் ஆளுக்கொன்றாக எடுத்துவந்த பலூனில் எழுதியுள்ள பெயரை படித்துபார்க்கு மாறு கோரப்பட்டனர் என்ன ஆச்சர்யம் எல்லோருக்கும் அவரவர்களின் சொந்தபெயர்களுடன் கூடிய பலூன் கிடைத்திருந்தது.
பொதுமக்களே இதே போன்றதுதான் நம்முடைய வாழ்க்கையும் எல்லோரும் தாம் மட்டும் மகிழ்ச்சியாக வாழ்ந்தால் போதும் எனஎல்லோரும் வெளிப்படையாக மகிழ்ச்சியான வாழ்க்கையை , அது எங்கே என்று தெரியாமல் தேடுகிறார்கள் அவ்வாறு முயல்வதால் நாமனைவரும் மகழ்ச்சியற்று ஒருவருக்கொருவர் அடித்துகொண்டு அல்லல்பட்டு வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் அதற்கு பதிலாக மற்றவர்களுக்கு தொந்திரவு வழங்காமல் வெளியே எங்கும் தேடாமல் அவரவர்களும் அவரவர்களின் சொந்த வாழ்க்கையை வாழ்ந்தால் மகிழ்ச்சியை பெறுவீர்கள்.
இதுதான் மனித வாழ்க்கைக்கான நோக்கம். என பேசிமுடித்தார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக