சனி, 12 மார்ச், 2022

ஓவியரும் பணக்கார பெண்ணின் உருவப்படமும்



ஒரு நகரத்தில்ஓவியர் ஒருவர் வாழ்ந்துவந்தார், அவருடைய புத்திசாலித்தனமான ஓவியத்தினால்ர் அந்நகரம் முழுவதும் மிகவும் பிரபலமாக அறியப்பட்டார். அவருடன் ஓவியம் வரைகின்ற பயிற்சியாளர் ஒருவரும் வாழ்ந்துவந்தார் ஒரு நாள் ஒரு பணக்கார பெண்மணி தனது நாயுடன் அவரைச் சந்தித்து, தனது நாயுடன் இருக்குமாறான தோற்றத்துடன் தன்னை ஓவியம் வரையுமாறு கோரினார், அந்த ஓவியரும் ஒரு வார கடின உழைப்பிற்குப் பிறகு, நாயுடன் சேரந்துநிற்கும் பணக்கார பெண்மணியின் ஓவியத்தினை ஒருவழியாக வரைந்து முடித்தார். அந்த வார முடிவில் அந்த பணக்கார பெண்மனி தன்னுடைய நாயுடன் தான்சேர்ந்து நிற்கும் தன்னுடைய ஓவியத்தை பெற்று கொள்ள வந்தாள், அவளுடைய நாயும் அவளுடன் வந்திருந்தது.

ஓவியர் அந்த உருவப்படத்தைஅந்த பணக்கார பெண்மனியிடம் காட்டினார்.

அந்த பணக்கார பெண்மணி அந்த ஓவியத்தைப் பார்த்தார் ஓவியம் நன்றாகத்தான் இருந்தது ஆனால் அவளுடைய நாய் அந்த ஓவியத்தைப் பார்த்து அமைதியாக இருந்தது அதனால் அந்த பணக்கார பெண்மனி, “நீ வரைந்த என்னுடைய ஓவியத்தைைபார்த்து என்னுடைய நாய் ஒன்றும் செய்யாமல் அமைதியாக இருக்கின்றது உன்னுடைய ஓவியம் என்னுடைய நாயைக்கூட கவரமுடியவில்லை. அதனால் இதுவெறும் குப்பைதான் உன்னுடைய ஓவியத்தைப் பற்றி பலரும் மிகவும் பாராட்டியதால்தான் நான் இங்கு வந்தேன், ஆனால் அது தவறு. இந்த ஓவியத்திற்கு பணம் எதுவும் தரமாட்டேன். நீயே இதை வைத்துகொள்", என கோபமாக கூறிவிட்டு அவள் கிளம்ப தயாரானாள் .

அப்போது, அந்த ஓவியர் அவளைத் தடுத்து நிறுத்தி, “அம்மா, உங்களுடைய நாயை இந்த ஓவியம் கவரவில்லை என்பதுதானே உங்களுடைய விருப்பம், நாளைக் காலை வாருங்கள், அதற்குள் நான் இந்த ஓவியத்தில் அவ்வாறான தவறைத் திருத்தி சரிசெய்துவிடுகின்றேன். நாளை உங்கள் நாய்க்கும் இந்த ஓவியம் பிடிக்கும் என்று நான் நம்புகிறேன்.", என கேட்டுகொண்டார்

அடுத்த நாள், அந்த பணக்கார பெண்மனி மீண்டும் தனது நாயுடன் வந்துசேர்ந்தாள்

இந்த முறை பணக்கார பெண்மணி தனது நாயுடன் தன்னுடைய ஓவியத்தை காண அருகில் வந்தவுடன், அந்த பெண்மனியினுடைய நாய் மிகவிரைவாக ஓடிவந்து அந்த ஓவியத்தை நக்க ஆரம்பித்தது, இதைப் பார்த்தஅந்த பணக்கார பெண்மணி தனது நாய்க்கு தன்னுடைய நாயுடனான அந்த ஓவியம் மிகவும் பிடித்துவிட்டது என மிக மகிழ்ச் சியடைந்தார். அந்த ஓவியத்திற்கான பணத்தை அந்த ஓவியரிடம் கொடுத்துவிட்டு ஓவியத்தை வாங்கி கொண்டு திரும்பி சென்றுவிட்டாள்

இதைப் பார்த்த ஓவியரின் பயிற்சியாளர் மிகவும் ஆர்வமாகி அந்த ஓவியரிடம் , “நேற்று, இதே ஓவியத்தை அந்த பணக்கார பெண்மனியின் நாய் திரும்பிகூட பார்க்கவில்லை ஆனால் இன்றுஅந்த நாய் வேகமாக ஓடிவந்து அதே ஓவியத்தினை நக்கிக்கொண்டிருந்ததே. இது எப்படி சாத்தியம்?" என சந்தேகத்தினை எழுப்பினார்

ஓவியர் சிரித்துக்கொண்டே, "தம்பி நான்நேற்று இரவு அந்த ஓவியத்தின் கீழ் விளிம்பில் சிறிய இறைச்சித் துண்டு ஒன்றினை கொண்டு வந்துத் தேய்த்தேன், அந்த இறைச்சியின் வாசனையால் இன்று அந்த பணக்கார பெண்மனியினுடைய நாயானது அதே ஓவியத்தை நக்க ஆரம்பித்துவிட்டது" , என பதிலளித்தார்


கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...