சனி, 26 மார்ச், 2022

பார்வையற்ற கணவன்


ஒருவன் மிக அழகான பெண்ஒருத்தியை மணந்தான் .திருமணத்திற்கு பிறகு அவர்கள் இருவரும் மிகவும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர். அந்த மனிதன் தன்னுடைய மனைவியை மிகவும் நேசித்தான்

ஆனால் சில மாதங்களுக்குப் பிறகு, தனக்கு தோல் நோய் வந்தது என்பதையும், அதன் காரணமாக படிப்படியாக  தனது அழகை இழக்கின்றோம் என்பதையும்அந்த  மனைவி அறிந்தார்.

இதை அறிந்த மனைவி , “நான் அழகாயில்லாமல் இருந்தால், என் கணவர் என்னை வெறுக்க ஆரம்பித்துவிடுவார்...அதனை பொறுத்துக் கொண்டு என்னால் வாழ முடியாது.",மனதிற்குள் யோசிக்க ஆரம்பித்தாள்

இதற்கிடையில் ஒரு நாள் அவளுடைய கணவன் ஏதோ பணிசெய்வது தொடர்பாக வெளியூர் செல்ல நேர்ந்தது.  பணி முடிந்து தன்னுடைய வீட்டிற்கு திரும்பி கொண்டி ருந்தபோது ஒரு விபத்தில் சிக்கினார். அதனால் அந்த மனிதன் தனது இரண்டு கண்களையும் இழந்தார்

இதையெல்லாம் மீறி, அவர்களின் திருமண வாழ்க்கை வழக்கமாகவே நடந்துவந்தது.

சிறிது காலம் கழிந்தபின்னர், அம்மனைவி தனதுதோல் நோயால் தன்னுடைய அழகை முற்றிலும் இழந்தாள். அதனால் அம்மனைவயின் உருவம் பார்க்க சகிக்காமல் அசிங்கமாக மாறிவிட்டது, ஆனால் அவளுடைய பார்வையற்ற கணவனால் அதைப் பார்க்க முடியவில்லை. அதனால்  அவர்களின் திருமண வாழ்க்கை பாதிக்கவில்லை

அவளுடைய கணவன் எப்போதும் போல இருந்ததால் அவர்களுடைய திருமண வாழ்க்கையும் எந்த பிரச்சினையும் இல்லாமல் சென்றுகொண்டிருந்தது

ஒரு நாள் மனைவி இறந்து போனார். இப்போது அந்த மனிதன் மிகவும் சோகமாகவும் தனியாகவும் இருந்தார்.அதனால் அந்த மனிதன் தான் வாழும்  நகரத்தை விட்டு வெளியேற முடிவு செய்தார்.

தன்னுடைய மனைவிக்கான அனைத்து இறுதிச் சடங்குகளையும் செய்து முடித்தபின்னர். அடுத்த நாள்,புறப்படத் தயாராக இருந்தபோது, அந்த மனிதனுடைய பக்கத்து வீட்டுக்காரர் , அந்த மனிதனிடம் சென்று, “உங்களுக்கோ இரு கண்களும் பார்வை தெரியாததால் பல ஆண்டுகளாக உங்களுக்கு உதவியாகவும் ஆதரவாகவும் உங்கள் மனைவி எப்போதும் இருந்தார் உங்களுடைய மனைவியின் ஆதரவின்றி நீங்கள் எவ்வாறுதனியாக வாழ முடியும்? அது உங்களுக்கு மிகக்கடினமாக இருக்குமே." என அனுதாபம் தெரிவித்தார்

அதற்கு அந்த மனிதன், “நண்பரே, நான் பார்வையற்றவன் அன்று. நான் பார்வையற்றவன் போன்று நடித்துக் கொண்டிருந்தேன். ஏனெனில், என் மனைவிக்கு தன் தோல்நோயைப் பற்றித் தெரிந்ததும், அவள் அதைப் பற்றி கவலைப்படுவதையும் பயப்படுவதையும் உணர்ந்தேன்  என் மனைவிக்கு அவளின் அசிங்கமான தோற்றத்தை நான் பார்க்க முடியும் என்று தெரிந்திருந்தால், அவளுடைய நோயை விட அது அவளை அதிகம் பாதித்திருக்கும். அவள் மிகவும் நல்ல மனைவி, நான் அவளை மகிழ்ச்சியாக வைத்திருக்க விரும்பினேன். அதனால்தான் இத்தனை வருடங்களாக நான் பார்வையற்றவனாக நடித்தேன்." என பதில் கூறினார் 

கற்றல் மகிழ்ச்சியாக இருக்க, சில சமயங்களில், ஒருவருக்கொருவர் குறைபாடுகளை சுட்டிகாட்டாமல் அனுசரித்து வாழ பழகிகொள்ள வேண்டும்.

கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...