சனி, 2 ஏப்ரல், 2022

அரசனின் கேள்வியும் அறிஞரின் சுவாரசியமான பதிலும்

 
 ஒரு நாள் அரசன் ஒருவன் தனது நாட்டிற்கு அறிஞர் ஒருவர் வருகை தருவதை பற்றி அறிந்தார். அம்மன்னன், அந்த அறிஞரை சந்திக்க மிகவும் ஆர்வமாக இருந்தார் அதனால் அவ்வறிஞரை தன்னுடைய அரசவைக்கு வருமாறு அழைத்தார், அவ்வறிஞர் அவ்வரசனின் அவைக்கு வந்தபோது,  அவரிடம், “நீங்கள் மிகப்பெரிய அறிஞர் என நான் மிக மகி்ழ்ச்சியடைகின்றேன் என் மனதில் கேள்வி  ஒன்று எழுந்துள்ளது அதற்கான பதிலை தங்களிடம் அறிந்து கொள்ளவிரும்புகின்றேன் ஆனால் எனது கேள்விக்கு தங்களால் பதிலளிக்க முடியாவிட்டால் நீங்கள் தண்டிக்கப்படுவீர்கள்.” எனக்கூறினார்
உடன் அவ்வறிஞரும் “ அரசே தாராளமாக கேளுங்கள் அதற்கான பதிலை நான் கண்டிப்பாக கூறுகின்றேன்” என சிரித்துக் கொண்டே சம்மதித்தார் .அதன்பின்னர் அவ்வரசன், ‘மனித உடலின் சிறந்த உறுப்பு எது? அதனை உங்களால் கொண்டு வர முடியுமா?” என வினவினார்
அதனை தொடர்ந்து அவ்வறிஞர் சிறிது நேரம் வெளியே சென்று, இறந்த மனிதனின் நாக்குடன் திரும்பி வந்து, "இதோ, இதுதான் மனித உடலின் சிறந்த உறுப்பு" என்று மன்னரிடம் காட்டினார்.இப்போது, அந்த மன்னன், ‘மனித உடலின் மிக மோசமான உறுப்பு எது?" என மீண்டும் மற்றொரு வினா எழுப்பினார்
அதனை தொடர்ந்து அவ்வறிஞர்  மீண்டும் சிறிது நேரம் வெளியே சென்று இறந்த மனிதனின் நாக்குடன் திரும்பி வந்து அந்த அரசரிடம் காட்டி, "இதோ மனித உடலின் மிக மோசமான உறுப்பு" என காண்பித்தார்.
அந்த அரசன் தன்னுடைய இரண்டாவது கேள்விக்கும் அவ்வறிஞர்  மனிதனுடைய அதே நாக்கை மீண்டும் கொண்டுவந்து காண்பிப்பதைக் கண்ட மன்னன், "என்னுடைய இரண்டு வெவ்வேறான கேள்விக்கும்  மனிதனின் ஒரே உறுப்பினை ஏன் கொண்டு வந்து காண்பிக்கின்றீர்? அது எவ்வாறு மனித உடலின் சிறந்த உறுப்பாகவும் மோசமான உறுப்பாகவும் இருக்க முடியும்?"  என மிகப்பெரும் சந்தேகத்தினை எழுப்பினார்
உடன் அவ்வறிஞர், "அரசே, நாமனைவரும் இந்த நாவின் உதவியால் பேசுகிறோம், நாம்  நல்லதையும்இந்த நாவினால்தான் பேசுகின்றோம் அவ்வாறே  கெட்டதையும் இந்த நாவினால்தான் பேசுகின்றோம் அதாவது நல்லது கெட்டது ஆகிய இரண்டையும் நம்முடைய ஒரே நாவினால்தான் பேசுகிறோம், அதனால்தான் நாம் வாழும் இந்த சமுதாயத்தில் எல்லா பிரச்சினையும் உருவாகி கெட்டது நடக்கின்றது   அல்லது அந்த பிரச்சினைக்கான தீர்வு உருவாகி நல்லதும் நடக்கின்றது." என விவரம் கூறினார். இந்தவிவரத்தை கேட்டு மன்னன் மிகமகிழ்ச்சியடைந்து அந்த அந்த அறிஞருக்கு வெகுமதி அளித்தார்.
கற்றல்: ஒருவர் எப்போதும் பொறுப்புடன் பேச வேண்டும்

கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...