ஒரு நகரத்தில், ஏழை தையல்காரர் ஒருவர் தனது ஒரே மகனுடன் தங்களுடைய சிறிய வீட்டில் வசித்து வந்தார். தன் மகன் நன்றாகப் படித்து நல்ல பணியில் சேர வேண்டும் என்ற கனவு அவருக்கு இருந்தது.
எனவே, அவர்களின் தற்போதைய நிலைமை எப்படி இருந்தாலும், தங்களுடைய மகனுக்கு சிறந்த கல்வியைப் பெற அவர் முடிவு செய்தார். மகனின் கல்விக்காக தந்தை அல்லும் பகலும் அயராது உழைத்து பணம் சம்பாதித்தார். அவரது மகனும் நன்கு கவனத்துடன் படித்தார்.
பல ஆண்டுகளுக்குப் பிறகு, தந்தையின் கனவு நனவாகியது, அவரது மகன் அருகிலுள்ள நகரத்தின் பெரிய நிறுவனத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஒரு நாள், தந்தை தனது மகனின் அலுவலகத்திற்குச் செல்ல முடிவு செய்தார். தந்தை தனது மகனை அலுவலகத்தில் காண வந்தபோது, அவரது மகன் மிகப்பெரிய நிறுவனத்தின் நிருவாக அலுவலகத்தில் மிக ஆடம்பரமான நாற்காலியில் அமர்ந்திருப்பதைக் கண்டு மிகவும் மகிழ்ச்சிஅடைந்தார். அவருடைய மகன் தன் தந்தையைப் பார்த்தவுடனேயே மிகவும் மகிழ்ச்சியடைந்து நாற்காலியில் இருந்து எழுந்து அவரை வரவேற்றான்
தந்தை சிரித்துக்கொண்டே மகனை நாற்காலியில் உட்கார வைத்து, மகனின் பின்னால் நின்று, மகனின் தோளில் கைகளை வைத்து கொண்டு, “மகனே, இப்போது யார் மிகவும் சக்திவாய்ந்த மனிதராக உணர்கின்றாய்?" என வினவினார்
அதற்கு அவருடை மகன் , "அப்பா, நான்தான் மிகவும் சக்திவாய்ந்த நபராக உணர்கிறேன்." என பதிலளித்தான்
உடன் தங்களுடைய மகன் தன்னை மிகவும் சக்தி வாய்ந்தவர் என்று கூறுவான் என எதிர்பார்த்திருந்தார், ஆனால் மகனின் பதிலால் மிகவும் ஏமாற்றமடைந்த அவர், "சரிதான் மகனே" என்று பதிலளித்தார். தங்களுடைய மகனின் அலுவலகத்தை சுற்றி பார்ததுவிட்டு தங்களுடைய வீட்டிற்கு திரும்பி செல்வதற்காக அந்த அலுவலகத்தில் இருந்து வெளியேறவிருந்தார்
ஆனால் புறப்படுவதற்கு முன், அந்த தந்தை தங்களுடைய மகனிடம் , "மகனே நீ இன்னும் சக்திவாய்ந்த நபர் என்று நினைக்கின்றாய்?" என அதே கேள்வியைக் கேட்டார்
அதற்கு மகன், "இல்லை, தந்தையே, தற்போது யாரேனும் மிகவும் சக்தி வாய்ந்தவர் யார் என வினவினால், அதற்கு நீங்கள்தான் என நான் பதில்கூறுவேன்" என்று பதிலளித்தார்.அதனைதொடர்ந்து அவரது தந்தை “ஆனால்சற்றுமுன் நீ கூறினாயே, நீதான் மிகவும் சக்தி வாய்ந்தவன் என்று ” என மீண்டும் சந்தேகம் எழுப்பினார்
அதனை தொடர்ந்து மகன் சிரித்துக்கொண்டே , "ஆம், அப்பா அப்போது நான் கூறினேன், ஏனெனில் அந்த நேரத்தில் உலகின் மிகவும் சக்திவாய்ந்த நபரின் கைகள் என் தோள்களில் இருந்தன, எனவே அந்த நேரத்தில் நான் மிகவும் சக்திவாய்ந்தவனாக உணர்ந்தேன்." என பதில் கூறினார் இதைக் கேட்ட தந்தை கண்களில் நீர் பெருக, மகனைக் கட்டி்அணைத்துக் கொண்டார்
கற்றல்: நம் பெற்றோரின் அன்பும்அறவணைப்புமே நம்மை இந்த உலகின் மிக சக்திவாய்ந்த நபராக மாற்றும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக