சனி, 30 ஏப்ரல், 2022

விவசாயியின்பழத்தோட்டம் திருடன் மன்னிப்பு கோருதல்


 விவசாயி ஒருவர் தங்களுடைய வீட்டைச் சுற்றி பெரிய பழத்தோட்டம் வைத்திருந்தார். அவர் தனது பழத்தோட்டத்தில் பல்வேறு வகையான பழ மரங்களை நட்டு வளர்த்துவந்தார், அவற்றை ஆண்டு முழுவதும் விடாமுயற்சியுடன் நன்கு  கவணித்துபராமரித்து வந்தார். அவர் அந்த தோட்டத்தில்கு பழுத்த பழங்களை குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் பகிர்ந்து கொண்டும், மிகுதியை அருகிலுள்ள சந்தையில்  எடுத்து சென்று விற்பனை செய்தும்வந்தார்

ஒரு நாள், அவ்விவசாயி தோட்டத்தில் தங்களுடைய மகனுடன் பழங்களைப் பறித்துக் கொண்டிருந்தபோது,  வேறொரு நபர் அந்த தோட்டத்தின்பழமரத்தில் ஒருகிளையில் அமர்ந்து பழங்களைப் பறித்து தின்றுகொண்டுஇருப்பவதைக் கண்டார்.

அதனைப் பார்த்த அவர் கோபமடைந்து, ‘யார் நீ? பழத்தோட்டத்தில் என்ன செய்து கொண்டிருக்கிறாய்? அடுத்தநபரின் தோட்டத்து பழங்களைத் திருடுவது உனக்கு வெட்கமாக இல்லையா?” என வினவினார் 

பழமரத்தின் கிளையில் அமர்ந்திருந்த அந்த நபர் அவருடைய கேள்விக்கு பதில்கூறாமல் தொடர்ந்து பழங்களைப் பறித்து தின்றுக் கொண்டே இருந்தான்

அதனால் அவ்விவசாயி அதிக கோபமடைந்து, "இந்த மரங்களை நான் நட்டுதண்ணீர் பாய்ச்சி ஆண்டு முழுவதும் கவணித்துபராமரித்து வருகிறேன், இந்த பழத்தோட்டத்தில் என் அனுமதியின்றி பழங்களை எடுக்க உனக்கு உரிமை இல்லை. உடனே கீழே இறங்கி தோட்டத்தை விட்டு சென்றுவிடு” என கத்தினார் 

மரத்தில் அமர்ந்திருந்த அந்தநபர், “நான் ஏன் கீழே இறங்க வேண்டும்? இது இயற்கையான தோட்டம், நாமனைவரும் இயற்கையாக வந்தவர்கள், அதனால் இந்த மரத்திலிருந்து பழங்களை பறிதது தின்பதற்கு  எனக்கு முழு உரிமை உண்டு.  இடையில் நீ ஒன்றும் குறுக்கிடவேண்டாம்.” என பதில் கூறினான்

இதைக் கேட்ட விவசாயி, தங்களுடைய  மகனை அழைத்து உடனே வீட்டிற்குள் சென்றுஒரு நீண்டதடியை எடுத்துக்கொண்டு வரும்படி கோரினார். மகன் தடியுடன் திரும்பி வந்ததும், அவ்விவசாயிஆனவர் அந்த    தடியால் அந்த நபரை அடிக்க ஆரம்பித்தார்

அடிபலமாக விழ ஆரம்பித்ததும் அந்தநபர் வலி தாங்க முடியாமல் , “என்னை ஏன் அடிக்கிறாய்? அவ்வாறு செய்ய உனக்கு உரிமை இல்லை” .என கத்தி கூக்குரலிட ஆரம்பித்தான் விவசாயி எதுவும் செவிசாய்க்கவில்லை, தொடர்ந்து அந்நபரைத்தடியால் அடித்துகொண்டேயிருந்தார்.

அந்த நபர் , “ நீதிக்கும் நேர்மைக்கும் நீங்கள் பயப்படமாட்டீர்களா? நீங்கள் ஒரு அப்பாவியை அடிக்கின்றீர்கள், என தெரியவில்லையா இதற்காக நீங்கள் கண்டிப்பாக  தண்டிக்கப் படுவீர்கள்.” என அடியின் வலி பொறுக்கமுடியாமல்மீண்டும் கத்தினான்

விவசாயி சிரித்துக் கொண்டே, ‘நான் ஏன் பயப்பட வேண்டும்? என் கையில் இருக்கும் இந்த தடிஇயற்கைக்கு  சொந்தமானது. நானும் இயற்கையாக உருவானவன், அதனால் நான் யாருக்காகவும் எதற்காகவும் பயப்படத் தேவையில்லை,  இடையில் நீ ஒன்றும் பேச வேண்டாம்.”எனக்கூறியவாறு அந்த அந்த நபரை தொடர்ந்து தடியால் அடித்து கொண்டேயிருந்தார்

இதைக் கேட்ட அந்த நபர் தன் தவறை உணர்ந்து உடன்  மரத்திலிருந்து கீழே இறங்கி வந்து, “ ஐயா என்னை அடிக்காதீர்கள். உங்கள் தோட்டத்திலிருந்து பழங்களைத் திருடியதற்காக என்னை மன்னியுங்கள். இது உங்களுடைய தோட்டம், நீங்கள் ஆண்டு முழுவதும் உழைத்து இந்த பழமரங்களை பராமரிக்கின்றீர்கள் என்பதை நான் இப்போது புரிந்துகொள்கிறேன், எனவே பழங்களைப் பறிக்க நான் உங்கள் அனுமதியைப் பெற்றிருக்க வேண்டும். நான் கூறியது தவறு. இனிமேல் இதை செய்ய மாட்டேன். தயவு செய்து என்னை மன்னித்து விடுங்கள்." என மன்னிப்பு கோரினான் 

அதற்கு விவசாயி, “நீ உன்னுடைய தவறை உணர்ந்ததால், நான் அடிக்காமல் விட்டுவிடுகின்றேன், ஆனால் இயற்கையின் பெயரைச் சொல்லி மற்றவர்களை முட்டாளாக்க முயற்சிக்காதே உடனே இந்த இடத்தை விட்டு ஓடிவிடு மீண்டும் இவ்வாறான தவறினை செய்யாதே"  என அந்த அந்த நபரை எச்சரித்து அனுப்பினார்.


கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...