ஒருமுறை அரசன் ஒருவன் குதிரையின் மீது ஏறிதனியே காட்டுக் சென்று கொண்டிருந்தார். அவர் ஒரு குடிசையைக் கடந்து சென்றபோது, அங்கு கூண்டில் ஒரு கிளி இருப்பதைக் கண்டார்.அரசன் அந்த வழியே செல்வதைக் கண்டதும் அந்த கூண்டுக்கிளி “ஓடு...ஓடு பிடி.. பிடி உடனே அவனை பிடித்து அவனுடைய... குதிரையைப் பிடுங்கு... அவனிடமிருக்கும் பணத்தை பிடுங்கு” என்று கூவியது.
தான் கொள்ளைக்காரர்களின் குடியிருப்பு பகுதிக்குள் வந்திருப்பதை அவ்வரசன் புரிந்து கொண்டார். அதனால் அவ்வரசன் தன் குதிரையை முழு வேகத்தில் ஓடச் செய்தான்.
அந்த கிளியின் பேச்சினை கேட்டு கொள்ளைக்காரர்கள் அந்த அரசனை பின்தொடர்ந்தனர், ஆனால் அரசனின் குதிரை மிக வேகமாக ஓடியது, அதனால் அந்த அரசனை கொள்ளைக்காரர்களால் சுற்றிவளைத்து பிடிக்கமுடியவில்லை அதற்குமேலும் அரசனை துரத்துவதை விட திரும்பி செல்வதே மேல்என பின்தொடர்வதை கைவிட்டுவிட்டனர்
அதனை தொடர்ந்து அடுத்த குடியிருப்புபகுதிக்குள் செல்லும் போது அம்மன்னன் மற்றொரு கிளி ஒரு கூண்டிற்குள் குடிசை ஒன்றில் இருப்பதைக் கண்டார்்.
இந்த இரண்டாவது கிளியானது அந்த அரசனைப் பார்த்ததும் “வணக்கம் வாருங்கள் ஐயா.. விருந்தினர் வந்துவிட்டார்கள்...அவர் குடிப்பதற்கு தண்ணீர் கொண்டு வாருங்கள் அமர்ந்து ஓய்வெடுங்கள் ஐயா விருந்தினர் சாப்பிடுவதற்கு உணவுப்பொருட்களை கொண்டுவாருங்கள் ஐயா உங்களுடைய வயிறாற உணவு உண்டு சிறிது நேரம் ஓய்வு எடுத்து செல்லுங்கள்” என முகமன்கூறி வரவேற்றது .
அந்த நேரத்தில் தான், கிராமத்தின் விவசாயி ஒருவரின் வீட்டிற்கு வந்ததை அந்த அரசன் அறிந்துகொண்டார் உடன் தன்னுடைய குடிசைக்கு மன்னர் வந்திருப்பதை உணர்ந்த அந்த விவசாயி உடனே வெளியே வந்து அரசனை வரவேற்றார்
அரசன், அவ்விவசாயியின் விருந்தோம்பலை ஏற்றுக்கொண்டான். பின்னர், அவரிடம் , முன்பு நடந்த அனைத்தையும் கூறி, “ஐயா! ஒரே இனத்தைச் சேர்ந்த பறவைகளின் இயல்பில் ஏன் இவ்வளவு வேறுபாடு?” என சந்தேகம் எழுப்பினார்
அந்த விவசாயிபதில் எதுவும் கூறுமுன், அவருடைய கிளியானது , “அரசே.. நாங்கள் இருவரும் ஒரே பெற்றோரின் பிள்ளைகள்தான் ஆனால் சிறு வயதிலேயே இருவரும் பிரிந்துவிட்டோம். அந்தகிளி ஒரு கொள்ளைக்காரனிடம் வளர்க்கப்பட்டது, நான் ஒரு வவிவசாயியால் இங்கு வளர்க்கப்பட்டேன்.
அந்த கிளியானது நாள் முழுவதும், கொள்ளையர்களின் வன்முறை யுடன் கூடிய சொற்களைக் கேட்டு கேட்டு அவ்வாறு மாறிவிட்டது , நான் இந்த கிராமத்தின் விவசாயியின் விவசாயம்சார்ந்த விவதங்களையும் விருந்தினர்களின் உபசரிப்புகளையும் கேட்டு பழகிவருகிறேன். அதனால்தான் நாங்கள் இருவரும் வெவ்வேறாமாக வளர்ந்துவருகின்றோம்.” என விளக்கமளித்தது
கற்றல்: எந்தவொரு குழந்தையும் வளரும்போது, பெற்றோர், சுற்றியுள்ளஉறவினர்கள், நண்பர்கள் அந்த குழந்தையினுடைய வாழ்க்கையில்அதிக செல்வாக்கு செலுத்துகின்றனர். அதனால்தான் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளிடம் நல்ல பழக்கவழக்கங்களை புகுத்துவதில் நன்கு கவனம் செலுத்த வேண்டும் . குழந்தைகளை கெட்ட சகவாசத்திலிருந்து விலக்கி வைக்க வேண்டும். என கோரப்படுகின்றது
சனி, 23 ஏப்ரல், 2022
ஒருஅரசனும் இரண்டு கிளிகளும்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்
இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...
-
இந்தியாவில் 2008 ஆம் ஆண்டிற்கு முன்புவரை இந்திய கூட்டாண்மைசட்டம்1932 என்பது நடைமுறையில் இருந்துவந்தது மனிதநாகரிகம் தோன்றியபின்னர் ஏராளமான...
-
ஒரு கிராமத்தில் ஒரேயொரு விவசாயிமட்டும் கோடைகாலத்தில் பயன்படும் தர்பூசனியை தன்னுடைய நிலத்தில் பயிரிட்டிருந்தார் அவருடைய விளைநிலம் முழுவதும்...
-
அன்புதமிழ் நேயர்களுக்கு என்னுடைய தாழ்மையான வணக்கத்துடன் அருகுசருகுஎனும் என்னுடைய முதல் வலைபூவை இணையத்தின்வாயிலாக உங்கள் முன் சமர்ப்பிப்பதில்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக