சனி, 19 மார்ச், 2022

மகிழ்ச்சியாக எவ்வாறு வாழ முடியும்?

 

நீண்ட காலத்திற்கு முன்பு, ஒரு மனிதன் துறவிஒருவரிடம்  சென்று, "ஐயா நான் எவ்வாறு எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பது?" என வினவினார்

இதைக் கேட்டஅந்த துறவி, அந்த மனிதனை தன்னுடன் காட்டிற்கு நடந்து வரும்படி கூறினார். அந்த மனிதனும் ஒப்புக்கொண்டான் அவர்கள் இருவரும் காட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தனர். அவர்கள் காட்டில் நடந்துகொண்டிருந்தபோது, துறவி அந்த மனிதனிடம் அங்கே தரையில் கிடந்த கல் ஒன்றினை கையில் எடுத்துகொண்டுவருமாறு கூறினார், உடன் அந்த மனிதனும் தரையில் கிடந்த அந்த கல்லை கையில் எடுத்து வைத்து கொண்ட பின்னர் இருவரும் நடக்கத் தொடங்கினர். சிறிது நேரம் அந்த கல்லை கையில் வைத்து கொண்டே நடந்த பிறகு, அந்த மனிதன் துறவியிவிடம், “ஐயா, இந்த கல்லை என்னுடைய கையில் தூக்கி கொண்டுவருவதால் என்னுடைய கை வலிக்கிறது” என்றார்.

துறவியும், “சரி, நீ கையில் எடுத்துகொண்டுவரும் அந்தக் கல்லை  கீழே தரையில் போட்டு விட்டு வா” என்றார்.

துறவி இவ்வாறுச் சொன்னவுடனேயே, அந்தமனிதனும் அந்தக் கல்லைக் கீழேவீசி எறிந்து விட்டான். மீண்டும் அவர்கள் இருவரும் தொடர்ந்து நடக்க ஆரம்பித்தனர்

சிறிது நேரம் கழித்து, துறவி, “இப்போது எப்படி உணர்கிறாய்?” என அந்த மனிதனிடம் வினவினார்.

உடன் , ‘ ஐயா நான் மகிழ்ச்சியாக உள்ளேன். அந்த கல்லை எறிந்த பிறகு, எனக்கு அவ்வளவு வலி எதுவும் இல்லை கையிலும் வலிஎதுவும் இல்லாமல் நன்றாக மகிழ்ச்சியாக உணர்கிறேன்." என அந்த மனிதன் பதிலளித்தான்

அப்போது துறவி, “இதுதான் மகிழ்ச்சியின்இரகசியம். இனி நீயும் இவ்வாறே  மகிழ்ச்சியாக வாழலாம்.” என அறிவுரை கூறினார்

அவ்வாறான துறவியின் அறிவுரையை கேட்ட அந்த மனிதன் மிகக்குழப்பமடைந்து, “எனக்கு புரியவில்லை ஐயா” என வினவினான்.

துறவி சிரித்துக் கொண்டே , 'மக்கள் தங்கள் வாழ்க்கையில் மனதில் வலியை ஏற்படுத்தும் எத்தனையோ கற்களைத் தொடர்ந்து சுமந்து கொண்டு  வாழ்ந்து கொண்டுவருகிறார்கள், பிறகு அவர்கள் எவ்வாறு மகிழ்ச்சியாக இருக்க முடியும்? எனவே, மகிழ்ச்சியாக இருக்க விரும்பினால், அவ்வாறான மனதிற்கு வலியைத் தரும் கற்களை மனதிலிருந்து தூக்கி எறிந்து விட்டு நிம்மதியாக வாழ பழக வேண்டும்.” என அறிவுரைகூறினார் 


கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...