சனி, 23 மார்ச், 2019

வங்கியின்நிருவாக மேலாளருக்கும் கிளை மேலாளருக்கும் இடையேநடைபெற்ற நிருவாகத்தின் இலக்குநோக்கியவிவாதம்


நிருவாக மேலாளர்:நம்முடைய வங்கியின் கடந்தகாலாண்டு அறிக்கையை பார்த்தீர்களா அதில் உங்களுடைய பொறுப்பில் இருக்கும் கிளையின் கடந்த காலாண்டு இலாபம் மிகவும்குறைந்துவிட்டது எனும் தகவலாவது அறிந்துகொண்டீர்களா. வங்கி கிளையில் வங்கிபணி தவிர வேறு என்னதான் செய்துகொண்டிருகின்றீர்?

கிளை மேலாளர்: ஐயா! நான் நமது வங்கியின் வளர்ச்சிக்கு அல்லும் பகலும் அயராது பாடுபடுகிறேன் ஐயா!.

நி.மே: ஆனால் நீங்கள் உங்களுடைய இலக்குகளை மட்டும் எட்டவில்லை .அப்படித்தானே.

கி.மே:இல்லைஐயா! கடந்த காலாண்டின் துவக்கத்திலேயே எங்களுடைய கிளையானது இலக்கில் மிகவும் பின்னடைந்திருந்தது அதனால்தான் ஐயா!

நி.மே: அதன்பின்னர் முயற்சி செய்து ஏன் உங்களுடையஇலக்கை அடையவில்லை.

கி.மே: எங்களுடைய கிளையின் நீண்டகாலகடன் முன்மொழிவுகளில் ஒருசில மண்டல(ZO) /வட்டார(RO) அலுவலகத்தால் நிராகரிக்கப்பட்டன என்பனபோன்ற காரணங்களாக இருக்கலாம் ஐயா!, அதுமட்டுமல்லாது ஒருசில கடன் விண்ணப்பங்களில் வாடிக்கையாளர்களிடம் விளக்கம் கோரி கேள்வி எழுப்பப்-பட்டபோது அவ்வாடிக்கையாளர்கள் தங்களுடைய கடன் முன்மொழிவுகளையே கைவிட்டு விட்டனர்ஐயா!.இன்னும் சிலர் தம்முடைய கடன்விண்ணப்பத்திற்கான அனுமதி தலைமை அலுவலகத்திலிருந்து கிடைத்தவுடன் தங்களுக்கு நீண்டகாலகடன் கண்டிப்பாக கிடைக்கும் என்று எதிர்பார்த்து காத்திருக்கின்றார்கள் ஐயா!

நி.மே:நீங்கள் உங்களுடைய இலக்குகளில் கவனம் செலுத்தினால் அதனை நீங்கள் கண்டிப்பாக அடைந்திருக்க முடியும்.

கி.மே: ஐயா! அதேநேரத்தில் நமது வங்கியின் மற்ற மண்டலங்களை விட எங்களுடைய மண்டலத்தின் சில்லறை கடன்களை வழங்குவதில் கூடுதலான இலக்கை அடைவதற்கு கவனம் செலுத்துமாறு கோரினார்கள் அதனால் சில்லறை கடன் வழங்குவதில் கவனம் செலுத்த வேண்டியதாகிவிட்டது. ஐயா!

நி.மே: எனவே நீங்கள் உங்களுடைய கிளையில் வாடிக்கையாளர்களுக்கு ஏராளமானஅளவில் சில்லறை கடன்களை வாரிவழங்கிவிட்டீர்கள். அல்லவா!

கி.மே: இல்லை ஐயா!. விவசாயம் ,வியாபாரம் ஆகியவற்றிற்கான காப்பீடு எனும் புதிய திட்டம் அறிமுகபடுத்தப்பட்டதால் காப்பீட்டுதிட்டத்தை வாடிக்கையாளர் அனைவரிடமும் பிரச்சாரம் செய்யும்படி நான்அறிவுறுத்தப்பட்டேன்ஐயா!.

நி.மே: ரொம்பநல்லது. அவ்வாறே பிரச்சாரம் செய்து ஏராளமான காப்பீடுகளை வாடிக்கையாளர்களிடம் கொண்டுசேர்த்து காப்பீட்டிற்கான தொகையை உங்களுடைய கிளையில் வசூலித்துவிட்டீர்கள் அல்லவா!

கி.மே: இல்லை ஐயா! எங்களுடையகிளையின் அனைத்து வாடிக்கையாளர்களின் கணக்குகளுக்கும் KYCஇக்கு இணக்கமான வாடிக்கையாளர் விவரங்களை சரியாக பெற்று பூர்த்தி செய்து அனைத்து வாடிக்கையாளர்களின் கணக்குகளையும் மாற்றி-யமைத்திடுமாறு மின்னஞ்சல் ஒன்று கிடைக்கபெற்று அதில் நாங்கள் கவனம் செலுத்தி கொண்டிருந்தோம் ஐயா!!

நி.மே: அதனால் உங்களுடைய வங்கிகிளையிலுள்ள வாடிக்கையாளர் கணக்குகள் அனைத்தும் KYC இணக்கமானவையாக வாடிக்கையாளர் விவரங்களை சரியாக பெற்றுபூர்த்தி செய்துமாற்றியமைத்துவிட்டீர்கள் அப்படித்தானே.!

கி.மே: இல்லை ஐயா!, உடனடியாக உடல்நலன் / பொது காப்பீடுகளில்கவனம் செலுத்துமாறு மண்டல(ZO)/ வட்டார (RO)அலுவலகத்திலிருந்துஉத்தரவு கிடைக்க பெற்றது ஐயா!!

நி.மே: எனவே உடன் நீங்களும் உடல்நலன் / பொது காப்பீடு மூலம் ஒரு நல்ல வருமானத்தை உங்களுடைய கிளையில் பெறச்செய்தீர்கள் அல்லவா.!

கி.மே: இல்லை ஐயா!. இந்நேரத்தில்புதியதாக அறிமுகபடுத்தியுள்ள பிரதம மந்திரியின் பல்வேறு திட்டங்களில் பொதுமக்கள் அனைவரும் பங்குகொள்ளவேண்டும் என்பதற்காக வங்கிகிளையின் வாடிக்கையாளர்களைபற்றிய முழுவிவரங்களையும் சேகரித்தல் அவர்களின் தகுதி குறித்து ஆய்வுசெய்தல் என்பனபோன்ற பணிகளை உடனடியாக செயற்படுத்திடுமாறு கோரி மின்னஞ்சல் ஒன்று கிடைக்கபெற்றது ஐயா!!. நிமே: அதன்படி நீங்கள் அவ்வாறான பணிஅனைத்தையும் செய்துவிட்டீர்கள் அல்லவா!

கி.மே:இல்லை ஐயா!, நமது வங்கியில் எங்களுடைய கிளையில் வாராக்கடன் (NPA) எவையெவையுள்ளன அவைகளை தள்ளுபடிசெய்வதற்கான (Writeoff)விவரங்களை தயார்செய்திடுவதன்மீது உடனடியாக கவனம் செலுத்துமாறு மண்டல (ZO) /வட்டார அலுவலகம்(RO) எங்களுக்கு அறிவுறுத்தியது ஐயா!.

நி.மே: அதனால் நேர்மையாக கடனை செலுத்திடும் (ஏமாந்தவர்களின்) கடனை மட்டும் வசூல்செய்துவீட்டீர்கள் மற்றவர்களின்( கடனை திரும்ப செலுத்தாமல் ஏமாற்றுபவர்களின்) கடன்களை தள்ளுபடிசெய்துவிட்டீர்கள் அப்படித்தானே !

கி.மே: இல்லை ஐயா! அதற்குள் கடந்த காலாண்டும் முடிந்துவிட்டதுஐயா!.

கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...