வெள்ளி, 15 மார்ச், 2019

இயக்குநர்களிடமிருந்து நிறுமம் கடன்பெறுவது


பதிவுபெற்ற பெரும்பாலான இந்திய நிறுமங்கள் தம்முடைய இயக்குனர்களுக்குக் கொடுக்கப்பட்ட கடன்களைப் பற்றி மட்டுமே இதுவரையில் ஏராளமான வகையில் சச்சரவுகளும் வாத விவாதங்களும் கலந்துரையாடல்களும் இருந்துவந்துள்ளன, ஆனால் தாம்பதவி வகிக்கும் நிறுமங்களுக்கே கடன்களை வழங்கும் இயக்குநர்களைப் பற்றிய செய்திகள் இப்போதுதான் அங்கொன்றும் இங்கொன்றுமாக வந்துகொண்டுள்ளன , ஆயினும் இவ்வாறு நிறுமங்களுக்கு இயக்குநர்கள் கடன்வழங்குவதுகுறித்த சட்டப்பூர்வ இணக்கங்கள் மிகுதியாக உள்ளன. அதனால் அதன்வாயிலாக எழும் குழப்பத்தைத் தவிர்ப்பதற்கு, சமீபத்திய திருத்தப்பட்ட நிறுமங்களின் சட்டம்2013 இன் படி இவ்வாறான சிக்கலை தீர்வு செய்வது பற்றி தற்போது விவாதிப்போம். இயக்குனர்களிடமிருந்து நிறுமங்களானவை இட்டுவைப்புத்தொகை , கடன் தொகை ஆகிய இருவழிகளில் ஏதேனும் ஒருவகையில் தமக்குதேவையான தொகையை பெறலாம் அதனால் இவைகளின் வாயிலாக பெறப்பட்ட தொகையை அதாவது இயக்குநர்களிடமிருந்து இவ்வாறு பெறப்பட்ட தொகையானது கடன்தொகையா அல்லது இட்டுவைப்பு தொகையா என எவ்வாறு வகைப்படுத்துவது என்பதுதான் தற்போதைய சிக்கலாகும் .இங்கு நாம் இயக்குநர்களிட- மிருந்து பெறப்படும் கடன்பற்றிமட்டும் இப்போது காண்போம் இயக்குநர்களிடமிருந்து பெறப்படும் இட்டுவைப்புத்தொகைபற்றி பின்னர் வேறொரு சமயத்தில் காண்போம் பொதுவாக அவ்வாறு இயக்குந்களிடமிருந்து பெறப்பட்ட தொகையானது ஒரு இட்டுவைப்பு தொகையென எனக் கருதப்பட்டால், அது நிறுமங்களின் சட்டம் 2013 பிரிவு 73 (2) அல்லது பிரிவு 76 இன் விதிமுறைகளுடன் இணங்குவதோடு, படிக்கப்பட்ட நிறுமங்களின் (வைப்புத்தொகைகளை ஏற்றுக்கொள்ளும்) விதிமுறைகள் 2014 உடன் ஒத்ததாக இருக்கவேண்டும் . அ்துதவிர இயக்குனர்களிடமிருந்து பெறப்படும் கடன்களை பொதுவாக இயக்குனரின் சொந்த நிதியிலிருந்து பெறப்பட்ட தொகை என்றும் , இயக்குநர்கள் தாம் பெற்ற கடன் நிதியிலிலிருந்து பெறப்பட்ட தொகைஎன்றும் இரண்டு பிரிவுகளாக வகைப்படுத்தலாம் இயக்குனர்கள் தம்முடையசொந்த நிதிகளிலிருந்து பெறப்பட்ட தொகை, நிறுமங்களுக்கு அவ்வாறு வழங்குபவர் ஒரு பங்குதாரரா இல்லையா என்பதன்அடிப்படையில் அவை கடன்களாகக் கருதப்படுகிறது ஆயினும் இந்நிலையில் நிறுமங்களின் சட்டம் பிரிவு 73 (2) அல்லது பிரிவு 76 உடன் இணக்கமாக இருக்கத் தேவையில்லை. எனினும், இந்த நிவாரணத்தைப் பெற இயக்குனர்கள் பணம் கொடுக்கும் நேரத்தில் அந்நிறுமமானது, மற்றவர்களிடமிருந்து கடன்கள் அல்லது வைப்புத்தொகைகளை பெறுதல் அல்லது ஏற்றுக் கொள்வதற்காக அறிவிப்புஏதனும் செய்து அதன் மூலம் சேகரிக்கப்பட்ட நிதிகளில் அடிப்படையில் இந்த தொகை பெறப்படவில்லை என உறுதிபடுத்தி கொள்ளவேண்டும் .ஆயினும், நிறுமமானது நிறுமங்களின் சட்டம் 2013 பிரிவு 180 (கீழே விவாதிக்கப்படுகின்றது)இன்கீழ் பொருந்துமாறு கடன் பெறுவது பற்றிய தகவல்கள் இயக்குனரின் அறிக்கை மற்றும் நிறுவனத்தின் நிதிநிலை அறிக்கைகள் ஆகியவற்றில் தக்க குறிப்புகளுடன் வெளிப்படுத்தப்பட வேண்டும்.. இயக்குனர் கடன் வாங்கிய தொகைகளில் பெறப்பட்ட தொகை இதன்கீழ்இயக்குனர் ஒரு பங்குதாரர் அல்லாத சூழ்நிலை, இயக்குநர் ஒரு பங்குதாரராக உள்ள சூழ்நிலை ஆகிய இருவகைகளில் விவாதிப்போம் இயக்குனர் ஒரு பங்குதாரர் அல்லாத சூழ்நிலையில், அவர்களிடமிருந்து பெறப்பட்ட தொகையானது நிறுமங்களின் சட்டம் 2013 பிரிவு 76 ன் விதிமுறைகளுடனும், படிக்கப்பட்ட நிறுமங்களின் (வைப்புகளை ஏற்றுக்கொள்ளும்) விதிமுறைகள் 2014 உடனும்கவருகின்றன. அத்தகைய ஒருநிலையில் நிகர சொத்துமதிப்பு ரூ. 100 கோடி அல்லது அந்நிறுமத்தின் விற்பனைவருமானம் ரூ. 500 கோடி ஆக உள்ள ஒரு பொது நிறுமத்தால் மட்டுமே அவ்வாறான இட்டுவைப்புத்தொகையை பெறமுடியும் (அதாவது, தனியார் வரையறுக்கப்பட்ட நிறுமங்கள் மற்றும் தகுதியற்ற பொது நிறுமங்கள் ஆகியவற்றின் இயக்குநர்கள் தாம் கடன்வாங்கிய நிதியிலிருந்து அவர்கள் பதவிவகிக்கும் நிறுமங்களானவை இவ்வாறான கடன்களை / இட்டுவைப்புகளைப் பெற முடியாது). நிறுமங்களின் சட்டம் 2013 பிரிவு 76 இன்படி ஒவ்வொரு வருடமும் கடன் வழங்குவதற்கான தகுதி மதிப்பீட்டை(credit rating ) பெறவும், வைப்புத் தொகையாளர்களுக்கு ஆதரவாக வைப்புத் தொகைக்கு குறையாமல் அந்நிறுமங்களின் சொத்துக்களைப் பொறுப்பேற்பதற்காக பதிவாளரிடம் அந்த சொத்துகளின்மீது பொறுப்பொன்றினை உருவாக்கி (create a charge)பதிவு செய்திட வேண்டும். இது நிறுமங்களின் சட்டம் 2013 பிரிவு 180 மேலும் ஈர்ப்பதால் இது குறித்து தனியாக கீழே விவாதிக்கப்படுகின்றது. இயக்குநர் ஒரு பங்குதாரர் ஆவார் எனும்சூழ்நிலையில் , இயக்குநர்களிடமிருந்து பெறப்பட்ட தொகைகள் இட்டு வைப்புகளாக கருதப்படுகின்றன, ஆயினும், அவை நிறுமங்கள் தம்முடைய உறுப்பினர்களிட- மிருந்து பெறப்பட்ட இட்டு வைப்பு தொகைகளாக கருதப்படுகின்றன, மேலும் இந்நடவடிக்கைகளானவை நிறுமங்களின் (இட்டுவைப்புகளை ஏற்றுக்கொள்ளுதல்) விதிமுறைகளுடன் படிக்கப்படும் நிறுமங்களின் சட்டம் 2013 பிரிவு 73 (2) வின் விதிகளை ஈர்க்கின்றன. மேலும் இந்த நடவடிக்கையும் நிறுமங்களின் சட்டம் 2013 பிரிவு 180 மேலும் ஈர்ப்பதால் இதுகுறித்தும் தனியாக கீழே விவாதிக்கப்படுகின்றது. நிறுமங்களின் சட்டம் 2013பிரிவு 180, இதன்படி ஒரு நிறுமத்திற்கு தம்முடைய இயக்குநர்களிட- மிருந்து இவ்வாறு கடன்பெறுவதற்காக ஒப்புதல் அளிப்பதற்குமுன் அதற்காக அந்நிறுமத்தின் பங்குதாரர்களின் பொதுப்பேரவை கூட்டத்தில் ஒரு சிறப்புத் தீர்மானத்தை நிறைவேற்றிஇருக்கவேண்டும் (அவ்வாறான சிறப்பு தீர்மானமானது படிவம் MGT-14 இன் கீழ் நிறுமங்களின் பதிவாளருக்கு சமர்ப்பித்திருக்க வேண்டும்.), வழக்கமான வணிக நடவடிக்கைக்காக ஏற்கனவே வங்கியாளர்களிடமிருந்து பெறப்பட்ட தற்காலிக கடன்கள் மட்டுமல்லாமல், நிறுமத்தின் பெறப்பட்ட பங்கு மூலதனம்(paid-up share capital), சுதந்திர ஒதுக்கீடுகள் (free reserves) மற்றும் பத்திரங்களின் பிரீமியம்( securities premium) ஆகியவற்றின் மொத்த மதிப்பைவிட கூடுதலாக கடன்பெறுவதற்காக இந்த சிறப்புதீர்மானம் நிறைவேற்றப் பட்டிருக்கவேண்டும் இருப்பினும் 05.06.2015 தேதியிட்ட நிறுமங்களின் சட்டம் 2013 பிரிவு 180 இற்கான அறிவிப்பு, தனியார் நிறுமங்களுக்கு பொருந்தாது. எனவே, தனியார் நிறுவமங்கள், பிரிவு 180 ன் கீழ் ஒரு சிறப்புத் தீர்மானத்தை மட்டும் நிறைவேற்றுவதோடு மட்டுமல்லாமல், தகுதியுள்ள இடங்களில், வைப்புத் தொகையை வாங்கவோ அல்லது ஏற்றுக்கொள்ளவோ முடியும். இருப்பினும், அனைத்து பொது நிறுமங்களும் நிறுமங்களின் சட்டம் 2013 பிரிவு 180 உடன் இணங்க சிறப்புத்தீர்மானத்தின்வாயிலாக மட்டுமே இயக்குநர்களிடமிருந்த கடன்தொகையைபெறமுடியும்.

கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...