ஞாயிறு, 14 மார்ச், 2010

தேவைக்கேற்ப சரியான நேரத்தில் கொள்முதல் செய்வது

தேவைக்கேற்ப சரியான நேரத்தில் கொள்முதல் செய்வது


ஒருநிறுவனத்தின்தேவைக்கேற்ப சரியான நேரத்தில் கொள்முதல்செய்வதை just in time என்பதை சுருக்கமாக JITஎன அழைப்பர்,இது ஒரு தொழில்நுட்பமன்று வழிமுறைமட்டுமே

இது ஒரு நிறுவனத்தில் ஏற்படும் மூலப்பொருட்களின் விரயம்,காலவிரயம் ,மணிதஉழைப்பு விரயம்,மேற்செலவுகள் விரயம் போன்ற பல்வேறு வகையான இழப்புகளை தவிர்க்கப் பயன்படுகின்றது,

ஒரு நிறுவனத்தின் அனைத்து இழப்புகளுக்கும் அடிப்டை மூலகாரணமாக இருப்பது மூலப்பொருட்கள் மற்றும் முடிவுப்பொருட்கள் சேர்ந்த சரக்கிருப்பு மட்டுமே யாகும்,

உதாரணமாக 1,ஒருநிறுவனம் மூலப்பொருட்களை அதிகஅளவு கொள்முதல்செய்து சரக்கிருப்பாக வைத்திருப்பதாக கொள்வோம் இதற்காக நடைமுறைமூலதனம் பெருமளவில் செலவிடப்பட்டு முடக்கப்படுவதால் மற்ற நடவடி க்கைகளுக்குதேவையான நடைமுறை மூலதனம் இல்லாமல் சிரமப்படவேண்டிய நிலைக்கு இந்நிறுவனம் தள்ளப்படுகின்றது,

2, உற்பத்திக்கு எடுத்து பயன்படுத்தவதற்கு முன் இவ்வாறு அதிகப்படியான மூலப்பொருட்களை ஒருங்கே சேகரித்து பாதுகாத்து வைத்திடபெரியஅளவில் புதிய கிடங்குகளை கட்டி அல்லது வாடகைக்கு அமர்த்தி பராமரிக்கவேண்டியுள்ளது,

3,இந்த கிடங்குகளை நிர்வகித்திட கிடங்குகாப்பாளர் பாதுகாப்பிற்காக பாதுகாவலர்கள் மற்றும் இரவு காவலர்கள் என நியமனம் செய்யவேண்டியுள்ளது,

4,மேலும் உற்பத்தியகத்திற்கு இந்த மூலப்பொருட்களை கொண்டுவந்து சேர்த்திடுவதற்காக கையாளும் இயந்திரத்தை நிறுவி பராமரிக்கவேண்டியுள்ளது

5,இவைகளை ஒருங்கிணைத்து நிருவகித்திட மேலாளர்ஒருவரை நியமணம் செய்யவேண்டியுள்ளளது,

6,இந்தசெயல்களுக்காக கூடுதலான சம்பளம் ,கூலி ,மின்சாரகட்டணம் வாடகை போன்று பல்வேறுவகைகளில் மூலப்பொருளின் மதிப்பை கூட்டாத ஆனால் மறைமுகமாக உற்பத்தி செலவை மட்டும் அதிகப்படுத்தும் செலவுகளை செலவிடவேண்டியுள்ளது,இதனால் ஒருநிறுவனத்திற்கு கிடைக்க வேண்டிய இலாபம் கணிசமாக குறைகின்றது,

இவ்வாறான நிலையை தவிர்க்கவே இந்த JIT எனப்படும் வழிமுறை செயல்படுத்தப் படுகின்றது, இந்த வழிமுறையில் பூஜ்ய சரக்கிருப்பு என்பதுதான் இதன் அடிப்படை குறிக்கோளாகும், அதற்காக சரக்கிருப்பே இல்லாது பராமரிப்பது அன்று என்பதை மனதில் கொள்ளுங்கள் ,

மூலப்பொருட்கள் கையிருப்பில் சுத்தமாக இல்லாதிருந்தால் வாடிக்கையளருக்கு ஒப்புக்கொண்ட நாளில் முடிவுப்பொருளை வழங்கமுடியாது போவதுடன் நிறுவனத்தின் மீதுவாடிக்கையாளருக்கு அவநம்பிக்கை ஏற்படவும் வழிவகுக்கின்றது மேலும் நிறுவனத்திற்கு வருமான இழப்பும் நட்டமும் பெருமளவில் ஏற்படுகின்றது,

பொதுவாக ஒருநிறுவனத்தின் கையிருப்பில் சரக்கிருப்பு அதிகமாவதற்கு காரணம் பின்வருமாறு

1,தவறான விற்பனை முன்கணிப்பினால் விற்பனைகுறைந்து போவது

2,தேவையற்ற குழு(Batch) உற்பத்தி செய்வது

3,நம்பகம் இல்லாத வாடிக்கையாளரிடமிருந்து பெறப்படும் தரம் குறைந்த மூலப்பொருட்கள்

4, தேவையற்ற ஆனால் நேரத்தை விழுங்கிடும் கொள்முதல் விதிமுறைகளை பின்பற்றி கொள்முதல் செய்வது

5,காலதாமதமான ஏற்றுமதி

6,தவறான சரக்குபோக்குவரத்து ஏற்பாடு

7,மறுகொள்முதல் செய்யும் காலஇடைவெளிக்கு தேவையான பொருளை அதிகஅளவில் கொள்முதல் செய்வது,

8,உற்பத்திபிரிவுக்கும் விற்பனைபிரிவுக்கும் ஒருங்கிணைப்பும் புரிந்துனர்வும் இல்லாமை

என்பன போன்ற பல்வேறு காரணங்களினால் கையிருப்பில் அதிகஅளவிற்கு சரக்கிருப்பு குவிந்துவிடுகின்றது, இதனால் உற்பத்தி சாராத மறைமுகசெலவுகள்மட்டும் கூடுதலாக உயர்ந்துவிடுகின்றது,

ஒருநிறுவனத்தில் உற்பத்திசெய்யப்படும் பொருளைநேரடியாக நுகர்வோரை சென்றடைய செய்வதால் சரக்கிருப்பை கையாளும் செலவு குறைய வாய்ப்புள்ளது,

உதாரணமாக நிறுவனத்தில் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் கிடங்குகளில் அடுக்கிவைக்கப்பட்டு பின்னர் பொருளை வாகணங்களில் ஏற்றி செல்லப்படுகின்றது,பின்னர் தொடர்சரக்குவண்டிகளில் ஏற்றுவதற்கு முன் அங்குள்ள கிடங்குகளில் இறக்கிவைத்து மீண்டும் ஏற்றப்பட்டு சென்றடைய வேண்டிய இடங்களில் இறக்கிவைத்து மீண்டும் வாகணங்களில் ஏற்றி அனுப்பப்பட்டு இறுதியாக நுகர்வோரை சென்றடைகின்றது,இவ்வாறு உற்பத்தியகத்திலிருந்து பல்வேறுநிலையைகடந்து வரும்போது பொருளை கொண்டுசெல்லுதல் ,பாதுகாத்தல் மற்றும் கையாளுதல் ஆகியவற்றிற்காக மறைமுகமாக அதிகஅளவிற்கு செலவாகின்றது,

இதனை தவிர்க்க உற்பத்தி செய்த இடத்திலேயே நேரடியாக தாங்கிகளில் (Container)ஏற்றி தேவையான இடத்திற்கு அனுப்பி வைப்பது அல்லது JIT வழிமுறையை பின்பற்றுவது ஆகியவற்றால் கிடங்குவாடகை ,போக்குவரத்து மற்றும் இதரசெலவுகள் மிச்சமாகின்றது,,

போட்டிமிகுந்த இன்றைய காலகட்டத்தில் ஒவ்வொருநிறுவனமும் தங்களின் உற்பத்தி செலவை எவ்வாறாவது குறைத்திடவும் தங்களின் இலாபத்தை அதிகபடுத்திடவுமே விரும்புகின்றன,இந்நிலையில் இந்த JIT வழிமுறையை மூலப்பொருட்கள் கொள்முதல் செய்வதற்கு செயல்படுத்தி தேவையற்ற மறைமுகமான உற்பத்திக்குதொடர்பில்லாத செலவை கண்டிப்பாக குறைக்கமுடியும்,

உற்பத்தியாளருக்கும்,விற்பனையாளருக்கும் வாடிக்கையாளரே எஜமானர் ஆவார் என்ற இன்றைய நிலையில் வாடிக்கையாளரின் விருப்பத்தை அவாவை பூர்த்திசெய்வதேஒவ்வொரு உற்பத்தி நிறுவனத்தின் அடிப்படை குறிக்கோளாகும்இந்நிலையில் JITஆனது உற்பத்திசெலவை குறைத்து விற்பனை விலையை வாடிக்கையாளரின் வாங்கும் திறனிற்கு ஏற்ற கட்டுபடியாகும் நிலைக்கு பராமரக்கின்றது, மேலும் தரமான பொருள் குறைந்த செலவில்வாடிக்கையாளருக்கு கிடைப்பதை உறுதிசெய்து அவர்களின் விருப்பத்தை பூர்த்திசெய்கின்றது,

சரக்கிருப்பை மட்டுமல்லாது உற்பத்தி ,விற்பனை, சந்தைபடுத்துதல், பகிர்ந்தளித்தல் வாடிக்கையாளரின் அவாவைபூர்த்திசெய்தல் ஆகிய அனைத்து நிலைகளிலும் இந்த JITஐ செயல்படுத்தலாம்,

தலைமைப்பண்பு,புத்தாக்கம் செய்தல்,பூஜ்யஅளவிற்கு குறைபாடுள்ள முடிவுப்பொருட்களை பராமரித்தல்,தரக்கட்டுப்பாட்டை முழுமையாக பராமரித்தல்,புதுமைப்படுத்துதல்,செயல்களை தானியங்கச் செய்தல், நிர்வாக தகவலறிக்கையை உடனுக்குடன் உருவாக்குதல், இயக்க முறைமை மற்றும் சுழற்சிகாலஅளவை சீராகவைத்திருத்தல் போன்ற பல்வேறுவழிகளில் இந்த JIT பயன்படுகின்றது,

நிதிநிறுவணங்களில் கூட இந்த JIT கருத்தமைவை செயல்படுத்தலாம்

முன்பெல்லாம் சரக்கிருப்பு என்பதுஉடனடியாக விற்பனை செய்து ரொக்கமாக மாற்றிவிடலாம் என்றநிலைஇருந்ததால் இதனை ஒருசொத்தாககருதி அதிகஅளவிற்கு தேக்கிவைத்து பராமரித்தனர் ஆனால் இன்று இந்த JIT என்ற கருத்தமைவால் சரக்கிருப்பு என்பது ஒரு நட்டமேற்படுத்தும் அல்லது விரையமேற்படுத்தும் பொருளாக கருதப்படுகின்றது, இதனை அதிக அளவிற்கு வைத்திருப்பதற்காக நடைமுறைமூலதனத்தை முடக்கம் செய்யப்படுகின்றது,அதனால் வட்டி இழப்புமட்டுமல்லாது சரக்கிருப்பை பராமரிப்பது கையாளுவது பாதுகாப்பதுபோன்றதேவையற்றகூடுதலான செலவு ஏற்படுகின்றது,

இந்த JITஆனது

1,உற்பத்திக்கு பயன்படும் இயந்திரங்களில் முடக்க பராமரிப்பிற்கு பதிலாக முன்கூட்டிய பராமரிப்பு செய்து உற்பத்தி இழப்பை தவிர்க்கின்றது,

2, நிறுவப்பட்ட இயந்திரத்தின் முழுத்திறனையும் அடைய உதவுகின்றது,

3,சரியான திட்டமிடுதலின்மூலம் பொருட்களை பகிர்ந்தளிக்க செய்கின்றது,

4,வாடிக்கையாளருடன் தொடர்ந்து உறவை வளர்க்கின்றது,

5,பொருட்களின் தரக்கட்டுப்பாட்டை உறுதிசெய்கின்றது,

6 மிகைஇருப்பு,பாதுகாப்பு இருப்பு முடக்கிருப்பு போன்ற தேவையற்ற மாற்று ஏற்பாடுகளை சரக்கிருப்பில் தவிர்க்கின்றது,

7,ஒரு உற்பத்தியாளர் தமக்குதேவையான உதிரிபாகங்களை ஒப்பந்ததாரரர் அல்லது சிறுஉற்பத்தியாளர்களிடமிருந்து தேவைப்படும் போது மட்டும் கொள்முதல் செய்துகொள்ளலாம் இதனால் தரம் விலை போன்றவற்றை சீராக பராமரிக்க உதவுகின்றது,

8,முடிவுப்பொருட்கள் அதிகஅளவு முடங்கிவிடாமல் பராமரிப்பதால் வாடிக்கையாளரிடம் அவ்வப்போது தேவைப்படும் அளவிற்கு மடடும் குறைந்த அளவிற்கு மூலப்பொருட்களை அல்லது உதிரிபாகங்களை எந்தவித அவசரமும் அல்லாமல் தரமான பொருட்களை பெறமுடிகின்றது,

9,இதனால் அதிகமான அளவிற்கு WIP எனப்படும் பகுதி முடிவுப்பொருளின் இருப்பு குறைவாக அல்லது இல்லாமல் பராமரிக்கமுடிகின்றது,

10,அவ்வாறே முடிவுப்பொருட்களையும்ஏராளமானஅளவில் உற்பத்திசெய்து கிடங்குகளில் அடுக்கிவைத்திடாமல் வாடிக்கையாளர் விருப்பத்திற்கு ஏற்றவாறு அவ்வப்போதுஉற்பத்தி செய்து வழங்கப் படுவதால் உற்பத்தி செலவு பெருமளவில் குறைந்போகின்றது

11,இதன் தொடர்ச்சியாக விற்பனை விலை குறைகின்றது இதனால் விற்பனையின்அளவு உயர்ந்து நிறுவனத்தின் வருமானம் உயருகின்றது,

12,சரியான நேரத்தில் தரமானபொருட்கள் குறைந்தவிலையில் வாடிக்கையாளருக்கு எளிதில் கிடைப்பதால் வாடிக்கையாளரும் திருப்தியுடன் மேலும் அதிக விலைகொடுக்க தயராக இருக்கும் மனநிலைக்கு கொண்டுசெல்கின்றது,

மேலேகண்டவிவரங்களினடிப்படையில்சிறிய ,நடுத்தர ஏன் பெரிய நிறுவனங்கள் கூட இந்த Just In Time என்ற கருத்தமைவை செயற்படுத்தி வாடிக்கையாளரின் மனநிறைவையும் திருப்தியையும் பெற்று அதிக வருமானத்தை அடையாளம் என்பதுதிண்ணம்,

கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...