பாலைவனம் ஒன்றில் சென்று கொண்ருந்த மனிதன் தன்னுடைய வழியை தவறவிட்டுவிட்டான் அதனால் தான் செல்லும்பாதையை அலைந்து திரிந்து இறுதியாக கண்டுபிடித்தபோது தண்ணீர் தாகம் ஏற்பட்டு அதிகநாவறட்சி யுடன் அவனுடைய நடை தள்ளாடும் நிலை உருவானது.
இந்நிலையில் அருகில் கைகளால் இயக்கும் மிகபழமையான தண்ணீர் குழாய் ஒன்று இருந்தது .அதனருகில் ஒருமூடிய பாத்திரத்தில் தண்ணீரும் “இந்த பாத்திரத்தில் இருக்கும் தண்ணீரை கையால் இயக்கிடும் ஆம்துளை குழாயில் ஊற்றி குழாயை கைகளால் இயக்கி தேவையானவாறு தண்ணீரை மேலேற்றி குடித்து முடித்திடும்போது இதுபோன்று தாகத்தால் தவித்து வந்து சேரும் மற்ற பயனாளிகளுக்கு உதவுவதற்காக இதே பாத்திரத்தில் மீண்டும் தண்ணீரை நிரப்பி மூடிவைத்து செல்க” என்றவாறு அறிவிப்பு இருந்தது
.அந்த கைகளால் இயக்கும் குழாயை பார்த்தால் மிகஅரதல் பழையதாக இருந்தது .கிடைத்த இந்த சிறிதளவு தண்ணீரை குழாயில் ஊற்றி இயக்கினால் நமக்கு குடிப்பதற்கு தண்ணீர் கிடைக்குமா? என சந்தேகத்துடன் நாம் மட்டும் இந்த தண்ணீரை குடித்து நம்முடைய தாகத்தை தணித்து கொள்வோம். என முடிவுசெய்து முயலும்போது
அம்மனிதனின் உள்ளீருந்து ஒரு குரல் “டேய் இவ்வாறு முடிவுசெய்யாதே இந்த தண்ணீர் நமக்கு மட்டுமன்று நமக்கு பின்னால் நம்மை போன்று இவ்வாறு தவிப்பவர்களுக்கும் உதவுவதற்காவே ஏற்படுத்தபட்டுள்ளது அதனால் அறிவிப்பில் குறிப்பிட்டவாறு செய்” என கட்டளைஇட்டது
அதை பின்பற்றி பாத்திரத்தில் இருந்த தண்ணீரை குழாயில் ஊற்றி குழாயை இயக்கியபோது போதுமான தண்ணீர் வெளியில் வந்தது உடன் தனக்கு போதுமானதன்னுடைய தாகம் தீரும்வரை குடித்தபின் அந்த பாத்திரத்தை தண்ணீரால் நிரப்பி மூடியபின் தன்னுடைய பாதையில் செல்ல ஆரம்பித்தான்.
அதேபோன்று நமக்கு வழங்கபட்டுள்ள இயற்கை வளங்களை வருங்கால நம்முடைய சந்ததியரும் பயன்படுத்துவதற்கு ஏதுவாக அதனை வீணடித்து அழித்திடாமல் பாதுகாத்து விட்டுசெல்வோம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக