காடுகளில் உள்ள மரங்களையும் செடிகொடிகளையெல்லாம் மனிதர்கள் தங்களுடைய பேராசையினால் அழித்துவிட்டதால் தங்களின் உணவைதேடி காடுகளி ல் வாழும் குரங்கு கூட்டங்கள் மனிதர்கள் வாழும் நாட்டுபுறங்களைநோக்கி படைஎடுக்கதுவங்கிவிட்ட இக்காலத்தில் குரங்குஒன்று தன்னுடைய பசிக்காக வீடுகளின் கூரைமீது தாவிதாவிசென்று கொண்டிருக்கும்போது ஒருபணக்கார வீட்டின் வாசலில் அழகான ஆப்பில் பழங்கள் தட்டில் பரப்பி வைத்து முற்றத்தில் வைத்திருந்ததை பார்த்து
ஆஹா நமக்கு அருமையான உணவு கிடைத்தது என அகமகிழ்ந்த அந்த குரங்கு கைக்களில் கொள்ளமுடியாதவாறு இரண்டு மூன்று ஆப்பில்களை எடுத்தோடி சென்று அமர்ந்த கடித்து தின்னமுயன்றபோது ஐயோபாவம் பல்வலித்ததே தவிர ஆப்பில் பழத்தை தின்னமுடியவில்லை
அந்த வழியாக சென்ற குரங்குகளின் கூட்டத்தில் இருந்த வயதான குரங்கொன்று அடேய் அது மரத்தினால் செய்த பொம்மை ஆப்பில் அதனை தின்னமுடியாது அதனை கீழே போட்டுவிட்டு அதோ அருகில் உள்ள கொய்யாமரத்தில் ஏறி கொய்யாபழம் அல்லது காய்களை பறித்து தின்று உன்னுடைய பசியாற்றிக்கொள் எனக்கூறியது
நான் இந்த ஆப்பிலை கீழேவைத்துவிட்டு கொய்யாமரம் ஏறசென்றால் அந்த சந்தர்பத்தை பயன்படுத்தி ஆப்பிலை தான் எடுத்துகொள்ளலாம் என அந்த வயதானகுரங்கு திட்டமிடுவதாக எண்ணிக்கொண்டு கொய்யாபழம் தேவையில்லை என கூறி சும்மா இருந்தது
அந்த குரங்கு மாலைநேரம் வரை முயன்றும் அந்த ஆப்பிலை அந்த குரங்கால் கடித்து தின்னமுடியவில்லை கைகளில் தொடர்ந்து அதனை வைத்துகொண்டேஇருப்பதால் கைகளில் வலிஏற்பட்டதேயொழிய அந்த குரங்கினுடைய பசியாறவில்லை காதடைத்து கண்பூபூத்தமாதிரி ஆகிவிட்ட நிலையில் இதற்குமேல் பசி தாங்கமுடியாது என அந்த வயதான குரங்கு கூறிய அறிவுரையின்படி அருகிலிருந்த கொய்யாமரம் ஏறி ஒருசில பழங்களையும காய்களை பறித்து தின்றபசியாறியது
அடடா இதனை முன்பே செய்து பசியாறியிருக்கலாமே என வெட்கபட்டது
ஆம் அதேபோன்று நம்மில் பலரும் வீனான வரட்டு கவுரவத்திற்காகவும் போலியான படோடோபத்திற்காகவும் ஒருசில கொள்கைகளை விடாப்பிடியாக பிடித்துகொண்டு நமக்கும் பயன்இல்லாமல் மற்றவர்களுக்கும் பயன்படாதவாறு இருப்பதைவிட்டொழித்து பயனுள்ள செயல்களை தயக்கமின்றி ஏற்று செயல்படுக என அறிவுறுத்தபடுகின்றது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக