கிராமபுற இளைஞன் ஒருவன் பொதுதொலைபேசியில் ஒருரூபாய் நாணயத்தை இட்டு யாரோஒருவருடைய தொலைபேசி எண்ஒன்றை தெடர்புகொண்டான். இதனை அருகிலிருந்த கடைமுதலாளி ஒருவர் பார்த்து கொண்டிருந்தார். உடன் முயற்சி செய்த தொடர்பு அந்த இளைஞனுக்கு கிடைத்தது அதனால் அந்த இளைஞன் “வணக்கம்! அம்மா! நான் ஒரு தோட்ட தொழிலாளி பேசுகின்றேன். உங்களுடைய தோட்டத்தில் புல்லும் புதரும் தாறுமாறாக இருப்பதாக அறிகின்றேன். அதனை நான் சரிசெய்துகொடுக்கின்றன். அந்த பணியை நான் செய்வதற்கு அனுமதியுங்கள் அம்மா!”என்று கூறினான்.
உடன் எதிர் தரப்பிலிருந்து அந்த அம்மா, “ரொம்ப நன்றி! தம்பி! ஆனால், அந்த பணியை செய்வதற்கு ஏற்கனவே வேறொரு தோட்டக்காரனை ஏற்பாடு செய்துவிட்டேன். அதனால் பிறகு பார்க்கலாமே!” என பதில் அளித்தார்.
அதனை தொடர்ந்த இந்த இளைஞனும் “ஆயினும் அம்மா அந்த தோட்டக்காரனுக்கு நீங்கள் வழங்குவதில் பாதி தொகையை மட்டும் எனக்கு வழங்கினால் போதும் அந்த பணியை நான் முடித்துகொடுப்பேன்” எனமீண்டும் கோரியபோது, “மிகவும் நன்றி! தம்பி! இருந்தாலும் நான் அந்த பணிக்காக வேறொரு தோட்டக்காரனை ஏற்பாடு செய்துவிட்டேன். அதனால் இப்போது வாய்ப்பு எதுவும் இல்லை!” என பதில்அளித்தார்.
இருந்தபோதிலும் விடாது இளைஞன் “அம்மா! நான்உங்கள் தோட்டத்தை மிக அழகாக உருமாற்றி பார்ப்பவர்கள் கவரும்வண்ணம் மெருகூட்டிடுவேன்!” என அதிக தொந்திரவு செய்ததை தொடர்ந்து, எதிர்தரப்பில் அந்த அம்மா “பரவாயில்லை தம்பி! நான் அமர்த்தியுள்ள தோட்டக்காரன் நீசொல்வதை விட மிகபிரமாதமாக தோட்டத்தை மெருகூட்டிடும் பணிசெய்து கொண்டிருப்பதால் உனக்கு தற்போது அந்த பணியை வழங்கஇயலாது. அடுத்தமுறைபார்ப்போம். இப்போது என்னை என்னுடைய மற்ற பணிகளைசெய்யவிடு!” என தொலைபேசி இணைப்பை துண்டித்தார்.
இவை அனைத்தையும் பார்வையிட்டுகொண்டிருந்த அருகிலிருந்த கடைமுதலாளியானவர் “தம்பி! இங்கு என்னுடைய கடைக்கு வாருங்கள் தம்பி! உன்னால் செய்யகூடிய பணியை நான் தருகின்றேன். நீங்கள் எதிர்பார்க்கும் சம்பளத்தையும் தருகின்றேன்!” என கோரினார்.
அதனை தொடர்ந்த அந்த இளைஞன் “நன்றி! ஐயா! நான் பேசிய பணியை அந்த அம்மாவின் தோட்டத்தில் தற்போது நான்தான் செய்கின்றேன் அதனால் என்னுடை.ய பணியின் தன்மையையும் திறனையும் பற்றி ‘அந்த அம்மா என்ன எண்ணுகின்றார்கள்’ என தெரிந்துகொள்ளவே இந்த தொலைபேசி உரையாடல் செய்தேன். வணக்கம்! நான் வருகின்றேன் ஐயா!” என பதிலிறுத்து சென்றான்.