புதன், 9 மார்ச், 2011

2012 ஆம் ஆண்டு இறுதியில் உலகம் அழியபோகிறதா?

அறிவியல் அறிஞர்கள் இன்னும் ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு உலகில் எந்தவொரு உயிரினமும் இல்லாமல் முழுவதும் அழிந்துவிட வாய்ப்புள்ளது என அறுதியிட்டு கணித்துள்ளனர். இவ்வாறான அழிவிற்கு மனிதனின் பேராசையே அடிப்படை காரணியாக அமையும் என திட்டவட்டமாக ஒரு குழுவினர் கூறுகின்றனர். மற்றொரு குழுவினர் இவ்வாறான அழிவிற்கு மனிதன் மட்டும் காரணமன்று இயற்கையிலேயே அவ்வாறான நிகழ்வு ஏற்படபோகின்றது என கூறுகின்றனர். மதவாதிகளும் இந்த நிகழ்வு ஏற்படபோவதை உறுதிபடுத்துகின்றனர். தொடர்ந்து மனிதன் இவ்வுலகில் ஏற்படுத்தும் அக்கிரமத்தை பொறுக்க முடியாமல் மனிதனை தண்டிப்பதற்காக கடவுள் அவ்வாறான நிகழ்வை ஏற்படுத்த போகின்றார் என உறுதிபடுத்துகின்றனர் சரி அவ்வாறான நிகழ்வு எற்படுமா என இப்போது ஆய்வுசெய்வோம்.
1.சூரியனில் ஏற்படும் காந்தபுயல்
சூரியனில் தற்போது காந்தபுயல் ஏற்படும் அறிகுறி தோன்றுகின்றது அவ்வாறான காந்தபுயல் 2012 இல் கண்டிப்பாக ஏற்படவாய்ப்புள்ளதாகவும் அதனால் பேரளவு கதிர்வீச்சு ஏற்பட்டு நம்முடைய செயற்கைகோள்கள் அனைத்தும் செயலிழந்து விடவும் நம்முடைய மின்சார வழங்கும் அமைப்புகள் அனைத்துமே அழிந்துபோகும் அபாயம் உள்ளது அதனால் மனிதன் பழைய கற்கால நிலைக்க செல்லவேண்டிய கட்டாயம் ஏற்படும் என வானியல் அறிஞர்கள் கூறுகின்றனர்

2.அனுத்துகள் ஆய்வு
ஐரோப்பாவில் உலகிலேயே மிக பிரமாண்டமான அனுத்துகள் ஆய்வுக் கூடம் ஒன்றினை 27 கிமீ நீளத்திற்கு தற்போது அமைத்து வருகின்றனர். அதில் இந்த பிரபஞ்ச்சத்தின் கருந்துளை ஆய்வை மேற்கொள்ள உள்ளனர்.இந்த பணி முடிந்து 2012 ஆம் ஆண்டில் முதல் ஆய்வை மேற்கொள்ள உள்ளனர் இது ஒரு தவறான ஆய்விற்கான வழியாகும் அவ்வாறு ஒரு ஆய்வை மேற்கொள்வோமாயின் ஒருசிலநொடிப்பெழுதில் இந்த உலகம் ஒரு சிறிய கூடைபந்து அளவிற்கு சுருங்கிவிட வாய்ப்பு கண்டிப்பாக உள்ளது என புவியியல் அறிஞர்கள் கூறுகின்றனர்.

3.எரிமலைவெடிப்பு
சமீபத்தில் ஐரோப்பிய நாட்டில் ஏற்பட்ட எரிமலை வெடிப்பினால் பெரும்பாலாண ஐரோப்பிய நாடுகள் புகையினாலும் சாம்பல்துகள் களினாலும் சூழ்ந்து விமான போக்குவரத்தே பாதிக்கபட்டது அனைவரும் அறிந்த செய்தியே அவ்வாறே நம்முடைய பூமியில் 6.5 இலட்சம் ஆண்டுக்கு ஒருமுறை மிகப்பெரிய எரிமலை வெடிப்பு ஏற்படுவது வழக்கமாகும் அவ்வஆறான எரிமலை வெடிப்பினால்தான டைனோசர் எனப்படுமந் ராட்சத பல்லி இனம் முழுவதும் அழிந்து பேனாதாக வல்லுனர்கள் கணித்துள்ளனர் அவ்வாறான பிரமாண்டமான எரிமலை வெடிப்பு 2012 இல் ஏற்பட வாய்ப்புள்ளதாக கணித்துள்ளனர் அவ்வாறு ஏற்படுமாயின் புகையினாலும் சாம்பல்துகள்களினாலும் இந்த பூமியானது சூழபட்டு சூரியகதிர்கள் புவிக்கு வராமல் தடுக்கபடும் அதனால் நம்முடைய பூமியான சமார் 15 ஆயிரம் ஆண்டுகள்வரை பணிசூழ்ந்து உறைந்து போக வாய்ப்புள்ளதாக அறுதியிட்டு கூறுகின்றனர்

4.இயற்பியல் ஆய்வு
இந்த பூமிமீது ஏராளமான எரிகற்கள் போன்றவை எப்போதும் மோதியவண்ணமே யுள்ளன அவைகள் சிறியதாக இருப்பதால் நம்முடை பவியின் காற்றுமண்டலத்தில்நுழையும்போதே எரிந்து சாம்பாலாகிவிடுகின்றன.ஆயினும் 2012 இல் மோதவிருக்கும் எரிகற்கள் மிகப்பெரிய அளவில் இருக்கும் அதனால் எரி்ந்து அவை சாம்பலாகாமல் நேரடியாக தாக்கிடும் வாய்ப்பு 99 சதவிகிதம் உள்ளதாக பெரிக்கிளின் பல்கலைகழக இயற்பியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்

5.காந்தபுல அச்சின் இடமாற்றம்
நம்முடைய உலகம் சூரியனின் கதிர்வீச்சிலிருந்து காப்பதற்கான காந்தபுல கவசமொன்றை வைத்துள்ளது இந்த காந்தபுலம் வடதுருவம் தென்துருவம் என்ற அச்சின்மீது அமைந்துள்ளது இந்த அச்சானது சுமார் 7.5 இலட்சம் ஆண்டிற்கொருமுறை இடமாறிகொண்டே யுள்ளது அவ்வாறான கணக்கில் மிகுதி 30ஆயிரம் ஆண்டு பாக்கியுள்ளது அதனால் இந்த காந்தபுல அச்சின் இடமாற்றமானது ஆண்டு ஒன்றுக்கு சுமார் 20 முதல் 30 கிமீ வரை முன்பைவிட தற்போது மிக வேகமாக எற்படுகின்றது. இவ்வாறான அச்சின் இடமாற்றத்தினால் நம்முடைய பூமியில் இந்த காந்தபுலத்தின் கவசம் இல்லாது போகும் நிலை 2012 இல் எற்பட வாய்ப்புள்ளது அதனால் இந்த பூமியில் எந்த உயிரினமும் உயிர்வாழமுடியாது போகும் என்று உறுதிகூறுகின்றனர்

6.மாயன் காலண்டர்.
ஆயரம் ஆண்டுகளுக்கு முன்பே பூமியானது சூரியனை சுற்றிவரும் காலத்தை மிகதுல்லியமாக (34 நொடிகள் மட்டும் குறைவாக) கணக்கிட்டுள்ளனர்..அக்காலண்டரில் 21.12.2012 வரை மட்டுமே கணக்கிடபட்டுள்ளது அதற்குபிறகு கணக்கிட படவில்லை அதனால் சோதிட வல்லுனர்கள் நம்முடைய பூமியானது 21.12.2012 அன்று அழியபோவதாக பயமுறுத்து கின்றனர்
மதங்கள் கூறுபவை
தீயசக்தியுடனான போர் 2012 இல் முடிவுக்கு வரவிருப்பதாக பைபிளில் கூறப்பட்டுள்ளதாக பொருள்கூறுகின்றனர் அவ்வாறே மற்றமதங்களும் கூறுகின்றன என்றும்ஆய்வாளர்கள் கூறுகின்றனர்
மனிதனால் ஏற்படும் ஆபத்து
நகரமயமாவதாலும் நம்முடைய அளவற்றஆசையினால் இயற்கையின் உணவுசங்கிலியை அறுத்துவிட்டதாலும் உணவுபஞ்சம் உருவாகபோகின்றது .அதுமட்டுமல்லாது நம்முடைய பேராசையினால் புவிவெப்பமாயமாதல் போன்ற பேராபத்து காத்திருக்கின்றது அதன் தொடர்ச்சியாக மழைகுறைவு ஏற்பட்டு தண்ணீருக்காகவே மூன்றாவது உலகபோர் ஏற்பட வாய்ப்பு அதிகமுள்ளது. இயற்கை அழிவைவிட இந்த செயற்கை பேரழிவிற்கே அதிக வாய்ப்புள்ளதாக ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.

பதிவுகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற

கருத்துகள் இல்லை: