செவ்வாய், 21 பிப்ரவரி, 2012

அன்பிற்கு விலை அன்புமட்டுமே

ஒரு ஏழ்மைநிலையிலிருந்த ஒருமாணவன் சிறுசிறு பொருட்களை ஒவ்வொரு வீடாக சென்று விற்று அதனால் வரும் வருமானத்தை கொண்டு பள்ளிக்கட்டணமாகவும் தனக்கான உணவாகவும் பயன்படுத்தி படித்து வந்தான் ஒருநாள் அவ்வாறு பொருட்களை விற்று கொண்டு வரும்போது போதுமான வருமானம் கிடைக்கவில்லை அதனால் நடக்க கூட இயலாமல் பசியோடு விற்பணை செய்து கொண்டிருந்தபோது பசியின் கொடுமை தாளாமல் ஒரு வீட்டின் வாயிற்கு சென்று கொஞ்சம் குடிப்பதற்கு தண்ணீர் மட்டும் கேட்டான் அவ்வீட்டு அம்மையார் இவனுடைய ஏழ்மை தோற்றத்தையும் பசிகளைப்பையும் பார்த்துவிட்டு இவனுக்கு உதவவேண்டும் என்ற நல்லெண்ணத்தில் குடிநீருக்கு பதிலாக ஒரு டம்ளர் நிறையபால் வழங்கினார் அதனை வாங்கி பருகியவுடன் இவனுடைய பசிகளைப்பு தீர்ந்து நடப்பதற்கு தெம்பாகவும் மேலும் அடுத்தடுத்த வீடுகளில் சென்று விற்பனை செய்வதற்கான திறனும் கிடைத்தது அதனால் அவன் "நான் உங்களுக்கு கடன் பட்டுள்ளேன்" என கூறினான்.அதற்கு "இல்லையப்பா ஒரு தாயானவள் தன்னுடைய பிள்ளைக்கு வழங்கும் அன்பிற்கு பதிலாக விலையெதுவும் பெறுவதில்லை" என்று அந்த தாயுள்ளம் கொண்ட அம்மனி கூறினால் உடன் "இந்த உதவிக்கு என்னுடைய நெஞ்சுள்ளவரை தங்களுக்கு நன்றியுடைவனாக இருப்பேன்" என கூறி தன்னுடைய விற்பனைபணியை தொடர்ந்து செயல்படுத்திட அடுத்தவீட்டிற்கு சென்றான் அதன்பின்னர் நன்கு உழைத்து தன்னுடைய படிப்பில் கவணம் செயலுத்தி படித்து ஒரு பெரிய மருத்துவராக அறுவைசிகிச்சை நிபணராக முன்னேறினான் இந்நிலையில் அந்த அம்மையாருக்கு பெயரிடமுடியாத நோய் ஒன்று வந்து படுத்த படுக்கையாகிவிட்டார் எந்தவொரு மருத்துவரும் அந்நோய்க்கான மருந்து தமக்கு தெரியவில்லை என கைவிரித்துவிட்டனர் இறுதியாக நம்முடைய அறுவைசிகிச்சை நிபுனரிடம் இந்த அம்மையாரை அழைத்து வந்தனர் உடன் இந்த அம்மையார் தமக்கு பசிக்கொடுமை தீர்த்தவர் என அறிந்துகொணடு அல்லும் பகலும் அயராது தீவிரமாக முயன்று அந்த அம்மையாரின் நோயை கட்டுபடுத்தி அறவே நீக்கினார் இறுதியாக மருத்துவசெலவாக ஏராளமான தொகை குறிப்பிடுவார்கள் அதனை அம்ரு்ததுவமனைக்கு செலு்ததவேண்டியிருக்கும் என எதிர்பார்ததவர்களுக்கு இந்த மருத்துவத்திற்கான செலவிற்கான பட்டியலில் இந்த நோய்க்கானபட்டியல் தொகை ஒருடம்ளர் பால் ஏற்கனவே வழங்கபட்டுவிட்டது என குறிப்பிட்டிருந்தது அதனுடன் ஒரு தாய்க்கு அவருடைய பிள்ளை அன்புடன் செய்யும் உதவிக்கு விலையேதுமில்லை அன்புதான் விலையாகும் என்றும் குறிப்பிட்டிருந்தது

பதிவுகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற

கருத்துகள் இல்லை: