சரவணன் என்பவர் கடந்தமாதம் மாருதி சுசுகி மோட்டார் என்ற நிறுவனத்தின் வேலைவாய்ப்பு விளம்பரத்தை கண்டு விண்ணப்பித்தார். உடன் அவருக்கு மின்னஞ்சல் ஒன்று வருகின்றது அதில் இவர் விண்ணப்பித்த குறிப்பிட்ட வேலைக்கு தெரிவு செய்யபட்டுள்ளதாகவும் உடன் பாரத ஸ்டேட் வங்கியின் குறிப்பிட்ட கணக்கில் ரூபாய் 20,000/-ஐ உடன் செலுத்தினால் பணியில் சேரலாம் எனவும் குறிப்பிடபட்டிருந்ததை அறிந்து உடன் அங்கிங்கு என அலைந்து கடன்வாங்கி இந்த தொகையை அவருக்கு வந்த மின்னஞ்சலில் குறிப்பிடபட்ட பாரத ஸ்டேட் வங்கியின் கணக்கில் ரூபாய் 20,000/- ஐ செலுத்தி தமக்கு பணிக்கான உத்திரவு வந்துசேரும் என காத்திருந்தார்
ஆனால் இந்த நிறுவனத்தின் விஜிலென்ஸ் பிரிவிலிருந்து போலியான விளம்பரத்திற்கு காப்புத்தொகை செலுத்தியதற்காக ஏன்உங்கள் மீது நடவடிக்கை எடுக்ககூடாது என்ற அறிவிப்பு தான் இவருக்கு கிடைக்கபெற்றது
ஆம் இவ்வாறான போலியான விளம்பரங்களின்மூலம் படித்து வேலைவாய்ப்பிற்காக காத்திருக்கும் இளைஞர்களிடமிருந்து காப்புத்துதொகை என்றும் இதர செலவினத்தொகை என்றும் அபகரிக்கும் போக்கு இன்று அதிகரித்துள்ளது மிகவருத்தத்திற்குரிய நிலையாகும்
மேலும் சமீபத்தில் பார்மா ரேன்பேக்ஸி லேபோரேட்டரிஸ் என்ற நிறுவனம் ஆனது தங்களுடைய நிறுவனம் ஆட்களை பணிக்கு அமர்த்துவதற்காக காப்புத்தொகை, நடைமுறை செலவிற்கான கட்டணம் அல்லது இதர கட்டணம் என எதுவும் தங்களுடைய நிறுவனத்திற்கான பணியாட்களை தேர்வுசெய்யும்போது வசூலிப்பது இல்லை எனவிளம்பரம் செய்கின்றது .
பொதுமக்கள் அதுவும் மேற்படிப்புகள், தொழில்சார்ந்த படிப்புகளை படித்தபின் வேலைவாய்ப்பிற்காக காத்திருப்போர் கண்டிப்பாக மேலே முதல் பத்தியில் கூறியவாறான போலியான விளம்பரங்களையோ வாக்குறுதிகளையோ குறிப்பிட்ட நிறுவனத்தின் லோகோவை கொண்டு ஏமாற்றபடுவதிலிருந்து எச்சரிக்கையாக இருக்குமாறு கேட்டுகொள்ளபடுகிறார்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக