ஆமைகளின் குடும்பம் ஒன்று விடுமுறையின்போது பொழுது போக்காக இனிய சுற்றலா செல்ல விரும்பியது அவ்வாறான சுற்றலாவில் தம் குடும்ப உறுப்பினர்களுக்கு தேவையான சிற்றுண்டி ,உணவுவகைகள் ,தின்பண்டங்கள் ஆகியவைகளை தயார்செய்து பொட்டலங்களாக கட்டி கூடவே எடுத்து சென்றது
சுற்றலா தளத்திற்கு சென்றடைந்தபின் குடும்ப உறுப்பினர்களின் பசியாற உண்பதற்காக கையோடு எடுத்து சென்ற உணவு பொட்டலங்களை பிரிக்கலாம் என முனையும் போதுதான் உப்பு கையோடு எடுத்துவர மறந்து போனது தெரியவந்தது
அடடா உப்பில்லா பண்டம் குப்பையிலே எனும் பழமொழிக்கு ஏற்ப உப்பில்லாமல் தாம் எடுத்து சென்ற உணவுவகைகளை சாப்பிட முடியாது என்பதால் அக்குடும்ப உறுப்பினர்களில் யார் விரைவாக தங்களுடைய வீட்டிற்கு சென்று தாங்கள் அனைவரும் சாப்பிடுவதற்கான உப்பினை எடுத்துவருவது என நீண்டநெடிய கலந்துரையாடளுக்கு பின்னர் ஒரு இளவயது ஆமையை அனுப்புவது என இறுதியாக முடிவிற்கு வந்தன.
அவ்வாறே அவ்விளவயது ஆமையும் தான் திரும்பும்வரை அவ்வுணவு பொட்டலங்களை பிரிக்ககூடாது என்றும் அவ்விளவயது ஆமையானது தங்களுடைய வீட்டிற்கு சென்று உப்பினை எடுத்து திரும்பி வந்த பின்னரே உணவு பொட்டலங்களை பிரிக்க வேண்டும் என்றும் கூறிய நிபந்தனையை உறுபினர்கள் அனைவரும் ஏற்றுக்கொண்ட பின்னரே அவ்விளவயது ஆமை உப்பினை எடுத்துவருவதற்கு ஒத்துகொண்டது
பின்னர் உப்பினை எடுத்துவருவதற்கு தங்களுடைய வீட்டிற்கு அவ்விளவயது ஆமை சென்றது மிகநீண்டநேரம் ஆகியும் உப்பினை எடுத்துகொண்டு அந்த இளம் வயது ஆமை திரும்பிவரக்காணோம்
இதற்கு மேல் பொறுத்திருந்தால் குடும்ப உறுப்பினர்கள் அனைவரின் பசியும் அடங்காது அதனால் உப்பில்லையென்றாலும் பரவாயில்லை பசிக்கு ருசி எதுவும் பார்க்கத்தேவையில்லை கையில் இருப்பதை உண்ணலாம் என முடிவுசெய்து உணவுபொட்டலங்களை பிரிக்க ஆரம்பித்தன
உடன் அருகில் புதர்மறைவில் பதுங்கியிருந்த அந்த இளம் வயது ஆமையானது திடீரென வெளியில் வந்து பார்த்தீர்களா நான் திரும்பி வந்து சேராமலேயே இதுபோன்று உணவுபொட்டலங்களை பிரிப்பீர்கள் என அப்போதே எனக்கு சந்தேகம் அதனால் நீங்கள் என்ன செய்யபோகின்றீர்கள் என அறிந்து கொள்வதற்காக உப்பினை எடுத்துவருவதற்கு வீட்டிற்கு செல்லாமேலேயே இந்த புதருக்குள் மறைந்திருந்து கண்கானித்து வந்தேன் என்னுடைய சந்தேகம் சரியாகத்தான் உள்ளது என அந்த இளம் வயது ஆமையானது அதிக கலாட்டா செய்து ஆர்ப்பாட்டம் செய்தது
ஆம் இவ்வாறே நம்மில் பெரும்பாலோர் மற்றவர்களின் செயலை நம்பாமல் நாமும் அந்த செயலை சரியாக செய்திடாமல் காலத்தையும் இதர வளங்களையும் வீணடித்து வருகின்றோம் முதலில் நாம் சரியாக செய்துமற்றவர்களும் அவ்வாறே செய்யவேண்டும் என எதிர்பார்ப்பதே மிக்சசரியான நடைமுறையாகும் என மேற்கண்ட சிறு கதையிலிருந்து தெரிந்து கொள்ளலாம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக