செவ்வாய், 12 பிப்ரவரி, 2013

ஊழியர்களின் உற்பத்திதிறனை உயர்த்திடும் வழிமுறைகள்


மேலாளர் ஒருவர் பின்வரும் வழிவகைகளை பின்பற்றி தம்கீழ் பணிபுரியும் ஊழியர்களின் உற்பத்திதிறனை உயர்த்தமுடியும்

1 ஊழியர்கள் அனைவரையும் எப்போதும் எதிர்மறையாக சந்தேக கண்ணோடு பார்ப்பது அதாவது எந்தசெயலையும் அவர்கள் தவறாவே முடிப்பார்கள் அவரவர்களுக்கு ஒதுக்கபட்ட பணியை சரியாக செய்து முடிக்கமாட்டார்கள் என தவறான கண்ணோட்டத்துடன் ஊழியர்களை அனுகுவதால் மிகச்சரியாக தம்முடைய கடமையை செய்யும் பணியாளர்களும் மணமுடைந்து தம்முடைய பணியை செய்யாமல் விட்டுவிடும் நிலை ஏற்படும் அதனை தவிர்க்க தம்கீழ் பணிபுரியம் பணியாளர்கள் அனைவரும் மிகச்சரியாக பணிபுரிவார்கள் என நேர்மறையாக நோக்கி அவர்களின் பணித்திறனை அங்கீகரிப்பது

2 தம்கீழ்பணிபுரியும் பணியாளர்களை நேர்மறையாக அனுகுவதுமட்டுமல்லாமல் அவர்களின் பணியை பணித்திறனை நன்றாக முடித்திருக்கின்றீர்கள் இன்னும் சிறிது முயற்சிசெய்தால் மேலும் சிறப்பாக இருக்கும் என தட்டிகொடுத்து அவர்கள் செய்த பணியை மேலும் சிறப்பாக செய்வதற்காக ஊக்கபடுத்துவது

3 தம்கீழ்பணிபுரியம் பணியாளர்கள் அவரவர்களுக்கு ஒதுக்கபட்ட பணியை அதுதொடர்பான விவரங்களையும் அதனை செய்யும்போது ஏற்படும் தடங்கல்கள் அதனை வெற்றிகொண்ட வழிமுறை முந்தையோர் பெற்ற பணிஅனுபவங்கள் ஆகியவற்றை கவணித்து தத்தமது பணியை சிறப்பாக செய்யவேறுஎன்னவகையான முயற்சி தேவையென தானாகவே கவணித்து அறிந்துகொள்ளும் திறனை வளர்த்திடவேண்டும்

4 எந்தவொரு செயலிலும் பணியாளர்கள்அனைவரையும் பங்கேற்று செயல்படுமாறு ஒரு குழுமனப்பான்மையை உருவாக்கிடவேண்டும் அதாவது ஊர்மக்கள் அனைவரும் கூடி தேரின் வடத்தை பிடி்தது இழுத்தால் மட்டுமே தம்முடைய ஊரின் கோயிலினுடைய தேரை நகர்த்தி செல்ல முடியும் என்ற குழுமனப்பாண்மையை கொண்டுவரவேண்டும்

5 அதுமட்டுமல்லாது தம்கீழ்பணிபுரியும் பணியாளர்கள் அவரவர்களின் பணியை சிறப்பாக முடித்தவுடன் அதனை ஏற்று பாராட்டும் வகையிலும் ஊக்கபடுத்தும் வகையிலும் அவர்களுக்கு அவ்வப்போது தக்கபாராட்டுதல்களையும் தேவைபபட்டால் மிகைஊதியம், பரிசுபொருட்கள், ஊக்கத்தொகை போன்றவற்றை பணியாளர்களுக்கு வழங்க தயங்ககூடாது இதனால் மற்ற ஊழியர்களும் சிறப்பாக பணிபுரிவதற்கான ஊக்கமும் உத்வேகமும் ஏற்படும்

கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...