ஞாயிறு, 15 பிப்ரவரி, 2015

நூறாவது தங்ககாசிற்கான பேராசையின் பாதிப்பு


அரசன் ஒருவன் தன்னுடையஆளுகையின் கீழ் உள்ள நகரை சூற்றி பார்த்து வரும்போது தன்னிடம் பணிபுரிந்துவருகின்ற பணியாளர் ஒருவர் தன்னுடைய வீட்டில் பாட்டு ஒன்றினை பாடிக்கொண்டு மிகமகிழ்ச்சியோடு இருப்பதை கண்டார் .

உடன் அவ்வர சன் அந்த பணியாளரை அழைத்து உன்னால் எவ்வாறு மிகமகிழ்வோடு இருக்கமுடிகின்றது என வினவியபோது அந்த பணியாளர் என தங்குவதற்கு இந்த கூரைவீடுஉள்ளது உண்பதற்கான உணவை நீங்கள் வழங்கும் சம்பளம் போதுமானதாக உள்ளது அதனைதவிர வேறு கவலை எதுவுமில்லை அதனால் நான் மிக மகிழ்வாக இருக்கின்றேன் என க்கூறியதை தொடர்ந்து நகர்வலம் முடித்து அரண்மனைக்கு திரும்பியபின் அந்த அரசன் தன்னுடைய அமைச்சரை அழைத்து அமைச்சரே இவ்வளவு பெரிய அரண்மனையில் வாழும் நான் மகிழ்ச்சியாக இருக்கமுடியவில்லை ஆனால் என்னிடம் பணிபுரியும் சாதாரண பணியாளர் ஒருவர் மிக மகிழ்ச்சியோடு இருக்கமுடிகின்றதே என்ன காரணம் என வினவினார்

அது வேறொன்றுமில்லை ஐயா அந்த பணியாளர் 99ஆம் சங்கத்தில் உறுப்பினராக சேரவில்லை அதனால் அந்த பணியாளர் மிகமகிழ்வோடு உள்ளார் . அது என்ன 99ஆம் சங்கம் சிறிது விளக்கமாக கூறுங்களேன் என வினவியபோது அது வேறொன்றுமில்லை ஐயா இன்று இரவு அந்த பணியாளரினுடைய வீட்டு வாயிலின் முன்பு நம்முடைய அரண்மனை கஜானாவிலிருந்து 99 தங்ககாசுகளை பைக்குள் எடுத்துசென்று வைத்திட அனுமதியுங்கள் என கோரி அரசனிடம் அனுமதிபெற்று 99 தங்ககாசுகளை பைக்குள் எடுத்துசென்று வைத்துவந்தார்

விடியற்காலை அந்த பணியாளர் விழித்து எழுந்து பார்த்தபோது பைநிறைய தங்ககாசுகள் இருப்பதை பார்த்து மிகமகிழ்வோடு வீட்டினுள் எடுத்துசென்று எண்ணிக்கை யிடும்போது 99 தங்ககாசுகள் மட்டும் இருந்தன அடடா இன்னும் ஒரு தங்ககாசு எங்கே போயிருக்கும் என மிக மனவருத்ததுடன் விடக்கூடாது அந்த நூறாவது தங்ககாசினை மிக்கடுமையாக உழைத்து சம்பாதிக்கவேண்டும் என முடிவுசெய்து அன்றிலிருந்து ஓய்வுநேரம் கூட எதிர்பார்க்காமல் அல்லும்பகலும் பாடுபட ஆரம்பித்ததால் தினமும் இரவில் மகிழ்ச்சியோடு ஆடிபாடும் நிலையை அந்த பணியாளர் கைவிட்டிட்டார்.

ஆம் நம்முடைய வாழ்வில் பேராசை என்பது எட்டிபார்க்காதவரை நாமனைவரும் மிகமகிழ்வோடு வாழ்ந்துவருவோம் நண்பர்களே இந்த பேராசை நம்முடைய மனதில் இடம்பிடித்த மறுநொடியிலிருந்த நம்முடைய மகிழ்ச்சியான வாழ்வு மறைந்து தூக்கம் கெட்டு உடல்நிலை மோசமாக ஆனாலும் நாம் பேராசையின் பிடியிலிருந்துவிடுபடாமல் அன்றாட பணிகளை மிகமோசமானதாக ஆக்கிவிடுகின்றோம்

கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...