சனி, 16 ஏப்ரல், 2016

உதவிதேவைப்படு்ம் மற்றவர்களுக்கு உதவிசெய்து வாழ்வதே உண்மையான மகிழ்ச்சியும் நிம்மதியுமான வாழ்க்கையாகும்


ஏராளமானஅளவில் வீடு ,நிலம்,பணம் என அனைத்தும் இருந்தும் வாழ்க்கையில் மகிழ்ச்சியில்லாமல் இருந்த ஒருவன் மனநல மருத்துவரிடம் சென்று "ஐயா எனக்கு போதுமான அளவில் அனைத்து செல்வங்களும் உள்ளன ஆனால் மகிழ்ச்சிமட்டும் இல்லை அதற்கு நான் என்ன செய்யவேண்டும்?” என கோரினான்

உடன் அம்மருத்துவர் "அப்படியா தம்பி "என அங்கு தரையை பெருக்கி சுத்தம் செய்துகொரண்டிருந்த வயதானபெண்ணை அழைத்து "நீ எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கின்றாய் எனக்கூறு" என்றார்

உடன் அந்த பெண்மனி தான் செய்து கொண்டிருந்த பணியை அப்படியே நிறுத்திவிட்டு "என்னுடைய கணவர் நோய்வாய்பட்டு இறந்தார் அதன்பின்னர் எங்களுடைய ஒரேமகனும் பயனத்தின்போது அடிபட்டு இறந்து விட்டான் அதனைதொடர்ந்து என்னுடைய வாழக்கைக்கு துனையாரும் இல்லை அதனால் நான்வயிறார சாப்பிடவும் நன்றாக தூங்கவும் முடியவில்லை மகிழ்ச்சி யென்பது என்னுடைய வாழ்வில் இல்லை என்ற நிலையாகிவிட்டது

அந்நிலையில் ஒருநாள் சிறியபூனைகுட்டி ஒன்று நான் வெளியில் சென்று வீடுதிரும்பிவரும்போது என்னை பின்தொடர்ந்து வந்தது வெளியே ஒரே குளிராக இருந்ததால் அந்த பூனை குட்டியை வீட்டிற்குள் அனுமதித்து அதற்கு ஒரு தட்டில் பாலினை ஊற்றினேன் உடன் அந்த பூனைகுட்டி தட்டில்ஊற்றிய பாலை குடித்தபின்னர் என்னுடைய பாதத்தினை நக்கி தன்னுடைய நன்றியை தெரிவித்து கொண்டது அதனை தொடர்ந்து முதன்முதல் என்னுடைய முகத்தில் அப்போதுதான் புன்னகை தோன்றியது மனதிலும் மகிழ்ச்சி ஏற்பட்டது.

”சாதாரனமாக ஒரு சிறிய பூனைகுட்டிக்கு உதவிசெய்ததற்கே நம்முடைய மனதில் மகிழ்ச்சி ஏற்படுகின்றது எனில் உதவிதேவைப்படும் மற்றவர்களுக்கு நம்மாலான உதவிசெய்தால் இன்னும் அதிகமான மகிழ்ச்சியும் வாழ்க்கையின் அர்த்தமும் கிடைக்கும் என முடிவுசெய்தேன் அதனால் தினமும் உதவிதேவைப்படும் எந்தவொரு நபருக்கும் என்னால் முடிந்த உதவியை செய்து மகிழ்ச்சியுடன் இருக்கின்றேன் அதனை தொடர்ந்து தற்போது நான் வயிறார சாப்பிட்டு நிம்மதியாக உறங்குகின்றேன் மற்றவர்களுக்கு என்னாலான உதவியை செய்து அதன்மூலம் மகிழ்ச்சியுடன் வாழ்ந்துவருகின்றேன் என்றார்

"அய்யய்யோ நான் இந்த உலகில் மகிழ்ச்சியையும் சேர்த்து அனைத்தையும் பணத்தின்மூலம் வாங்கிவிடலாம் என தவறாக எண்ணியிருந்தேனே" என அழுதுபுலம்பினார் அதன்பின்னர் "இன்றுமுதல் நானும் உதவிதேவைப்படு்ம் மற்றவர்களுக்கு உதவிசெய்து மகிழ்ச்சியும் நிம்மதியும் பெற முயற்சிசெய்வேன்" என உறுதிகூறி சென்றார்

பதிவுகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற

கருத்துகள் இல்லை: