எட்டுவயது உள்ள ஒருசிறுவன் தன்னுடைய தாத்தாவிடம் வந்து “தாத்தா நான் மிகச்சிறந்த வெற்றியாளனாக வளரவிரும்புகின்றேன் அதற்கான தங்களுடைய அறிவுரைகளையும் ஆலோசனைகளும் கூறங்கள்,” என கோரினான்.உடன் அவரும்அந்த சிறுவன் கோரியவாறு அவனுக்கான ஆலோசனைகள் எதையும் கூறாமல் அவனுடைய கையை பிடித்து அழைத்துகொண்டு அருகிலிருந்த நாற்றங்காளிற்கு சென்றார். அங்கு மரங்களுக்கான இரு நாற்றுகளை வாங்கிகொண்டுவந்து ஒன்றினை வீட்டிற்குள் ஒருமண்தொட்டியிலும் மற்றொன்றினை வீட்டிற்கு வெளியே தோட்டத்திலும் நட்டுவைத்து தண்ணீர் ஊற்றினா.ர் பின்னர் தங்களுடைய பேரபிள்ளையிடம் “இவ்விரண்டில் எது மிகப்பெரிய மரமாக வளரும்?” என வினவினார். உடன் அந்த சிறவன்“அதில் என்ன சந்தேகம் தாத்தா! வீட்டில் பாதுகாப்பாக வைத்துள்ளதுதான் வளர்ந்து மரமாகும்”, என பதிலிறுத்தான். “அப்படியா! சரிபார்க்கலாம்,”என பதில்கூறினார் .கல்லூரி செல்லும் இளங்காளையாக வளர்ந்தபின்னர் விடுமுறைக்கு வீட்டிற்கு வந்தான் அப்போது தன்னுடைய தாத்தாவிடம் வந்து “தாத்தா! நான் எட்டுவயது சிறுவனாக இருந்தபோது மிகச்சிறந்த வெற்றியாளனாக வளருவதற்கான தங்களுடைய அறிவுரைகளையும் ஆலோசனைகளையும் கோரினேன் இதுவரையில் தாங்கள் எனக்கு எதையும் கூறவில்லை.” என வினவியபோது, “அப்படியா! சரி வா, நாமிருவரும் நட்டுவைத்த மரக்கன்றுகளை பார்த்திடுவோம் அதன்பின்னர் நீகோரியவாறு ஆலோசனைகளை உனக்கு கூறுகின்றேன்.” என பதிலிருத்தவாறு இருவரும் வீட்டிற்குள் மண்தொட்டியில் வைத்த மரக்கன்றினையும் வீட்டிற்கு வெளியே தோட்டத்தில் வைத்த மரக்கன்றினையும் பார்வையிட்டனர். என்னஆச்சரியம்! வீட்டிற்குள் பாதுகாப்பான இடத்தில் வைத்த மரக்கன்று குட்டையாக வளர்ச்சியெதுவுமில்லாமல் இருந்தது.ஆனால், வீட்டிற்கு வெளியே தோட்டத்தில் வைத்திருந்த மரக்கன்றானது மிகப்பெரியமரமாக வளர்ந்து பூவும் காயுமாக பூத்து குலுங்கியது. “பார்த்தாயா தம்பி! பாதுகாப்பான சூழலில் வைத்த மரக்கன்று பெரியமரமாக வளராமல் இருந்ததையும் வெளியே பாதுகாப்பற்ற சூழலில் வைத்த மரக்கன்று நல்ல மரமாக வளர்ந்துள்ளதையும்; இதேபோன்று நம்முடைய வாழ்விலும் ஏராளமான எதிர்ப்புகளும் மேடுபள்ளங்களும்குறுக்கிடும் நாமும் அவைகளை கண்டு சோர்வுற்று ஒதுங்கிவிடாமல் நாம்ம அவைகளுடன் போராடி வெற்றிபெறவேண்டும் என போராடுவோம் அதனை தொடர்ந்து நம்முடைய வாழ்க்ககையானது வெற்றிகரமாக அமையும். அவ்வாறில்லாமல் பாதுகாப்பான சூழலில் வாழ்க்கையானது வெற்றிகரமாக அமையாது என்பதை தெரிந்து கொள்: நீயும் அவ்வாறே நாம் வாழும் இந்த சமூகசூழலில் எதிர்ப்படும் எந்தவொரு இக்கட்டிற்கும் மிகச்சரியான தீர்வினை கண்டு வெற்றிகரமான வாழ்க்கையை அமைத்துகொள்!” என்று அறிவுரை கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக