மதிய உணவிற்குப் பிறகு ஆசிரியை ஒருவர் தன்னுடைய மாணவர்களிட-மிருந்து பெறப்பட்ட வீட்டுப்பாடங்களைத் திருத்தம் செய்திட துவங்கினார். அவரது கணவர் அவருடைய விருப்பமான விளையாட்டு ஒன்றினை திறன் பேசியில் (ஸ்மார்ட் போனில் )விளையாடிகொண்டிருந்தார் .
அம் மாணவர்களின் கடைசி வீட்டுபாட நோட்டினை திருத்தவதற்காக படிக்கும்போது, அந்த ஆசிரியை மௌனமாக கண்ணிலிருந்து கண்ணீர் வழிந்தோட அழுத்தொடங்கினாள்.
இதனை கண்ணுற்ற அவளுடைய கணவன் , 'ஏன் அழுகிறாய்? என்ன நடந்தது?'
என வினவினான்
உடன் அவருடைய மனைவி: 'நேற்று நான் என் னுடைய நான்காம் வகுப்பு மாணவர்களுக்கு - என் விருப்பம். என்ற தலைப்பில் வீட்டுபாடம் எழுதிடுமாறு கூறியிருந்தேன் '
கணவன்: 'எல்லாம் சரி, ஆனால் நீ ஏன் அழுகிறாய்?'
மனைவி: 'இன்று அம்மாணவர்களின் வீட்டுப்பாடங்களை திருத்தி கொண்டிருந்தேன் இந்த கடைசி வீட்டுபாட நோட்டை சரிபார்த்து திருத்தம் செய்திடலாம் என படித்தபோது எனக்குமிகவும் அழுகையாக வருகின்றது.'
கணவன் ஆர்வத்துடன்: 'நீ அழுகின்ற அளவிற்கு அதில் என்ன எழுதியிருக்கிறது?'
மனைவி: ' நீங்களே பாருங்கள் என அந்த வீட்டுபாட நோட்டினை தன்னுடைய கணவனிடம் கொடுத்தாள் அதில் 'நான் ஒரு திறன் பேசியாக( ஸ்மார்ட் போன் ஆக) விரும்புகிறேன்.
ஏனெனில் எப்போதுமே என்னுடைய பெற்றோர்கள் என்னை கவனித்துக் கொள்ள மறந்துவிடுகிறார்கள். அதாவது என் பெற்றோர்கள் என்னை விரும்புவதைவிட தங்களுடைய ஸ்மார்ட் போனையே அதிகம் விரும்புகிறார்கள்.
என்னுடைய தகப்பனார் அலுவலகத்திலிருந்து சோர்வாக வந்து சேர்ந்தாலும் உடன் என்னை மட்டும் மறந்துவிட்டு தன்னுடைய ஸ்மார்ட் போனில் மூழ்கி போய்விடுகின்றார் அவ்வாறே என்னுடைய தாயும் அலுவலகம் முடிந்த சோர்வாக வந்துசேர்ந்தாலும் உடன் என்னை மட்டும் மறந்துவிட்டு தன்னுடைய ஸ்மார்ட் போனை கையிலெடுத்து கொள்கின்றார் ஆனால் இவ்விருவரும்என்னை மட்டும் கவணிக்க நேரம் இல்லை என்கின்றார்
என் பெற்றோர் ஒரு சில முக்கிய வேலைகளை ஆழ்ந்து செய்து கொண்டிருந்தாலும் ஸ்மார்ட் போன் ஒலிக்கத்துவங்கியவுடனே அதனை கையிலெடுத்து அவர்கள் தொலைபேசியின் உரையாடலில் கலந்து கொள்கிறார்கள், ஆனால் . நான் அழுதால் ஏனென்று கூட திரும்பி பார்க்காமல் தங்களுடைய பணியில் மூழ்கி இருக்கின்றனர்.
எப்போதும் என்னுடைய பெற்றோர்கள் தங்களுடைய ஸ்மார்ட் போன்களில் விளையாடுகின்றனர் ஆனால் என்னுடன்மட்டும் விளையாடுவதேயில்லை. என்னுடன் விளையாடுவதற்கு மட்டும் நேரமே இல்லை யென்கின்றனர்
என்னுடைய பெற்றோர்கள் தங்களுடைய ஸ்மார்ட் போனில் மற்றவர்களுடன் பேசும் போது மற்றவர்கள் கூறுவதை காதுகொடுத்து எவ்வளவு நேரமானாலும் பதில் கூறுகின்றனர் ஆனால், நான் ஏதேனும் என்னுடைய பெற்றோர்களிடம் சந்தேகம் கேட்டால் தங்களுக்கு தலைக்கு மேல் வேலை ஏராளமாக இருப்பாதல் காதுகொடுத்து கேட்கவும் மாட்டேன்என்கின்றார்கள் என்னுடைய சிரித்து பேசி உரையாடவும் செய்வதி்ல்லை . எனவே, நான் ஸ்மார்ட் போன் ஆகவே விரும்புகிறேன். என முடிந்திருந்தது
இதனை படித்த கணவன், உணர்ச்சிவசப்பட்டு, தன்னுடைய மனைவியிடம் , 'இதை எழுதியவர் யார்?' என வினவினார்
மனைவி: 'நம் மகன் தான் இ்வ்வாறு வீட்டுபாடத்தினை எழுதியுள்ளான என பதில் கூறினாள் ஆம் நாம்அனைவரும் ஸ்மார்ட் போன் போன்ற பல்வேறு வீட்டு உபயோக பொருட்களுக்கு அடிமையாகி நம்முடை ய வீடு குழந்தைகள் ஆகிய யாருடனும் அன்புடனும் பேசி பழகி வாழ்வதற்கு அறவே மறந்து விடுகின்றோம் இதனுடைய தீய விளைவை தற்போதாவது தெரிந்து விழிப்புணர்வு பெற்று நம்முடைய பிள்ளைகளுடன் கூடிஉரையாடி பேசி மகிழ்வுடன் வாழ உறுதி கொள்வோம்