ஞாயிறு, 24 டிசம்பர், 2017

உண்மைக்கும் பொய்க்கும் இடையே உள்ளவித்தியாசம் என்ன?


ஒரு நாள் பேரரசர் அக்பருக்கு உண்மைக்கும் பொய்க்கும் இடையே உள்ளவித்தியாசம் என்ன என்ற பெரிய சந்தேகம் ஒன்று எழுந்தது, அதனால் தன்னுடைய அரசசபையில் இருந்த பிரபுக்கள் அனைவரிடமும் இவ்விரண்டிற்கும் இடையேயான வித்தியாசத்தை மூன்று அல்லது அதற்கு குறைவான சொற்களுக்குள் கூறமுடியமா எனக் கேட்டார். அவையிலிருந்த அனைவரும் பேரசர் அக்பரின் கேள்விக்கான பதிலை சுருக்கமாக கூறமுடியாமல் திகைத்து ஒருவரையொருவர் பார்த்துகொண்டிருந்தனர், . இறுதியாக பேரரசர் அக்பர் அருகில் அமர்ந்திருந்த மதியூக மந்திரி பீர்பாலிடம் திரும்பி இதற்கான பதிலை நீங்களாவாது கூறமுடியுமா என வினவினார். உடன் 'நான்கு விரல்கள்' என்று பேரரசர் அக்பரின் கேள்விக்கு பதிலாக பீர்பால் கூறினார். அந்த பதிலை கேட்டவுடன் பேரரசர் அக்பர் மிகவும் குழப்பமடைந்தார், அதனால் பீர்பால் பின்வருமாறு விரிவாக விளக்கினார். ' மாட்சிமை தாங்கிய பேரரசர் அவர்களே . கண்களால் நீங்கள் பார்க்கும் அனைத்தும் உண்மை. ஆனால் காதுகளால் நீங்கள் கேட்பவைகளில் பெரும்பாலும் பொய்யாக இருக்கும், அதாவது அவைகள் தவறாக கூட இருக்கலாம். அதனால் கண்ணால் காண்பது மட்டுமே உண்மையாகும் ' அதனை தொடர்ந்து இவைகளுக்கு இடையேயான வித்தியாசம் நான்கு விரல்கள் என எவ்வாறு கூறமுடியும் என பேரரசர் அக்பர் வினவினார் அதற்கு பீர்பால் - 'உண்மையை கூறும் நம்முடைய கண்களுக்கும் பெரும்பாலும் பொய்யானவையை கேட்கும் நம்முடைய காதுகளுக்கும் இடையே உள்ள தூரம் நான்கு விரல்களின் அகலமாகும்.' என விளக்கமளித்தார் நம்முடைய கண்களால் காணும் காட்சி மட்டுமே உண்மையாகும் மற்றவையெல்லாம் பொய்யாகும் .என்ற செய்தியை மனதில் கொள்க

கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...