ஞாயிறு, 7 ஜனவரி, 2018

குடும்ப சொத்துகளை பிரச்சினை இல்லாமல் பங்கீடுசெய்வது எவ்வாறு?


. ஒரு கிராமத்தில் வாழ்ந்துவந்த ஒருவர் இறக்கும் தருவாயில் தன்னுடைய மூன்று மகன்களையும் அழைத்து அவர் இறந்தபின்னர் அவருடைய சொத்துகளாக இருந்த 17 வெள்ளாடுகளை எவ்வாறு அவர்களுக்கு பிரித்து கொள்வது என எழுதிய உயிலை ஒப்படைத்து பிள்ளைகளேஇந்த உயிலில் இருக்குமாறு நான் பராமரித்து வருகின்ற வெள்ளாடுகளை பிரித்துகொள்ளுங்கள்எனக்கூறியபின்இறந்துவிட்டார்அவருடைய ஈமக்காரிங்கள்முடிந்தபின்னர் அந்த உயிலை பிரித்து படித்தபோது முதல்மகன் தற்போது தான்வைத்துள்ள 17 வெள்ளாடுகளில்பாதியை எடுத்துக் கொள்ள வேண்டியதுஎன்றும் மூன்றில் ஒருங்கு இரண்டாவதுமகன் எடுத்து கொள்ளவேண்டியது என்றும் மிகுதி இருப்பதை மூன்றாவது மகன் எடுத்தகொள்ளவேண்டியதுஎன்றும் இருந்தது 17 வெள்ளாடுகளை எப்படி பாதியாக பிரிப்பது மூன்றில் ஒருபங்கு எவ்வாறு பிரிப்பது என அவரகளுக்குள் பெரியஅளவு தகராறு ஏற்பட்டதுஅதனால் அந்த கிராமத்தில் இருந்த நீதிமான் ஒருவரிடம் சென்று தங்களுடைய பிரச்சினையை தீர்வுசெய்திடுமாறு கோரினாார்கள் அதனைதொடர்ந்து அந்த நீதிமானும் இம்மூவரின் தந்தையின் உயிலைவாங்கி படித்தபின்னர் தன்னிடம் இருந்த வெள்ளாடுகளில் ஒன்றினைஅம்மூவரின் வெள்ளாடுகளுடன் கொண்டுவந்து சேர்த்து இப்போது எத்தனைஉள்ளது என அம்மூவரிடம் கேட்டார் தற்போது 18 வெள்ளாடுகள் உள்ளன என அம்மூவரும் பதிலிருத்ததும் மொத்தமுள்ள18 வெள்ளாடுகளில் பாதியான 9 வெள்ளாடுகளை பெரியவனுக்கு பிரித்து கொடுத்தார் மொத்தத்தில் மூன்றில் ஒருபங்கான 6 வெள்ளாடுகளை இரண்டாவது நபருக்கு பிரித்து கொடுத்தார் மிகுதிஇருந்த 3 ஆடுகளில் தன்னுடைய ஒரு ஆட்டினை எடுத்துகொண்டு இரண்டு ஆடுகளை மட்டும் மூன்றாவது நபருக்கு கொடுத்தார் இப்போது உங்களுடைய தந்தையார் உயிலில் கூறியவாறு அவருடைய வெள்ளாடுகள் பிரித்து கொடுத்தாயிற்று திருப்தியாகஉள்ளீர்களாஎனவினவினார்

கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...