திங்கள், 29 ஜனவரி, 2018

எந்தவொரு இக்கட்டான சூழலிலும் மிகச்சரியான முடிவெடுத்து செயல்படுத்திவெற்றிகொள்வேண்டும்


நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு ஒரு நகரத்தில், சிறு வியாபாரி ஒருவர் அந்நகரத்தின் அனைவருக்கும் கடன் வழங்கும் பெரியபணக்காரர் ஒருவருக்கு தன்னுடைய வியாபாரத்திற்காக ஒரு பெரிய தொகையை கடன்பட்டிருந்தார். அந்த பணக்காரர் வணிகரீதியாக மிகப்பெரிய ஜாம்பாவானாகவும் பார்ப்பதற்கு அழகற்ற தோற்றமுடைய வராகவும் இருந்தார். இந்த சிறு வியாபாரிக்கு ஒரு அழகான மகள் ஒருவள் இருந்தார் இந்த சிறுவியாபாரியின் மகளை எப்படியாவது திருமனம் செய்து கொள்ளவேண்டும்என அந்த பணக்காரர் திட்டமிட்டார் அதனால் ஒரு நாள் இந்த சிறு வியாபாரியை அழைத்து அவருடைய கடன் முழுவதையும் தான் தள்ளுபடி செய்யக்கூடிய ஒரு ஒப்பந்தத்தை ஏற்படுத்த முடிவு செய்தார். அதாவது அந்த கடனை முழுவதையும் தான் தள்ளுபடிசெய்வதாக இருந்தால் இந்த சிறுவியாபாரியின் மகளை தான் திருமனம் செய்து கொள்ள அனுமதிக்க வேண்டும் என்ற நிபந்தணையைஅந்த பணக்காரர் விதித்தார் இந்த நிபந்தனையை கேள்விபட்டவுடன் அந்த சிறுவியாபாரி இவ்வாறான வாழ்கை தனக்கு வேண்டுமாவென தன்னுடைய வாழ்க்கையையே மிகவும் வெறுத்தார் இருந்தாலும் தான் அந்த பணக்காரரிடம் கடன்பட்டுவிட்டோமே என்னசெய்வது என வேண்டாவெறுப்பாக அந்த பணக்காரருடைய நிபந்தனையை ஏற்பதற்காக வேறு ஏதாவது வழிஇருக்கின்றதா என வேண்டினார் உடன் அந்த பணக்காரர் நேரில் உங்களுடைய மகளை அழைத்து வந்தால் வேறு மாற்று வழியை கூறுவதாக கூறியதை தொடர்ந்து மறுநாள் தன்னுடைய மகளுடன் அந்த பணக்காரரின் வீட்டின்முன் அந்த சிறுவியாபாரி வந்து சேர்ந்தார்

அந்த பணக்காரர் மாற்றுவழியாக தனக்குமுன்பு உள்ள மூடிய பையொன்று வைத்திருப்பதாகவும் அதிலுள்ள கூழாங்கற்களில் ஒன்றினை உங்களுடைய மகள் எடுக்கவேண்டும் அவ்வாறு எடுக்கும் கூழாங்கல்லானது கறுப்பு அல்லது வெள்ளை ஆகிய இரு நிறங்களுள் ஒன்றாக இருக்கும் . அவ்வாறு எடுப்பது கறுப்பாக இருந்தால், அந்த சிறுவியாபாரி வாங்கிய கடன்முழுவதும் தள்ளுபடி செய்யப்பட்டுவிடும் , ஆனால் சிறுவியாபாரியின் மகளானவர் பணக்காரரை திருமணம் செய்து கொள்ளவேண்டும். அதற்கு பதிலாக அந்த சிறு-வியாபாரியின் மகள் எடுப்பது வெள்ளையாக இருந்தால், சிறுவியாபாரியின் கடன் முழுவதும் தள்ளுபடி செய்யப்படும், ஆனால் சிறுவியாபாரியின் மகளை பணக்காரராகிய தனக்கு திருமணம் செய்ய அனுமதிக்கதேவையில்லை என வேறுமாற்று வழியை கூறினார் அந்த பணக்காரானவர். அந்த நகரில் இருந்த மக்கள்அனைவரும் அந்த பணக்காரருக்கு எதிராக யாரும் எதுவும் பேசாமல் இவ்வாறான நிகழ்வினை வேடிக்கை பார்த்து கொண்டிருந்தனர் மேலும் அந்த பணக்காரர் அனைவரும் பார்த்து கொண்டிருக்கும் போதே கீழே தரையில் இருந்த கற்களில் இரண்டும் கறுப்புகளாக எடுத்து அந்த பையிற்குள் போட்டுவிட்டு அந்தசிறுவியாபாரியின் மகளை அழைத்து அந்த பையிற்குள்ளிருந்து கூழாங்கற்களுள் நிபந்தனையின்படி ஒரு கல்லை மட்டும் எடுத்திடுமாறு கோரினார்

இந்நிலையில் இந்த சிறுவியாபாரியினுடைய மகளின்முன் 1.இவ்வாறான மோசடியான நிபந்தனையை ஏற்க முடியாது எனமறுத்தளிப்பது அல்லது 2.இரண்டு கூழாங்கற்களையும் எடுத்து இரண்டும் கறுப்பாக இருக்குமாறு செய்த அந்த பணமுதலையின் மோசடியை அனைவரிடமும் காண்பித்து அம்பலப்படுத்தி தப்பிப்பது அல்லது 3.அது கறுப்பாக இருந்தாலும் அதில் ஒரு கூழாங்கல்லை மட்டும் எடுத்து தன்னுடைய தந்தையின் கடனிற்காக தன்னுடைய வாழ்க்கையை தியாகம் செய்வது ஆகிய மூன்று வழிகள் இருந்தன

அனைவரும் அந்த வியாபாரியினுடைய மகள் எந்தமுடிவை மேற்கொள்ளப் போகின்றார் என மிகவும்பயத்துடன் பார்த்து கொண்டிருந்தனர் இந்த இக்கட்டான நிலையில் அந்த சிறுவியாபாரியினுடைய மகள் மிகவிரைவாக குனிந்து அந்த பையிலிருந்து ஒரு கூழாங்கல்லை அனைவரும் பார்த்திடுமாறு வெளியே எடுத்து தற்செயலாக கைநழுவி விழுமாறு செய்தபின் அடடா கைநிழுவிட்டது சரியாக நான் எடுக்கட்டுமா என அனைவரிடமும் கோரினாள் வேண்டாம் நீ எடுத்திடும் மற்றொரு கூழாங்கல் வெள்ளையாகத்தான் இருக்கும் என அனைவரும் அந்த சிறுவியாபாரியின் மகளை தடுத்தனர் அப்படியாயின் இந்த பணக்காரரிடம் என்னுடைய அப்பா பெற்ற கடன் முழுவதுவும் அவருடைய நிபந்தனையின்படி தள்ளுபடிசெய்யப்படுகின்றதுஅல்லவா என கோரினார் உடன் ஊர் பொதுமக்கள் அனைவரும் ஆம் அந்த பணக்காரரின் நிபந்தனையின்படி சிறுவியாபாரியினுடைய கடன்முழுவதும் தள்ளுபடி செய்யப்படுகின்றது என கோரஸாக கூறினார்கள் அதனால் அந்த பணக்காரரானவர் தன்னுடைய தந்திரத்தை அந்த சிறுவியாபாரியின் மகள் மற்றொரு தந்திர செயல்களால் தப்பித்துவிட்டாரே என வெட்கி தலைகுனிந்ததோடு மட்டுமல்லாமல் அந்த சிறுவியாபாரியினுடைய கடன்முழுவதும் தள்ளுபடி செய்யப்பட்டதாக ஏற்றுகொண்டார்

ஆம் எந்தவொரு இக்கட்டான சூழலிலும் மிகச்சரியான முடிவெடுத்து செயல்படுத்திவெற்றிகொள்வேண்டும்

கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...