மருத்துவமனையின் நுழைவுவாயிலிற்குள் அறுவைசிகிச்சைமருத்துவர் ஒருவர் மிகவேகமாக உள்நுழைந்து கொண்டிருந்தபோது அங்கு தன்னுடைய மகனின் ஆபத்தான நிலையில் அதனை சரிசெய்வதற்கானமருத்துவரின் வருகைக்காக பதட்டத்துடன் குறுக்கும் நெடுக்குமாக நடந்துகொண்டிருந்த தந்தையொருவர் அந்த மருத்தவரின் குறுக்கே வந்துநின்றுகொண்டு "மருத்துவரே! உங்களுடைய கடமையை மருத்துவமனையில் ஆற்றாமல் வேறுஎங்கோசென்றுவிட்டு இப்போதுதான் வேகமாக வந்துசேருகின்றீர்! எங்களுடைய மகன் எவ்வளவு உயிருக்கு ஆபத்தான நிலையில் போராடிகொண்டிருப்பது உங்களுக்கு தெரியுமா! மிகமெதுவாக இவ்வளவு காலதாமதமகா வந்துசேருகின்றீரே! இது சரியா ! உங்களுடைய மகன் இவ்வாறான ஆபத்தான நிலையில் இருந்தால் இவ்வாறு நீங்கள் செய்வீர்களா?" எனகண்டபடி கோபத்துடன் தீட்டஆரம்பித்தார் உடன் அநத அறுவைசிகிச்சை மருத்துவர் "ஐயா ! மன்னிக்கவும்! இந்த செய்தியை கேள்விபட்டவுடன் பறந்தோடி வருகின்றேன் சிறிதுநேரம் அமைதியாயிருங்கள் நான்என்னால் முடிந்தஅளவு உங்களுடைய மகனின் உயிரைகாக்க முயற்சி செய்கின்றேன்" என பதிலிருத்தவாறு தன்னுடைய ஆடைகளை அணிந்துகொண்டு அறுவைசிகிச்சை அரங்கத்திற்குள் செல்லமுயன்றார் "என்ன அமைதியாக இருப்பது ! மற்றவர்களுக்கு அறிவுரை வழங்குவதுமிகஎளிது ஆனால்உண்மையாக அதனை எதிர்கொள்பவர்களுக்கு அன்றோ அதன்வருத்தம் தெரியும்" என கோபத்துடன் முனுமுனுத்தார்அந்த தந்தை நீண்டநேர போராட்டத்திற்கு பின்னர் அந்த அறுவைசிகிச்சை மருத்துவர் வெளியில் வந்து "உங்களுடைய மகனின் உயிர்காப்பாற்றபட்டுவிட்டது மிகுதி செய்தியையும் செயலையயும் செவிலியரிடம் கேட்டு தெரிந்துகொள்ளுங்கள்" என பரபரப்பாக வெளியேறிவிட்டார் அந்த அறுவைசிகிச்சை மருத்துவர். "நான் இங்கு பதட்டத்துடன் இருப்பது தெரிந்தும் எனக்குஆறுதலாக பேசிடாமல் ஓட்டமாக ஓடுகின்றாரேஇந்த அறுவைசிகிச்சை மருத்துவர்" என அவர்கூறிய செய்தியால் அமைதியுற்றாலும் "என்னஒருஅரக்கத்தனம் எங்களுடைய மகனின் தற்போதைய நிலைஎன்னவென கூறாமல் ஓடுகின்றாரேஇந்த மருத்துவர்" என கோபமாக அந்த மருத்துவர் செல்வதை முறைத்து பார்த்து கொண்டிருந்தார் அதனை தொடர்ந்து செவிலியர் கண்ணீருடன் வெளியில் வந்து "ஐயா!அந்த மருத்துவரின் மகன் நேற்று நடந்த ஒருசாலைவிபத்தில் இறந்துவிட்டார் அதனை தொடர்ந்து தற்போது அவருடைய மகனின்இறுதிசடங்குநடத்தபோகும் தறுவாயில் நாங்கள் உங்களுடைய மகனிற்கான அறுவைசிகிச்சையைபற்றிகூறியதும் அதனை அப்படியேபாதியில் விட்டு விட்டு இங்குவந்து உங்களுடைய மகனின் உயிரைகாத்துள்ளார் தொடர்ந்து அவருடைய மகனின் இறுதிசடங்கு நடைபெறுவதற்காக வேகமாக செல்கின்றார் உங்களுக்குமிகுதி தேவையான உதவிகளை நாங்கள் செய்யதயாராக இருக்கின்றோம்" எனக் கூறினார் உண்மைநிலவரத்தை தெரிந்து கொள்ளாமல் நாம் கண்ணால்காண்பதைகொண்டு தவறாக முடிவுசெய்திடகூடாது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக