ஞாயிறு, 17 ஜனவரி, 2010

சர்க்கரை உற்பத்தி சுழற்சி

சர்க்கரை உற்பத்தி சுழற்சி
இந்தியாவில் சர்க்கரை உற்பத்தி மிக முக்கியமான விவசாயம் சார்ந்த தொழிலாக இருந்து வருகிறது. இது நேரடியாகவும் மறைமுகமாகவும் அதிக அளவு வேலை வாய்ப்பை வழங்க கூடிய தொழிலாகவும் இருந்து வருகிறது. உலகின் சர்க்கரை உற்பத்தியில் இந்திய இரண்டாம் இடத்திலிருந்து இப்போது முதலிடத்தை வகிக்கிறது.வியாபாரத்தில் இருக்கும் பொதுவான ஏற்ற இறக்கங்களின் சுழற்சி சர்க்கரை தொழிலிலும் 4 முதல் ஏழாண்டுகளுக்கு ஒரு முறை வருகிறது. 2002-2003 ஆம் ஆண்டுகளில் கரும்பு மகசூல் அதிகமாகி சர்க்கரை உற்பத்தி உயர்ந்தது. அதனால் விற்பனை விலை வீழ்ச்சியடைந்தது. மேலும் கரும்பின் விலை அதிகமாக இருந்ததால் கரும்பிற்கான கிரைய பட்டுவாடா தாமதமானது. இதனால் விவசாயிகள் கரும்பைத்தவிர்த்து மற்ற பயிர்களுக்கு மாறினார்கள். இதன் தொடர்ச்சியாக 2003-2004 ஆண்டுகளில் கரும்பு உற்பத்தி குறைந்தது. சர்க்கரை உற்பத்தியும் குறைந்தது. இதனால் உள்நாட்டில் சர்க்கரை விலை அதிகரித்தது. இதே சமயத்தில் உலக அளவிலும் சர்க்கரை விலை உயர்ந்தது. கரும்பிற்கான தேவை அதிகமானதால் கரும்பின் விலை மீண்டும் உயர்ந்தது. 2004-2005ல் இதே நிலை நீடித்ததாலும் நல்ல மழை பொழிவு இருந்ததாலும் விவசாயிகள் கூடுதலான கரும்பு பயிரிட ஆரம்பித்தனர். அதனால் 2006-2007ல் சர்க்கரை உற்பத்தி அதிகமானது அதனுடைய பாதிப்பால் சர்க்கரை விலை மிகவும் குறைந்து விவசாயிகளுக்கு கரும்பு கிரையத் தொகை பட்டுவாடவிலும் காலதாமதமாகும் நிலை ஏற்படுகிறது. இவ்வாறான வியாபார சுழற்சி 4 முதல் 7 ஆண்டு காலத்திற்கு பதிலாக ஏன் குறுகிய கால அவகாசத்தில் ஏற்படுகிறது. சர்க்கரை அத்தியாவசிய பொருளின் கீழ்வருகறது அதனால் உள் நாட்டில் சர்க்கரை விலை அதிகமானதால் ஜீன் 2006ல் சர்க்கரை ஏற்றுமதியை தடை செய்து விநியோக அளவும் விடுவிப்பு ஆலையும் இந்த நேரத்தில் உயர்த்தப்பட்டது உலக சந்தையில் சர்க்கரைக்கு நல்ல உயர்ந்த விலைக்கு கிடைத்து கொண்டிருந்தது. உலக சந்தைகளில் இந்தியாவின் சர்க்கரை விற்பனையாளரின் பங்கு இல்லாததால் பிரேசில் போன்ற நாடுகள் தம்முடைய சர்க்கரையை நல்ல விலைக்கு விற்று லாபம் கண்டனர்.2005-06ல் நல்ல மழை பொழிவு இருந்தாலும், கரும்பிற்கு நல்ல விலை கிடைத்தாலும் அதிக அளவு கரும்பினை விவசாயிகள் பயிரிட்டனர். அதனால் 2006-07 அரவைப்பருவத்தில் அபரிதமான சர்க்கரை உற்பத்தி ஆகும் என எதிர்பார்க்கப் படுகிறது. மேலும் உள்நாட்டு விநியோகத்திற்காக கடந்த ஆண்டைவிட தற்போது அதிக அளவு சர்க்கரையை விடுவிப்பு செய்வதாலும் சர்க்கரை விலை மிகவும் குறைந்த போனது.இந்த சமயத்தில் சர்க்கரை உற்பத்தியாளர்களின் கோரிக்கையின் அடிப்படையில் சர்க்கரை ஏற்றுமதிக்கான தடையை நீக்கப்பட்டது.இந்த அரவைப்பருவத்தில் உலக அளவில் சர்க்கரை உற்பத்தி அபரிதமான சமயத்தில் அனுமதிக்கப்பட்ட இந்த ஏற்றுமதியினால் சர்க்கரை விலை ரூ.2100-லிருந்து 1500 ஆக வீழ்ச்சியடைந்து உள்ள நிலையில் உள்நாட்டு சர்க்கரை விலை உயர்வதற்கு பதிலாக குவிண்டால் 1800-யிலிருந்து 1400 ஆக குறைந்துவிட்டது.கரும்பிற்கான மத்திய அரசின் குறைந்த விலை 1980-81 ஆம் அளவில் டன்னுக்கு 130 ஆக இருந்தது 2006-07ல் 802.50 ஆக ஆறு மடங்கு உயர்ந்துள்ளது. சர்க்கரை ஆலைகள் உற்பத்தி செலவு என்னவாக இருந்தாலும் பொது விநியோகத்திற்கு கட்டாயம் கொடுக்க வேண்டிய விலை கிலோ ஒன்றுக்கு 3.65 ஆனது. 2006-07ல் 13.50 ஆக நான்கு மடங்குகூட உயரவில்லை. இந்த பொது விநியோக விலை கடந்த நான்கு ஆண்டுகளாக அப்படியே மாற்றப்படாமலும் உள்ளது.இந்த பொது விநியோகத்தில் ஏற்படும் இழப்பை சர்க்கரை உற்பத்தியாளரின் வெளிசந்தையின் விற்பனையில் இருந்துதான் சரி செய்து கொள்ள வேண்டும். ஆனால் அதிலும் விடுவிப்பு ஆனைகள் மூலம் சர்க்கரை விநியோகத்தை கட்டுக்குள் வைத்துக்கொண்டு விலை உயர்வை கட்டுப்படுத்த அதிக விடுவிப்பு செய்வது ஏற்றுமதிக்கு தடை செய்து போன்ற நடவடிக்கைகயினால் சர்க்கரையின் விலை உயராமல் கட்டுப்படுத்தப்படுகிறது. அதனால் சர்க்கரை உற்பத்தியாளர்கள் மாற்றுவழிகளில் தங்களை காத்துக்கொள்ள அவாவுற்று இணை மின் நிலையம் அமைத்தலும், எத்தனால் உற்பத்தி போன்ற வகைகளில் தங்களின் தொழிலை விரிவுபடுத்துகின்றனர். அந்நிய செலாவனியை எப்போதும் மிச்சப்படுத்த கூடிய பெட்ரோலுடன் 5% எத்தனால் கலந்து பயன்படுத்தும் திட்டம் நாடு முழுவதும் முழுமையாக நடைமுறைப்படுத்தபடவில்லை. இதே பெட்ரோலுடன் எத்தனால் கலக்கும் திட்டம் 50% என பிரேசில் போன்ற நாடுகளில் நடைமுறைபடுத்துகின்றனர். இவ்வாறான உப தொழிலை நடைமுறைக்கு கொண்டு வந்தால் மட்டுமே சர்க்கரை தொழிலை காக்க முடியும்.

பதிவுகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற

கருத்துகள் இல்லை: