ஞாயிறு, 9 அக்டோபர், 2011

இந்திய அரசின் குறைதீர் மன்றம்

இந்திய அரசானது இந்திய குடிமக்களாகிய நாமெல்லேரும் பயன்பெறும்பொருட்டு நம்முடைய குறைகளை இணையத்தில் நேரடியாக முறையீடாக பதிவு செய்து தீர்வுபெறுவதற்காக இந்திய அரசின் குறைதீர் மன்றம் என்ற வசதியை உருவாக்கியுள்ளது அதற்கான இணைய முகவரி பின்வருமாறு
http://www.pgportal.gov.in
பின்வரும் பட்டியலில் உள்ள அரசு அலுவலகங்களில் அல்லது அரசுதுறைகளில் நம்முடைய பணியை முடிப்பதற்காக அனுகிடும் போது ஏற்படும் குறைகளை மேலே குறிப்பிட்ட இணைய முக வரிக்கு சென்று நமக்கு ஏற்பட்ட பிரச்சினைகளை பதிவுசெய்து தீர்வுசெய்து கொள்வதற்காக இந்தவசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது
பொதுமக்களாகிய நாம் அனைவரும் இவ்வாறான அரசுதுறைநிறுவனங்களை அனுகும்போதும் நமக்கு ஏற்படும் பிரச்சினைகளை தீர்வுபெறுவதற்கு இந்த வசதியை பயன்படுத்திகொள்ளுமாறு கேட்டுகொள்ளபடுகின்றார்கள்
1) இந்திய இரயில்வேதுறை (Railways )
2) இந்திய தபால் தந்தி துறை(Posts)
3) தொலைபேசிதுறை (Telecom)
4) ஊரகவளரச்சிதுறை (Urban Development) நிலவளத்துறை (Land & Development Office) ,பொதுப்பணித்துறை (Central Public Works Department , etc)
5) பெட்டரோலியம் இயற்கைவாயு நிறுவனம்(Petroleum & Natural Gas)
6) விமானபோக்குவரத்துதுறை (Civil Aviation)
7) கப்பல் சாலை நெடுஞ்சாலை போக்குவரத்துதுறை(Shipping , Road Transport & Highways)
8) சுற்றுலாத்துறை (Tourism)
11) தேசியசிறுசேமிப்பு்ததுறை(National Saving Scheme of Ministry of Finance)
12) ஊழியர்களின் வருங்கால வைப்புநிதிநிறுவனம் (Employees' Provident Fund Organization)
13) கடவுச்சீட்டுவழங்குதுறை(Regional Passport Authorities)
14) மத்தியஅரசின் சுகாதாரத்துறை(Central Government Health Scheme )
15) மத்திய இடைநிலைகல்விவாரியும் (Central Board of Secondary Education)
16) மத்திய தொடக்க கல்விவாரியும் (Kendriya Vidyalaya Sangathan)
17) தேசியதிறந்தநிலைகல்விகழகம்(National Institute of Open Schooling)
18) நவோதயாவித்யாளயா குழு(Navodaya Vidyalaya Samiti )
19) மத்திய பல்களைகழகங்கள்(Central Universities)
20)தொழிலாளர் அரசுகாப்பீட்டுமருத்துவமனைதுறை( ESI Hospitals and Dispensaries directly controlled by ESI Corporation under Ministry of Labour)
எப்போதும் அரசுஇயந்திரம் சரியாக செயல்படவில்லை எனகுறைகூறவதைவிட இதுபோன்ற மக்கள்குறைமன்றத்தை அனுகி தத்தமது குறைகளுக்கு தீர்வுபெற்றுக்கொள்ளுமாறு கேட்டுகொள்ளபடுகின்றார்கள்

பதிவுகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற

கருத்துகள் இல்லை: