வெள்ளி, 7 செப்டம்பர், 2012

எந்தவொரு நிகழ்வு ஏற்பட்டாலும் அதன்மூலம் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ நமக்கும் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது


சுன்டெலி ஒன்று ஒருகிராமத்தில் உள்ள ஒரு குடியானவன் வீட்டில் அதிக தொல்லை கொடுத்துவந்தது அதனால் அக் குடியானவன் இந்த சுன்டெலியை ஒழித்து கட்டவேண்டுமென புதிய எலிப்பொறியை கடையில் வாங்கிவந்து பையிலிருந்து அதனை அவிழ்த்து தன்னுடைய மனைவியிடம் காட்டினார்

முதலில் இதனை கண்ட சுன்டெலியானது “இதுஏதோ புதிய வகையான உணவுப்பொருள் போலும் இன்று இரவு நமக்கு நல்ல வேட்டைதான் “என எண்ணியது ஆனால் அதனை முழுவதுமாக பார்த்தபிறகுதான் “அய்யய்யோ ! இது நம்மை வேட்டையாடுவதற்காக வந்துள்ள எலிப்பொறி ஆயிற்றே” என பயந்து அலறியடித்து கொண்டு “குடியானவன் வீட்டில் புதிய எலிப்பொறி வந்து விட்டது, எச்சரிக்கையாக இருங்கள்!”, “குடியானவன் வீட்டில் புதிய எலிப்பொறி வந்து விட்டது, எச்சரிக்கையாக இருங்கள்!” எனக்கூவிக்கொண்டே ஓட்டம் பிடித்தது

இவ்வாறு இந்த சுன்டெலியானது பயந்து நடுங்கி கூவிக்கொண்டு ஓடுவதை கண்ணுற்ற அக்குடியானவன் வீட்டில் வளர்ந்து வரும் கோழியானது “ஏய்! சுன்டெலியே! அது உன்னை பிடித்து ஒழிப்பதற்காக வந்துள்ள எலிப்பொறி தானே தவிர, எங்கள் இனத்திற்கு அதனால் பாதிப்பெதுவும் ஏற்படாது, அதனால் வாயை மூடிக்கொண்டு தூரப்போ” என அந்த சுண்டெலியை விரட்டியடித்தது

அந்த சுன்டெலி மீண்டும் “குடியானவன் வீட்டில் புதிய எலிப்பொறி வந்து விட்டது, எச்சரிக்கையாக இருங்கள்!”, “குடியானவன் வீட்டில் புதிய எலிப்பொறி வந்து விட்டது, எச்சரிக்கையாக இருங்கள்!” எனக் கூவிக் கொண்டே வேறு இடத்திற்கு சென்றது

அந்த குடியானவன் வீட்டில் வளரந்து வந்த வெள்ளாடு ஆனது “டேய் சுன்டெலியே! அந்த எலிப்பொறியை குடியானவன் வாங்கி வந்துள்ளதால் உனக்கு மட்டும் தான் பாதிப்பு வருமேயொழிய எங்களுடைய இனத்திற்கு பாதிப்பு ஏதுவும் ஏற்படாது ,அதனால் முதலில் இவ்விடத்தை விட்டு நகர்ந்து செல்” என்று விரட்டியடித்தது

இதற்கு மேல் நமக்கு ஆதரவாக யாருமே இல்லையே என்ன செய்வது என பரிதவித்து அந்த சுன்டெலியானது மிக எச்சரிக்கையாக அந்த குடியானவன் வீட்டிற்குள் நுழைந்து வீட்டின் மேல்பகுதியிலுள்ள பரன்மீது ஏறி ஒருமூலையாக சென்றமர்ந்து கொண்டது

அன்று நள்ளிரவில் எலிப்பொறிக்குள் ஏதோ மாட்டிக்கொண்ட சத்தம் கேட்டது உடன் அக்குடியானவனுடைய மனைவியானவள் “எலிப்பொறியில் சுண்டெலி மாட்டிகொண்டது இனி அந்த சுண்டெலியனுடையை தொல்லை ஒழிந்தது” என இருட்டில் இது சுன்டெலியின் வாலாகத்தான இருக்கும் என கைவைத்து பிடிக்க ஆரம்பிக்கும்போது அதில் மாட்டியிருந்த பாம்பானது அக்குடியானவனின் மனைவியை கடித்து விட்டது

உடன் குடியானவன் கடித்தது பாம்பென தெரிந்துகொண்டு உடன் அருகிலுள்ள மருத்துவமனைக்கு அவருடைய மனைவியை அழைத்து சென்றார் அங்கிருந்த மருத்துவர் உடனடியாக தேவையான மருத்துவ உதவியை செய்து “வீட்டிற்கு சென்று கோழியை சூப்பாக செய்து அருந்த செய்தால் பாதிப்பு குறையும்” என அறிவுரைக்கூறினார்

அவ்வாறே அக்குடியானவன் அவருடைய வீட்டில் வளர்ந்துவந்த கோழியை கொன்று சூப்செய்து தன்னுடைய மனைவி அருந்திடுமாறு செய்தார் ஆனாலும் பாதிப்பு குறையவில்லை

அதனை கண்ட அருகிலிருந்த உற்றார் உறவினர் “வெள்ளாட்டு சூப் செய்து கொடுத்தால் குணமாகிவிடும்” என அறிவுறுத்தியதால் அவ்வாறே அவருடைய வீட்டில் வளர்ந்து வந்த வெள்ளாட்டினை கொன்று சூப் செய்து கொடுத்தார்

இவையனைத்தையும் கண்ணுற்ற அந்த சுன்டெலியானது தப்பித்தோம் பிழைத்தோம் என அடுத்தகுடியானவன் வீட்டிற்கு சென்றுவிட்டது

இந்த கதையிலிருந்து நமக்கு தெரியவருவது என்னவென்றால் “எந்தவொரு நிகழ்வு ஏற்பட்டாலும் அதனால் மற்றவர்கள் தானே பாதிப்படைகின்றனர் நமக்கு அதனால் நேரடியாக பாதிப்பெதுவும் ஏற்படாது என அலட்சியமாக இருந்திட வேண்டாம் எந்தவொரு நிகழ்வு ஏற்பட்டாலும் அதன்மூலம் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ நமக்கும் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது அதனால் நாமும் எச்சரிக்கையாக இருந்திடவேண்டியது அவசியமாகும்” என்பதே

கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...