இளைஞன் ஒருவன் ஒரு விவசாயின் வீட்டிற்கு சென்று அவருடைய மகளை தான் திருமணம் செய்துகொள்ள விரும்புவதாக கூறினான் உடன் அந்த விவசாயி ஆனவர்
“நல்லது தம்பி என்னுடைய மாட்டு கொட்டிலில் இருந்து மூன்று காளைமாடுகளை இந்த திறந்த வெளியில் அவிழ்த்து விடுகின்றேன் நீ அவைகளில் ஏதாவதுஒன்றினுடைய வாலைமட்டும் பிடித்தால் நான் கண்டிப்பாக என்னுடைய மகளை உனக்கு திருமணம் செய்ய சம்மதிக்கிறேன்” என கூறினார்
அதற்கு அவ்விளைஞனும் சம்மதம் தெரிவித்தவுடன் மறுநாள் காலையில் அவ்விவசாயினுடைய மாட்டுகொட்டிலில் இருந்து காளை மாடுஒன்றை திறந்து விட்டார்
வெளியேறிய மாடானது நீண்ட கொம்புடனும் உயரமான திமிளுடனும் ராஜநடையாக வந்தது உடன் அவ்விளைஞன் இதனை நம்மால் பிடிக்கமுடியாது நம்முடைய சக்திக்கு அப்பாற்பட்டது அதனால் இதற்கடுத்ததாக வரும் காளையின் வாலை பிடித்துவிடுவோம் எனமுடிவுசெய்து ஓரமாக ஒதுங்கி அந்த காளை செல்வதற்கு வழிவிட்டான்
அதற்கடுத்ததாக அவ்விவசாயினுடைய மாட்டுகொட்டிலில் இருந்து இதற்கு முன் பார்த்தயிராத மிகவலுவான மிகமுரட்டு காளையொன்று சிங்கம் போன்று பாய்ந்து வெளிவந்தது இதனையும் நம்மால் பிடிக்கமுடியாது இதுவும் நம்முடைய சக்திக்கு அப்பாற்பட்டது அதனால் இதற்கடுத்து மூன்றாவதாக வரும் காளையின் வாலை எப்படியாவது பிடித்துவிடுவோம் எனமுடிவுசெய்து ஓரமாக ஒதுங்கி அந்த காளை செல்வதற்கு வழிவிட்டான்
மூன்றாவதாக அவ்விவசாயினுடைய மாட்டுகொட்டிலில் இருந்து இதற்கு முன் பார்த்தயிராத மிகநோஞ்சான்போன்ற காளை வெளியில் வந்தது ஆகா இதற்காகத்தான் இதுவரையிலும் நாம் காத்திருந்தோம் இதனுடைய வாலை மிகஎளிதாக பிடித்து வெற்றிகொள்வோம் என முடிவுசெய்து அந்த நோஞ்சான் காளை தனக்கு அருகில் வரும்வரை காத்திருந்து அருகில் வந்தவுடன் அந்த காளையின் அருகில் சாதாரணமாக சென்று அதனுடைய வாலை பிடிக்கலாம் என முயற்சி செய்தபோது என்ன ஆச்சரியம் அந்த நோஞ்சான் காளைக்கு வாலே இல்லை
அவ்விளைஞன் தன்னுடைய தோல்வியை ஒப்புக்கொண்டு போட்டியிலிருந்து வெளியேறிவிட்டான்
அதாவது நம்முடைய வாழ்க்கையில் எதிர்வரும் எந்தவொரு முதல் வாய்ப்பையும் பின்னர் வருவது இதைவிட நல்லவாய்ப்பாக இருக்கும் என நழுவவிடாமல் அந்தவொரு வாய்ப்பு மட்டுமே நாம் முன்நோக்கி செல்ல கிடைத்த ஒரேவாய்ப்பு வேறு வாய்ப்பே இல்லையென முயற்சி செய்து அதில் வெற்றிபெற பாடுபடவேண்டும் இல்லையெனில் எந்தவொரு வாய்ப்பும் நமக்கு கிடைக்காது போய்விடும் என்பதை மனதில் கொள்க
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக