செவ்வாய், 13 நவம்பர், 2012

நம் ஒவ்வொருவருக்கும் ஒருமதிப்பு, தனித்தன்மை உள்ளது. அதன் மதிப்பு எப்போதும் மாறாது


மேடைபேச்சாளர் ஒருவர் தம்முடைய பேச்சினிடையே ஆயிரம் ரூபாய் தாள் ஒன்றை தம்முடைய பையிலிருந்து கையில் எடுத்துகொண்டு தம்முன் அமர்ந்து தம்முடைய பேச்சினை கேட்டுகொண்டிருக்கும் பார்வையாளர்களை நோக்கி “இது, என்ன?” என கேள்வி எழுப்பினார்

உடன் பார்வையாளர்கள் அனைவரும் ஒரே சமயத்தில் “ஆயிரம் ரூபாய் தாள்!” என கூறினர்

உடன் அந்த ஆயிரம் ரூபாய் தாளை கசக்கி அருகில் தரையில் கிடந்த ஒருசிறுகல்லின் மீது அதனை சுற்றி மீண்டும் பார்வையாளர்களை நோக்கி “இது, என்ன?” என கேள்வி எழுப்பினார்

உடன் பார்வையாளர்கள் அனைவரும் ஒரே சமயத்தில் மீண்டும் “ஆயிரம் ரூபாய் தாள்!” என கூறினர்

அதன்பின் அவ்வாறு சிறு கல்லில் சுற்றபட்ட அந்த தாளை மேலும் நன்கு கசக்கி தரையில் வீசிஎறிந்த பின் மீண்டும் பார்வையாளர்களை நோக்கி “இது, என்ன?” என கேள்வி எழுப்பினார்

உடன் பார்வையாளர்கள் அனைவரும் ஒரே சமயத்தில் மீண்டும் “ஆயிரம் ரூபாய் தாள்!” என கூறினர்

பிறகு “நன்கு கவணியுங்கள் பார்வையாளர்களே! இந்த ஆயிரம் ரூபாய்தாளானது, என்னதான் கசக்கினாலும சுருட்டி வீசிஎறிந்தாலும் அதனுடைய மதிப்பு எப்போதும் மாறவில்லை அல்லவா?

அவ்வாறே நம் ஒவ்வொருவருக்கும் ஒருமதிப்பு, தனித்தன்மை உள்ளது. அது என்னதான் நம்மை கசக்கி பிழிந்தாலும், அடித்து துவைத்தாலும் ,எந்தவொரு துன்பம் அல்லது கஷ்டம் நமக்கு வந்தாலும், நம்முடைய ஒவ்வொருவரின் தனித்தன்மையும் மதிப்பும் மாறாதவையாகும்.

அதனை பேணிக்காத்து நல்வழியில் பயனபடுத்திகொள்வது நம் ஒவ்வொருவரின் அடிப்படை கடமையாகும்” என கூறி தன்னுடைய பேச்சினை முடித்தார்

கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...