வெள்ளி, 30 நவம்பர், 2012

முயன்றால் முடியாதது இல்லை


தவளைகளின் குழுவொன்று தாங்கள் வாழும்இடத்தில் போதுமான உணவு கிடைக்காததால் வேறு இடம்நோக்கி சென்றுகொண்டிருந்தன அவ்வாறு சென்று கொண்டிருக்கும்போது இரண்டு தவளைகள் மட்டும் வழியில் இருந்த மிகஆழமான ஒரு கிணற்றில் தவறிவிழுந்து விட்டன

மற்ற தவளைகள் அனைத்தும் "அவ்வளவுதான உங்களிருவரால் இந்த கிணற்றிலிருந்து மேலேஏறிவரமுடியாது அதனால் இதில் கிடைக்கும் உணவை உண்டு உங்கள் வாழ்நாளைஇதிலேயே முடித்துகொள்ளுங்கள்" என அறிவுரைகூறின

கினற்றிற்குள் விழுந்த தவளைகளுள் ஒன்றுமட்டும் நமக்கு விதித்தது அவ்வளவுதான் என உணவை தேடிபார்த்து கிடைக்காமல் பட்டினியாகவும் மேலே ஏறுவதற்கு முயற்சியின்றியும் சோம்பி அப்படியே உயிர்விட்டது

ஆனால் மற்றொரு தவளையோ கடுமையான முயற்சிசெய்து மேலே ஏறிவருவதற்காக எகிறி எகிறி குதித்து பார்த்தது மேலே தரையில் இருந்த தவளைகள் "ஏன் வீனாக உன்னுடைய உடலை வருத்திகொள்கின்றாய் மற்ற தவளைபோன்று அப்படியே இந்த கிணற்றிற்குள் கிடந்து சாகவேண்டியதுதானே" என ஒரேகூச்சலிட்டன ஆயினும் உயிருடன் கினற்றிற்குள் இருந்த தவளை மடடும் இந்த அறிவுரை எதனையும் கேட்டுகொண்டு சும்மா இல்லாமல் பகீரதபிரயத்தனம் செய்து கடுமையாக முயன்று தாவிகுதித்து ஒருவழியாக கரையேறிவிட்டது

உடன் "நாங்கள் கூச்சலிட்டுது எதுவும் உனக்கு கேட்கவில்லையா?" என அனைத்து தவளைகளும் வினவியபோது

"என்னுடைய கவனம்முழுவதும் எவ்வாறு வேலேஏறிவருவது என்பதில் மட்டுமே குறியாக இருந்ததால் எனக்கு நீங்கள் அனைவரும் கூறிய சொற்கள் எதுவும் சுத்தமாக என்னுடைய காதில் கேட்கவில்லை " என பதில் கூறிதன்னுடைய உணவை தேட சென்றது

ஆம் நம்முடைய குறிக்கோளில் அல்லது செயலில் முழுக்கவனமும் செலுத்தினால் நாம் எளிதில் வெற்றிபெறமுடியும் என இதிலிருந்து தெரிந்து கொள்ளமுடியும்

கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...