ஞாயிறு, 25 நவம்பர், 2012

என்னுடைய வாழ்வில் நடந்த ஒரு நிகழ்வு


நான் சிறுவயதாக இருக்கும்போது ஒருநாள் இரவு சாப்பாட்டில் எங்களுடைய அம்மா தண்ணீர்இல்லாமல் வற்றி சிறிது அடிபிடித்த சோற்றினை எங்களுடைய அப்பாவின் தட்டில் இட்டு சாம்பார் ஊற்றியிபின் “இன்று சோற்றினை சமைக்கும்போது கவனக்குறைவாக அரிசியின் அளவிற்கேற்ப தண்ணீர் ஊற்றிவைக்காமல் சிறிது குறைவாக ஊற்றி வைத்துவிட்டதால் சோறு அடிபிடித்துவிட்டது இன்று ஒருநாள் மட்டும் பொறுத்தருளவேண்டும்” என மிகப்பணிவுடன் கேட்டுக்கொண்டார்

.உடன் எங்களுடைய அப்பா “அடடா அப்படியா ஆகிவிட்டது பரவாயில்லை வறுத்தசோறும் உடலுக்கு நல்லதுதான் நாங்கள் சாப்பிடுகின்றோம் இந்நிகழ்வைபற்றி வருத்தபடாதே கவலையும் படாதே அதற்காக உன்னிடம் சண்டையிட்டேனா உடன் நீயும் சாப்பிட்டுவிட்டு போய் வேறு வீட்டுபணியிருந்தால் அதையும்முடித்து விரைவில் இரவு தூங்க செல்” என அன்புடன் கூறினார்.

அதோடு அல்லாமல் அந்த அடிபிடித்த சோறுமற்றவர்களின் தட்டுகளில் இருக்கின்றதாவென தேடிபிடித்து அவையனைத்தையும் சேகரித்து தன்னுடைய தட்டில் வைத்துகொண்டு மிகஇரசித்து சாப்பிட்டபின் கைகழுவினார்

பின்னர் நாங்கள் அனைவரும் அவரவர் அறைகளில் படுத்து உறங்க சென்றோம் நான் எப்போதும் இரவு சாப்பாடிற்கு பிறகு அப்பாவிற்கு அருகில் தினமும் படுத்துகொண்டு ஏதனுமொரு கதையை கூறும்படி கேட்டு மகிழ்ந்தபின் என்னுடைய படுக்கைக்கு சென்று படுத்துஉறங்குவது வழக்கமாகும்

அவ்வாறே அன்றிரவும் அப்பாவிடம் சென்று கதை கூறும் படி கேட்பதற்கு பதிலாக “அடிபிடித்து சோறுகருகியதற்காக அம்மாவை திட்டாமல் எவ்வாறு அடிபிடித்து கருகிய சோறு அனைத்தையும் சேகரித்து மிகஇரசித்து உங்களால் சாப்பிடமுடிந்தது” என ஆற்றுபடுத்தமுடியாமல் கேட்டபோது எங்களுடைய அப்பாவானவர் “ஏன் இன்று நல்ல கதை வேண்டாமா “என கேட்டார் “கதையெல்லாம் நாளை கேட்டுகொள்கின்றேன்

இன்று எவ்வாறு உங்களால் இவ்வாறு நடக்கமுடிந்தது என முதலில் தெரியவேண்டும்” என நான் அடம்படித்ததால். “அடடா அதெல்லாம் பெரியவர்களின் பணியாயிற்றே இருந்தாலும் உனக்கு கூறுகின்றேன்

நல்லது ,உங்களுடைய அம்மா பகல்முழுவதும் நமக்காக மாடாக உழைக்கின்றாள் அவ்வாறு உழைத்து சோர்வுற்ற நிலையில் இரவு உணவு தயார்செய்யும் போது தவறுதலாக அரிசிக்கு தேவையானஅளவைவிட சிறிது குறைவாக தண்ணீர் இட்டு சோற்றினை சமையல் செய்ததால் கொஞ்சமாக தீய்ந்து விட்டது அதனால் மிகுதி சோற்றுக்கு பாதிப்பெதுவுமில்லையே

உனக்கு தெரியுமா நம்முடைய வாழ்வில் எப்போதும் நம்மால் மிகச்சரியாக நடந்துகொள்ளமுடியாது ஏதேனுமொரு சந்தர்பத்தில் ஏதாவதொரு சிறியதவறு நம்முடைய செயலில் நடைபெற ஏராளமான வாய்ப்புள்ளன

அந்நிலையில் செய்த நல்லசெயலையெல்லாம் விடுத்து அவ்வாறான சிறிய தவறை மட்டும் பெரியதாக்கி வாழ்க்கையையே சண்டை சச்சரவு என போராட்டகளமாக மாற்றக்கூடாது

மேலும் இந்த புவியில் நம்முடைய இருப்போ மிகமிகச்சிறிய காலஅளவே அதனால் நாம் இருக்கும்வரை மற்றவர்களுக்கு அதிகம் தொந்தரவு ஏதும் தராமலும் மற்றவர்கள் ஏதேனும் ஒருசில தவறுசெய்தால் அதனை திருத்தி செய்வதற்கு வாய்ப்பளித்து வாழ்க்கையை இனிமையான அனுபவமாக கொண்டு செல்லவேண்டும

இவ்வாறு நாம் நடந்து கொண்டால் நம்முடைய வாழ்வு அமைதியாக தெளிந்த ஆற்றின் நீரோட்டம் போன்று செல்லும் நம்முடைய வாழ்வில் நல்லது, கெட்டது எது நடந்தாலும் அதனை அப்படியே நமக்கு கிடைத்ததை நம்முடைய அடுத்த வெற்றிக்கு அடித்தளமாகவும் படிக்கட்டாகவும் படிப்பினையாகவும் பயன்படுத்தி நம்முடைய வாழ்வின் அடுத்த கட்ட செயலிற்கு செல்வதற்கு தயாராக வேண்டும்

இதனால் கணவன் மனைவி உறவு மட்டுமல்லாமல் பெற்றோர்கள் பிள்ளைகளின் உறவும் , நண்பர்களின் உறவும் பல்கிபெருகி நம்முடைய வாழ்வு வளம் பெறும் போய் உன்னுடைய படுக்கையில் படுத்து அமைதியாக உறங்கு” என அறிவுரை கூறினார்.

கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...