ஞாயிறு, 18 நவம்பர், 2012

எந்தவொரு செயலையும் அமைதியாக கூர்ந்து கவனித்தால் நம்மால் அதில் வெற்றிகொள்ளமுடியும் வீண் ஆரவாரமும் அவசரமும் வெற்றிகொள்ள தடைகற்களாகும்


விவசாயி ஒருவர் தன்னுடைய கையில் கட்டியிருந்த கைகடிகாரத்தை அவருடைய தானிய கிடங்கில் தவறவிட்டுவிட்டார் அதனை மிகமுக்கியமான நபரின் நினைவாக அவருடைய கையில் கட்டியிருந்தார் அதனால் அதனை எப்படியாவது தேடிக்கண்டுபிடித்திட வேண்டுமென விரும்பி ,”அதனை தேடிகண்டுபிடித்து கொடுப்பவர்களுக்கு தக்க பரிசு அளிக்கப்படும்” என அறிவித்தார்

உடன் ஏராளமான நபர்கள் அவருடைய தானிய கிடங்கிற்குள் புகுந்து குறுக்கும் நெடுக்குமாக அலைந்து தேடினார்கள் அந்த கைக்கடிகாரம் மட்டும் யாருக்கும் கிடைக்கவேயில்லை அனைவரும் சோர்வுற்று வெறுங்கையுடனே திரும்பி சென்றனர்

ஒரு சிறுவன் “தான் அந்த தேடுதலை செய்யட்டுமா “என அவரிடம் அனுமதி கேட்டான் “அதற்கென்ன தாராளமாக தேடிகண்டுபிடித்து கொடு” என அவனுக்கு அனுமதிஅளித்தார்

அச்சிறுவன் அவருடைய தானிய கிடங்கிற்குள் சென்று ஒருசில நிமிடங்களுக்குள் வெற்றிகரமாக அவருடைய தொலைந்துபோன கைக்கடிகாரத்தை எடுத்துவந்து அவரிடம் கொடுத்தான்

“என்ன ஆச்சரியம்! தம்பி! இவ்வளவு நபர்கள் என்னுடைய தானிய கிடங்கு முழுவதையும் தேடிகிடைக்காததை ஒருசில நிமிடங்களில் உன்னால் எவ்வாறு தேடிக்கண்டுபிடித்து எடுத்துவரமுடிந்தது?” என வினவியபோது “அதுஒன்றும் பெரிய சிக்கலான தீர்வு இல்லை ஐயா மற்றவர்கள் ஆரவாரத்தோடு தேடியபோது நான் அமைதியாக இருந்து கவணித்தேன் அப்போது கைக்கடிகாரம் இயங்கிடும் ஒலி என்னுடைய காதிற்கு மட்டும் கேட்டது அந்த ஒலி வந்த திசையில் சென்று எடுத்துவந்தேன்” என்று கூறினான்

அதாவது எந்தவொரு செயலையும் அமைதியாக கூர்ந்து கவணித்தால் நம்மால் அதில் வெற்றிகொள்ளமுடியும் வீண் ஆரவாரமும் அவசரமும் வெற்றிகொள்ள தடைகற்களாகும் என்பதே இதிலிருந்த நாம் அறிந்து கொள்ளவேண்டிய உண்மையாகும்

கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...