திங்கள், 10 செப்டம்பர், 2012

பணியாளர்களின் உற்பத்தி திறனை மேம்படுத்துதல்


மடிக்கணினிகளின் திரையில் கீழ்பகுதியில் உள்ள பட்டியின் வலதுபுறம் சிறு உருவபொத்தான் ஒன்று அம்மடிக்கணினிக்கான மின்கலனின் மின் திறன் அளவை குறிப்பிட்டு பிரதிபலிக்கும் அதில் அம்மின்கலனுடைய மின் திறன் அளவு 25% வரை வெண்மையாக இருந்த உருவபொத்தானின் வண்ணமானது 25% ஐ விட குறையும்போது ஆரஞ்சு வண்ணமாக மாறிவிடும், மேலும் 10% ஆக குறையும் போது சிவப்பு வண்ணமாக மாறி இன்னும் 10 நிமிடம் மட்டுமே மின்கலனில் இருக்கும் மின்திறன் போதுமானதாக இருக்கும் என நம்மை எச்சரிக்கும் உடன் அம்மின்கலனிற்கான மின்வழங்கிடும் இணைப்பை ஏற்படுத்திடவில்லையெனில் மடிக்கணினியின் இயக்கம் தானாகவே நின்றுவிடும்

அவ்வாறே ஒவ்வொரு நிறுவனத்தின் மேலாளரும் தம்கீழ்பணிபுரியும் பணியாளர்களின் திறனை மேம்படுத்துவதற்கு தக்கநடவடிக்கையை மேற்கொண்டு செயற்படுத்தினால் மட்டுமே அப்பணியாளர்களிடமிருந்து எதிர்பார்க்கும் பணித்திறன் தொடர்ந்து வெளிப்படும் அதனை தொடர்ந்து அந்நிறுவனத்தின் செயல்திறனும் மேம்படும். அதனால் ஒவ்வொரு மேலாளரும் தம்கீழ்பணிபுரியும் பணியாளர்களின் திறனை மேம்படுத்துவதற்கு பின்வரும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பரிந்துரைக்கபடுகின்றது

1. ஒருநிறுவனம் வெற்றிபெறுவதற்கு பணியாளர்களுக்கு போதுமான பயிற்சியை அவ்வப்போது அளித்தல் என்பது மிக முக்கியமான அடிப்படை நடவடிக்கையாகும் நீண்டகாலம் பணிபுரியும் தொழிலாளர்கள் அந்நிறுவனத்தின் பணியில் சேர்ந்தபேது அவர்களுக்கு இருக்கும் தகுதிகளை தற்போதைய நிலைக்கு ஏற்றவாறு மேம்படுத்திடவேண்டியது அவசியமாகும் அதனால் வகுப்பறை பயிற்சியாகவோ நேரடிபயிற்சியாகவோ இணையத்தின்மூலமான பயிற்சியாகவோ அவ்வப்போது அவர்களுக்கு அளித்து பணியாளர்களின் திறனை புத்தாக்கம் செய்துகொள்வது நல்லது

2 ஒரு மேலாளர் தம்கீழ் பணிபுரியும் தொழிலாளர்கள் அனைவரும் ஏதாவது ஒரு தொழில்நுட்ப சம்மேளனங்களில் உறுப்பினராக சேரும்படியான சூழலை ஏற்படுத்தி அதற்கு ஆண்டு சந்தாவை தம்முடைய நிறுவனமே செலுத்திடுமாறு செய்திடும்போது அந்த தொழிலாளர்கள் திருப்தியுற்று தம்முடைய தொழில்நுட்ப சம்மேளனங்களின் மூலம் தமக்கு கிடைக்கும் புதிய புதிய தொழில்நுட்பங்களையும் ஆலோசனைகளையும் தம்முடைய நிறுவனத்தில் செயல்படுத்திடும் நிலைஏற்படும் அதன்மூலம் அந்நிறுவனத்தின் வளர்ச்சி உறுதியாக இருக்கும்

3. பணியாளர்கள் அனைவரையும் ஒருங்கிணையச்செய்து செய்து கல்விசுற்றுலா செல்லுமாறு செய்தல், விளையாட்டு போட்டி நடத்துதல், நாடகம்,பாட்டுபோட்டி, பேச்சுபோட்டி நடத்துதல் என்பன போன்ற நடவடிக்கைகளை ஒரு நிறுவனத்தில் செயற்படுத்திடவேண்டும் மேலும் இந்த நிகழ்வுகளில் பணியாளர்கள் மட்டுமல்லாது அவர்களின் குடும்ப உறுப்பினர்களையும் கலந்து கொள்ளுமாறு செய்தல் மறைமுகமாக அந்நிறுவனத்தின் உற்பத்தி திறனை மேம்படுத்துவதற்கான வழிமுறையாகும்

4. பணியாளர்கள் அனைவருக்கும் அவரவர்கள் அடையவேண்டிய இலக்கை குறிப்பிட்டு செயல்படுமாறு அதற்கான சூழலை அவர்களுக்கு ஏற்படுத்தி கொடுத்தபின் அவர்களுள் அந்த இலக்கை அடைபவர்களுக்கு மட்டும் அவர்களின் செயலை அங்கீகரித்து ஊக்குவிக்கும் பொருட்டு அவர்களுக்கு உற்பத்தி சார்ந்த போனஸ் வழங்குவது போன்ற நடவடிக்கைகள் மற்ற பணியாளர்களும் அவ்வாறு செயற்படுவதற்கான தூண்டுதல் ஏற்பட்டு அந்நிறுவனத்தின் உற்பத்தி திறன் மேம்படுத்துவதற்கான சூழல் ஏற்படுகின்றது

5.தற்போதைய புதிய தொழில்நுட்பம் ,புதிய கண்டுபிடிப்புகள் ஆகியவற்றை சார்ந்த புத்தாக்க வகுப்புகளை வாரம் ஒருமுறை அல்லது மாதம் ஒருமுறை பணியாளர்களுக்கு நடத்துவது, பணியாளர்களுள் சிறந்த புத்தாக்கம் நிறைந்த பணியாளர்களை இந்த வகுப்புகளில் தம்முடைய கருத்துகளை மற்ற பணியாளர்களுடன் பகிர்ந்து கொள்ளுமாறான வாய்ப்பை உருவாக்குதல் போன்ற நடவடிக்கையின்மூலம் ஒருநிறுவனத்தின் உற்பத்தி திறனை மேம்படுத்தமுடியும்

கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...